சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்தார். அதைப் படித்ததும், சிரிப்பதா, வருந்துவதா என்றே தெரியவில்லை.
இவர் இந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார் என்றால், மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். அனைவரும் இணைந்து செயல்பட்டால் தானே, வேலைப்பளு குறையும். ஒவ்வொரு பொது நிகழ்ச்சியில் பேசும் போதும், தானே சுமையை சுமப்பது போல முதல்வர் அங்கலாய்க்கிறார். அவரின் பேச்சை பார்த்தால், தன் மகன் உதயநிதியை, துணை முதல்வராக்க திட்டமிடுகிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது; திராவிட மாடலில் எல்லாம் நடக்கும்.
![]() |
அதற்கேற்ற வகையில் தான், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என, சமீபத்தில் மாவட்ட வாரியாக தி.மு.க.,வினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்! ஒரு மாநில அளவில் முதல்வரே இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்றால், தேசிய அளவில் பல மாநிலங்களை கட்டி ஆளும் பொறுப்பில் உள்ள பிரதமர் எவ்வளவு கஷ்டப்படுவார். அதைப் பற்றி கடுகளவும் எண்ணாமல், அவரை கடுமையாக குறை சொல்கின்றனரே... அது மட்டும், தி.மு.க.,வினரால் எப்படி முடிகிறது?
பிரதமருடன் ஒப்பிடுகையில், ஸ்டாலின் தன் கடுகளவு உழைப்பை, பெரிய மலையை புரட்டுவது போல, பீற்றுவதை பார்க்கும் போது, மகனுக்கு மகுடம் சூட்ட போடும் நாடகம் என்றே தோன்றுகிறது.

No comments:
Post a Comment