ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று.
சிறுமி கேட்டாள்.....
"BF என்றால் என்ன...?"

அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்....
"நான் உன் BF..." என்று
அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்:

"BF என்றால் என்ன...?"
அவன் பதிலளித்தான்:
"இது பாய் ஃப்ரெண்ட்..."

(Boy friend)
சில வருடங்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள், அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள், கணவர் மீண்டும் புன்னகைத்து தனது மனைவியிடம் கூறினார்:
"நான் உன் BF..." என்று
மனைவி மெதுவாக கணவனிடம் கேட்டாள்:
"BF என்றால் என்ன...?"

கணவர் அழகான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகளைப் பார்த்து பதிலளித்தார்:
"குழந்தையின் அப்பா தான்..."
(Baby's father)

அவர்களுக்கு வயதாகிய போது ஒருநாள் அவர்கள் ஒன்றாக அமர்ந்து முன் சூரிய அஸ்தமனத் தைப் பார்க்கிறார்கள், அவர் தனது மனைவியிடம் கூறுகிறார்:
அன்பே... "நான் உனது BF.." என்று
கிழவி முகத்தில் சுருக்கங்களுடன் சிரித்தாள்:
"BF என்றால் என்ன...?"

முதியவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ஒரு மர்மமான பதிலைக் கூறினார்......
"என்றைக்கும் உன்னுடன்"
(Be forever)



இறக்கும் தருவாயில் மனைவியிடம் மீண்டும் கூறினார்
"நான் உமது BF..." என்று
வயதான மனைவி சோகமான குரலில் கேட்டாள்.......!!
"BF என்றால் என்ன...??"

முதியவர் பதிலளித்தார்....
"மீண்டு வரேன் bye"

(Bye for ever)
கொஞ்ச நாள் கழித்து அந்த மூதாட்டியும் இறந்து போனார். கண்களை மூடுவதற்கு முன், வயதான பெண்மணி முதியவரின் கல்லறையில் கிசுகிசுத்தாள் BF என்று......! 

"என்றும் உம் அருகில்"
(Beside for ever)



வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே வார்த்தையின் அர்த்தம் எப்படி மாறுகிறது...!!
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அல்லவா.....!!



No comments:
Post a Comment