''ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை, பொதுக்குழுவால் நீக்க முடியாது,'' என, முன்னாள் அமைச்சரும்,பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க.,வை ஆரம்பித்தபோது இயற்றப்பட்ட சட்ட விதிகளின்படி, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும்.அந்த அடிப்படையில், அடிப்படை தொண்டர்களால், ஒற்றை ஓட்டில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பதவி காலம் ஐந்து ஆண்டுகள். இவர்களை பொதுக்குழு நீக்க முடியாது. பொதுக்குழு தீர்மானம் எதுவும் செல்லாது.
![]() |
தேர்தல் கமிஷனில் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பன்னீர்செல்வம் தான். கட்சியின் நிரந்தர பொதுச்செயலர் ஜெயலலிதா. அவர் இல்லாததால், பொதுச் செயலர் என்ற பதவி கிடையாது. ஜெயலலிதாவுக்கே பழனிசாமி துரோகம் செய்துள்ளார். இவரை முதல்வராக்கிய சசிகலாவுக்கும் துரோகம் செய்தார். இவருக்கு துணையாக இருந்து, நான்கு ஆணடுகள் ஆட்சி செய்ய உதவிய பன்னீர்செல்வத்துக்கும் துரோகம் செய்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment