பரபரப்பான சூழலில் கூட்டப்பட்டுள்ள அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு அவரது வீட்டில் இருந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக தொண்டர்கள் புடைசூழ புறப்பட்டு சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் பலமான வரவேற்பு அளித்தனர். கோர்ட் உத்தரவு சாதகமாக வரும் பட்சத்தில் பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலர் ஆக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோர்ட்டில் தீர்ப்பு என்னமாதிரியாக இருக்கும் என யூகிக்க முடியாத நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு தடல்,புடலாக நடந்து வருகிறது . கூட்ட அரங்கில் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் குவிந்துள்ளனர்.அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசித்து வருகிறார். அவரது வீடு முன்பாக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
No comments:
Post a Comment