Sunday, July 10, 2022

கசப்பு மருந்து அவசியமே!

 கடந்த ஆண்டு, 710 ரூபாயாக இருந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை, இந்த ஆண்டு, 358 ரூபாய் உயர்த்தப் பட்டு, 1,068 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 14 மாதங்களில், 12 முறை காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


சமையல் காஸ் சிலிண்டர் விலை, 2,000 ரூபாயாக உயர்ந்தாலும், அதை மக்கள் வாங்கியே ஆக வேண்டும்; வேறு வழியே இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு மக்கள் இப்போது வந்து விட்டனர்.அண்டை நாடான இலங்கையில், பெட் ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை எல்லாம், மக்கள் வாங்க முடியாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட சாப்பாட்டுக்கே வழி தெரியாமல், மக்கள் அல்லாடுகின்றனர் பாவம்...


அந்த நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியை பார்க்கும் போது, நம் நாடு பரவாயில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்த, 2014க்கு முன், 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய காங்கிரஸ் அரசு, மக்களுக்கு மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் ஏராளமான கடன்களை வாங்கியது. அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த பத்திரங்கள் வெளியிடப்பட்டன. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வெளியிடப்பட்ட கடன் பத்திரங்கள் எல்லாம், இன்று முதிர்வுக்கு வந்து, அவற்றுக்கு பணம் கட்ட வேண்டிய இக்கட்டான நிலைமை மத்திய அரசுக்கு உருவாகி உள்ளது.


முந்தைய காங்கிரஸ் அரசு போல, தற்போதைய மோடி அரசும் செயல்பட்டால், இலங்கையை போன்ற மோசமான நிலைமையை இந்தியாவில் உள்ள மக்களும் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். அதை தவிர்த்திருப்பதால், மோடி அரசுக்கு மக்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு; எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரை இன்பம் நாடு' என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைத்து ஆறுதல் அடைய வேண்டும்.


உடல் நலம் குன்றியவர்கள் நலம் பெற வேண்டும் எனில், கசப்பு மருந்து சாப்பிட வேண்டியது அவசியம். அதுபோல, நாட்டின் எதிர்காலம் கருதி, காஸ் விலை உயர்வு என்ற கசப்பு மருந்தை, மக்கள் எதிர்கொள்ள வேண்டியது அவசியமே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...