NTR ஆந்திர முதல்வராக இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி.
ஆந்திராவை சேர்ந்த நரசிம்ம ராவ் பிரதமர். ஆனால் எம்பி ஆக இல்லை.
அப்போது ஆந்திராவில் நந்தியால் தொகுதி இடைத்தேர்தலில், பிரதமர் நரசிம்ம ராவ் வேட்பாளராக நிற்கிறார்.
நரசிம்ம ராவ் எதிர்க் கட்சியாக இருந்த போதிலும், தமது மாநிலத்தவர் பிரதமராகிறார் என்று என்டிஆர் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாமல் ஆதரவு அளித்தார். சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் நரசிம்ம ராவ்.
சும்மா வெற்று கோஷம் எழுப்பாமல், அந்த பெருந்தன்மையும், தமது மாநிலத்தவர் உயர் பொறுப்புக்கு வருவதை சந்தோஷமாக வரவேற்கும் மனமும் பிறவியிலேயே இருக்க வேண்டும்.
புரியவில்லை....
ஜி கே மூப்பனாருக்கு பிரதமர் பதவி வந்த போது அதை தடுத்து மகிழ்ந்தது ஒரு கூட்டம்...
அப்துல் கலாம் ஐயாவிற்கு இரண்டாவது முறை ஜனாதிபதி பதவி வந்த போது அதை தடுத்து மகிழ்ந்தது அதே கூட்டம்...
எப்போதெல்லாம் ஒரு தமிழனுக்கு பெருமை கிட்டுகிறதோ அப்போதெல்லாம் வயிறு எரியும் கூட்டம்...
இப்போதும் அது மாறவில்லை...
இளைய ராஜாவிற்கு நியமன எம்பி பதவி மத்திய அரசு வழங்கி கௌரவித்து இருக்கிறது.
வழக்கம்போல 90% வயிறு எரிச்சல்
ஏன்?
என்னவாக இருக்கும்?
யோசித்தால்
அதுதான் திராவிட மாடல்....
No comments:
Post a Comment