தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் மயம்..
இது தான் திராவிட மாடலா..
என நம்மவர்கள் எல்லாம் சில நாட்களாக கேட்கிறார்கள்..
தனியார் மயத்தின் ஜென்ம விரோதி கம்யூனிஸ்ட் எல்லாம் எங்கே..
இந்த ஒரு கேள்விக்கு எனது ஆதரவு உண்டு.. கம்யூனிஸ்ட் கட்சி பதில் சொல்ல வேண்டும்..
ஆனால்..
அரசின் திட்டம் என்ன என பார்த்து பின் எதிர்ப்பதையும் ஆதரிப்பதையும் பற்றி உண்மையான நடுநிலையுடன் நாம் முடிவுக்கு வரலாம்..
இந்த திட்டத்தின் படி வழித்தடம் மொத்தமும் தனியாருக்கு தாரை வார்த்திடுகிறார்களா.. ?
இல்லை..!
அரசு பஸ்களையும் பணிமனைகளையும் கட்டமைப்பையும் தனியாருக்கு விற்பனை அல்லது குத்தகையாக தருகிறார்களா..?
இல்லை..!
அந்த வழித்தடத்து வசூல், கட்டணம், வருமானம் எல்லாம் தனியாருக்கு போய்விடுமா..?
இல்லை..!
தனியார்கள் கட்டண நிர்ணயம் அல்லது வழித்தட உரிமை என தன்னிச்சையாக ஏதும் செய்திட முடியுமா..?
இல்லை..!
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் இம்முறை உள்ளதா??
இல்லை ஆந்திரா தெலங்கானா.. போல பல மாநிலங்களில் உள்ளது தான்..
ஏன் பல பத்தாண்டு காலமுன்னர் தில்லி போக்குவரத்தில் உண்டு..
நானே கண்டு அறிந்த உண்மை தான்..
எது தான் உண்மை?
அரசுக்கு தனக்கு இருக்கும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் நடத்த வேண்டியது அவசியம்..
அதே நேரத்தில் அரசின் செயல்பாட்டாலும் நிதி மேம்பாட்டு இயலாமையாலும் அந்தந்த வழித்தடத்தில் லாபகரமாக நடத்த இயலாமை உள்ளது.
அதே தடத்தில் தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடுவதை நாம் அறிவோம்..
ஆனால் அரசு கழக பேருந்துகள் பெருத்த நஷ்டத்தை தான் கணக்காக கொடுக்கும்..
இந்நிலை அரசு செயல்பாட்டின் மேலாண்மையின் குறைபாட்டின் அப்பட்டமான ஆதாரம் என சொல்லலாம்
இதனால் எழுந்தது இன்னொரு வழி உபாயம்
ஒரு தடத்தில் அரசு ஓட்டுவதால் நஷ்டம் ஆகிறது.. பராமரிப்பு செலவு ஆகிறது.. டிரைவர் டீசல் என செலவுகள் தவிர்க்க முடியாதவைகள் ..
இதனால்.. அரசு தனியார் பேருந்து காரரிடம் அந்த வழித்தடத்தை ஓட்ட மட்டும் அனுமதிக்கிறது..
அதில் வண்டி டிரைவர் டீசல் செலவு பராமரிப்பு செலவு எல்லாம் தனியார் தரப்பு ஏற்க வேண்டும்..
அதற்கு அரசு கிலோமீட்டருக்கு இவ்வளவு என கொடுத்துவிடும்.. அல்லது ரூட்டுக்கு டிரிப்புக்கு இவ்வளவு என ஒப்பந்த அடிப்படையில் கொடுத்துவிடும்..
தனியார் அந்த டிரைவர் சம்பளம் வண்டி பராமரிப்பு டீசலுக்கு அந்த தொகைக்குள் பார்த்து தனக்கும் லாபம் பார்த்து கொள்ள வேண்டும்..
அரசின் போக்குவரத்து கழக நடத்துனர் தான் அதில் இருப்பார்..
அரசு போ கழக டிக்கெட் தான் அவர் தருவார்..
அந்த வழித்தடத்து வருமானம் அரசு போக்குவரத்து கழகத்திடம் தான் போகும்..
எனவே அரசிடம் வழித்தட செலவு கணக்கு ஒரு கட்டுக்குள் நிர்ணயித்த அளவில் நிற்கும்..
பேருந்துகள் வாங்க முதலீடு தேவை இல்லை..
போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் சம்பளம் அதிகம். அதுபோக போனஸ் வேறு.. அதுக்கு போராட்டம் வேறு..
தனியார் ஓட்டும் போது அதெல்லாம் இருக்காது.. அது தனியார் பார்த்துக் கொள்வார்..
இப்படியாக அரசு போக்குவரத்து கழகம் முதலீடு இல்லாமல் பேருந்தை பெற்று.. நடத்துனர், மற்றும் இன்னபிற செலவுகள் குறைக்கவும் வழிவகை செய்வதால் அதிக வழித்தடத்தில் கவனம் செலுத்தலாம்..
நஷ்டம் குறையும்..
மக்களுக்கும் போக்குவரத்து சேவை தொடர்ந்து கிடைக்கும்..
லாபமாக ஓடுமா.. ஊழல் இல்லாமல் போகுமா என கேட்டால் அதுக்கு நம்மால் உத்திரவாதம் இந்த திமுக அரசை நம்பி தர இயலாது
ஆனால் இந்த சிஸ்டம் சரியா என்றால் சரியே என சொல்லலாம்
இப்ப நீங்க என்ன சொல்றீங்க??
No comments:
Post a Comment