Thursday, July 14, 2022

தொழில் வளர்ச்சி பெறுமா மதுரை?

 மதுரையை இரண்டாவது தலைநகராக்க வலியுறுத்தி, இப்பகுதிக்கு வாசகர் ஒருவர் எழுதியிருந்த கடிதம், சில நாட்களுக்கு முன் வெளியானது. தொன்மை, ஆன்மிகம், அரசியல், சினிமா என, பல்வேறு வகையிலும் வரலாற்று சிறப்புமிக்க மதுரை மாநகரம், போக்குவரத்து வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சி இல்லாமல், பல ஆண்டுகளாக பெரிய கிராமம் போலவே இருந்து வருகிறது. மதுரை வளர்ச்சி பெறாததற்கு, இரு திராவிட கட்சிகளே காரணம்.

தி.மு.க.,வுக்கு முன், ௧௦ ஆண்டுகளாக அ.தி.மு.க., தான் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் செல்லுார் ராஜு. மதுரை மண்ணின் மைந்தரான இவர், சமீபத்தில் தன் கட்சியினருடன் கூட்டமாகச் சென்று, மதுரை மாநகராட்சி கமிஷனரிடம், நகரின் வளர்ச்சி தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
பின் செய்தியாளரிடம் பேசிய அவர், 'மதுரையின் வளர்ச்சிக்காக கோரிக்கை மனு அளித்துள்ளோம். தி.மு.க., அரசு பதவியேற்று ஒரு ஆண்டாகியும், கலைஞர் நுாலகம் ஒன்றைத் தவிர, மதுரைக்கென எதுவும் செய்யவில்லை' என்று கூறினார்.
மதுரைவாசிகளின் மனதில் நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உள்ளது... அது என்னவெனில், சென்னையை மட்டுமே தமிழகமாக நினைத்து அனைத்து வளர்ச்சி பணிகளும் அங்கேயே நடக்கின்றன.இரு திராவிட கட்சி பிரமுகர்களின் தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலே இருப்பதால், மதுரை போன்ற மற்ற நகரங்களின் வளர்ச்சிக்கு மறைமுகமாக முட்டுக் கட்டை போடுகின்றனரோ என்றும் மக்களுக்கு எண்ணத் தோன்றுகிறது.
எது எப்படியோ, இனியாவது முதல்வர் ஸ்டாலின், மதுரையில் தொழில்கள் வளர்ச்சி அடையவும், வேலைவாய்ப்புகள் பெருகவும் வழிவகுக்க வேண்டும். மதுரை மாநகர மக்களுக்கு நல்லதொரு விடியலை ஏற்படுத்த வேண்டும். இதுவே, வேலையில்லா இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் மிகத் தாழ்மையான வேண்டுகோள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...