Tuesday, July 12, 2022

ஸ்டாலின் பொய்யுரைகளை நம்பாதீங்க!

 தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு ஆண்டாக, ஹிந்து மதத்தின் மீது, கோவில்களின் மீது, ஹிந்து மத நம்பிக்கைகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.அத்துடன், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதும் நீடிக்கிறது. இதற்கு, தி.மு.க.,வினரும், முதல்வர் ஸ்டாலினும், ஹிந்து மதத்தை புண்படுத்துவதை வழக்கமாகக் கொண்டோர் என்ற எண்ணமே, முக்கிய காரணம்.ஆனாலும், 'நாங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரா னோர் அல்ல; எல்லா மதங்களும் எங்களுக்கு சமம். மதத்தை பின்பற்றுவது, அவரவர் விருப்பம்; அதில், அரசு தலையிடாது' என்று, முதல்வர் ஸ்டாலின், ஆங்காங்கே பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அதே நேரத்தில், இந்தப் பேச்சின்படி, முதல்வரும், அவரது கட்சியினரும் நடந்து கொள்கின்றனரா என்பது, மில்லியன் டாலர் கேள்வி. நான்கு மாதங்களுக்கு முன், 'யூ டு புரூட்டஸ்' என்ற, யு டியூப் சேனலில், ஹிந்துக்களின் தெய்வமான நடராஜரை பற்றி மிக மிக கேவலமாக சித்தரித்திருந்தனர். இதற்கு எதிராக பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.சிதம்பரத்தில், சிவனடியார்கள் ஒன்று கூடி போராட்டமும் நடத்தினர். ஆனாலும், இதுவரை யு டியூப் சேனல் நடத்துபவர் கைது செய்யப்படவில்லை; அவர் மீது வழக்கும் பதியவில்லை. அதே நேரத்தில், ஹிந்துக்களின் பெண் தெய்வமான காளியை, அருவருப்பாக சித்தரித்து, 'டாக்குமென்டரி' படம் எடுத்த, வெளிநாட்டில் வாழும், லீனா மணிமேகலையை மிரட்டி, யு டியூப்பில் கருத்து பதிவு செய்ததற்காக, கோவையைச் சேர்ந்த, 'சஷ்டி சேனா தலைவர்' சரஸ்வதி கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதில், வேடிக்கை என்னவெனில், சஷ்டி சேனா தலைவர் சரஸ்வதி மீது யாரும் புகார் கொடுக்கவில்லை. யு டியூப்பை பார்த்து விட்டு, காவல் துறை அதிகாரிகள், தாமாகவே அவரை கோவையில் கைது செய்திருக்கின்றனர்.ஆனால், புகார் கொடுத்தும், போராட்டம் நடத்தி யும், ஐந்து மாதங்களாகி யும், நடராஜரை கேவல மாக சித்தரித்தவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வாழும், லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க, அவர் குடியேறி இருக்கும் நாடு விசாரணை செய்து வருகிறது. அவர் தயாரித்த, ஆவண படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இங்கோ நடராஜரை கேவலமாக சித்தரித்தவரை சுதந்திரமாக உலாவ விட்டு உள்ளனர். இதிலிருந்தே, முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது. ஸ்டாலினின் பொய்யுரைகளை நம்பி ஏமாந்தது போதும்... இனியாவது ஏமாறாமல் இருங்க மக்களே!
ஸ்டாலின் பொய்யுரைகளை நம்பாதீங்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...