Wednesday, July 13, 2022

பொன்னியின் செல்வன் பற்றி எனது கருத்து.

 தமிழின் மிக சிறந்த வரலாற்று நாவல்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்வது சரியாக இருக்காது. நான் படித்த வரலாற்று நாவல் இது ஒன்றே என்பது பொருத்தமாகும்.

நாவலில் கதை தொடங்கும் வீராணம் ஏரி எனது ஊர் என்பதால் அதுவே ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வாசிக்க வைத்தது.
கதையின் வரலாற்று பகுதிகளான
தஞ்சை,குடந்தை, பாழையாரை, கடம்பூர் (காட்டுமன்னார்கோயில் அருகில்), நாகை, கோடியக்கரை, காஞ்சி மற்றும் இலங்கை இதில் இலங்கையை தவிர மற்ற இடங்களில் இடங்கள் அனைத்திலும் சுற்றித்திரிந்தவன் என்ற முறையிலும் வாசிக்கும் பொழுது அந்த ஊர்கள் என் கண்முன்னே வந்து போனது.
நான் முதல் முறை படிக்கும் பொழுது நாயகன் வந்தியத்தேவன் நானே என்னை நினைத்து அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போய் படித்தேன்.
இந்த புத்தகம் படித்த பிறகு தான் தஞ்சாவூர் மற்றும் இலங்கை போய் ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
கதாபாத்திரங்களான
வல்லவராயன் வந்தியதேவன், அருள்மொழி வர்மன், குந்தவை, நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியான், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், செம்பியன் மாதேவி, அநிருத்தர், ரவிதாஸன்,
பழுவேட்டறையர் இன்னும் உள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் நம்முடன் பயணிப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும் .
சில உண்மை நிகழ்வுகளோடு பல புனைவு கதை கதாபாத்திரங்களையும் சேர்த்து கல்கி பிணைத்திருக்கும் இக்காவியம் படித்தவர் அனைவர் மனதிலும் வாழும்.
இக்காவியத்தை நான் அனைவருக்கும் பரிந்துரைப்பேன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதே நேரத்தில் இந்த கதையில் குழப்பங்களும் இல்லாமல் இல்லை.
இதை நான் மூன்று முறை வாசித்துள்ளேன் என்ற முறையில்நான் கேட்க விரும்புவது?
இந்த ஐந்து பாகங்களில், 1000 பக்கங்களில் எதைச்சொல்லவருகிறார் கல்கி..?
சோழர்களின் வாரிசுரிமை போரையா?
சோழ-பாண்டிய பகையையா? வந்தியதேவன் நெடும் பயண அனுபவத்தையா?
இந்த நாவலின் பெண் கதாபாத்திரங்களின் காதலையா..?
என்றால் குழப்பம்தான் மிஞ்சும்..
சுந்தர சோழரின் மூத்த புத்ல்வனும், பட்டத்து இளவரசனுமாகிய ஆதித்த கரிகாலன் தான் காஞ்சியில் கட்டியிருக்கும் பொன்மாளிகைக்கு, தஞ்சையில் நோய் வாய்பட்டு கிடக்கும் சுந்தரசோழரை தங்க வருமாறு தன் நம்பிக்கைகுரியவனும், வாணர் குல் வீரனுமாகிய வந்தியதேவனிடம் ஓலை கொடுத்தனுப்புகிறான். வரும் வழியில் சம்புவராயர் மாளிகையில் சோழ நாட்டில் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் மதுராந்தக சோழ்னுக்கு முடி சூட்ட நடக்கும் சதி பற்றி அறிந்து கொள்கிறான் வந்தியதேவன். ஆதித்த கரிகாலன் கொடுத்த ஓலையை மிகுந்த சிரமங்களுக்கிடையில் சுந்தர சோழ்ரிடம் சேர்க்கிறான் வந்தியதேவன்.சுந்தர சோழரின் மகளான குந்தவை சோழ அரசுரிமை குறித்து சதி நடக்கும் இந்த சூழலில் இலங்கை போரில் ஈடுபட்டுள்ள அருள்மொழி வர்மனை தஞ்சைக்கு வரும்படி தெரிவித்து வந்தியதேவனிடம் ஓலைகொடுக்கிறாள் .ஓலையை கொண்டு போய் சேர்த்து அருள்மொழி வர்மனை அழைத்து வரும்போது அருள்மொழி வர்மனை கைது செய்ய..பழுவேட்டரையர்கள் மரக்கலம் அனுப்புகிறார்கள்...பெரிய பழுவேட்டரையர் மனைவி நந்தினி இதற்கிடையில் சோழ அரண்மனையில் இருந்துகொண்டே சோழர்களுக்கு எதிராக பாண்டியர்களுடன் சேர்ந்து கொண்டு ச்தி செய்கிறாள்.
அருள் மொழி வர்மன், வந்திய தேவன் வரும் மரக்கலம் தீப்பற்றி எரிகிறது. அருள்மொழி வர்மன் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பப்படுகிறது.
அருள்மொழி வர்மனுக்கு விஷக்காய்ச்சல் வந்து நாகை புத்த விகாரையில் வைக்கப்படுகிறான்.பூங்குழலிக்கு அருள்மொழி வர்மன் மீது ஒருதலைக்காதல்.ஊமைராணி அறிமுகம்.ஆதித்த கரிகாலன் கொலை.மதுராந்தக தேவராக இருப்பவர் உண்மையில் மதுராந்தக தேவரல்ல..சேந்தன் அமுதன் உண்மையில் சேந்தன் அமுதனுமல்ல...!!!என்ன குழப்புகிறதா...உண்மையில் இதுதான் பொன்னியின் செல்வன்...ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகள்..படித்தையே திரும்பபடிக்கிறோமோ என நினைக்க வைக்கும் உரையாடல்கள்..சம்பவங்கள்..!!!
கதாபாத்திரங்கள்/சம்பவங்கள் அதைவிட குழப்பம்..நந்தினி யார்? பாண்டியனின் காதலியா? மனைவியா? பாண்டியன் மனைவியானவள் எப்படி சோழ நாட்டின் முக்கியஸ்தரான பெரிய பழுவேட்டரையருக்கு மனைவியானாள் ?திருப்புறம்பியம் பள்ளிப்படையில் முடிசூட்டப்படும் பாண்டிய இளவரசன் யார்? ஆதித்த கரிகாலன் யாரால் கொல்லப்பட்டான்? சோழநாட்டில் உயர் பதவியில் இருக்கும் முக்கியஸ்தரான, பெரிய பழுவேட்ட்ரையர் அப்படி முன் பின் விசாரிக்காமலா ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வருவார்? சோழ நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடப்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் அவருக்கு, தன் வீட்டில் நந்தினி செய்யும் சதிகள் (கடைசிவரை) தெரியாமலா இருக்கும்? இலங்கைப்போர் என்னவாயிற்று?மதுராந்தக தேவனாக தஞ்சையில் நடமாடும் ஒரு பாண்டிய இளவரசனை பற்றி எப்படி ஒருவருக்கும் தெரியாமல் போயிற்று? ஊமை ராணி யார்? சுந்தர சோழர் காதலியா? பாண்டியனின் அரசியா? போன்ற கேள்விகளுக்கு நாவலில் (தெளிவான) பதிலே இல்லை...
சில கேள்விகளுக்கு உங்களின் முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன் என்றும் ஆசிரியர் கல்கி தெரிவித்துள்ளார்.
சுந்தர சோழரின் பாலிய நண்பரும் அவரின் பிரதம அமைச்சருமான அன்பில் பிரம்ம தேயரை குறிப்பிடும் போதெல்லாம் தான் சார்ந்த சமூகம் (பார்ப்பனர்) என்று புலங்காகிதம் அடைந்து எழுதி இருப்பார் ஆசிரியர் கல்கி . அதேசமயம் பாண்டிய ஆபத்து உதவிகளான கொலைகார கும்பல் (பாண்டிய விசுவாசிகள்) சோமன் சாம்பவன், இரவிதாசன், தேவராளனான பரமேஸ்வரன், இடும்பன் காரி, ரேவதாச கிரமவித்தன் போன்ற வர்களை குறிப்பிடும் பொழுது பார்ப்பனர்கள் என்பதை சொல்லவில்லை. இதன் மூலம் அவரின் சாதிப்பற்றும் தெரியவரும்.
என் கருத்து...
"அற்புதம்"...."பாதுகாக்கபடவேண்டிய பொக்கிஷம்".."கல்கியின் பொன்னியின் செல்வன் "மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் காவியம் என்றெல்லாம் புகழப் படும் அதே நேரத்தில் இவ்வளவு குழப்பங்களும் உள்ளன. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...