Wednesday, July 5, 2023

இவர் அல்லவா நீதிபதி!

 செந்தில் பாலாஜி போன்ற நேர்மையான, சுத்தமான, ஒழுக்கமான, ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காத , எதிர் கட்சி தலைவர் கூட வாழ்த்தி பேசும் சட்டமன்றத்திலேயே வாழ்த்தி பேசும் அளவுக்கு நேர்மையான, செத்தாலும் கட்சி மாறாத ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்னும் அச்சத்தில் இருந்தோம், நல்ல வேளை கடவுள் போல வந்து இந்த நீதிபதி அவரை காப்பாற்றி ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து விட்டார்!

பைபாஸ் ரோடு அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து 22 நாட்கள் மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் இருந்து எங்கே வீட்டுக்கு போக சொல்லி விடுவாரோ என்னும் அச்சத்தில் இருந்தோம் ஆனால் ஆறு மாதம் ஆனாலும் அவருடைய உடல் நிலை சரியாகவில்லை என்றால் காவிரி மருத்துவமனை விட்டு ஒரு அடி கூட வெளியே எடுத்து வைத்து வைக்க மாட்டார் என்று ஒரு ஆணித்தரமான தீர்ப்பை சொல்லி நீதியை தூக்கி நிறுத்திய அம்பையர் அக்காவுக்கு
வாழ்த்துக்கள்
.
தனது மனைவிடம் சங்கீதா ஹோட்டல் இட்லி வாங்கி வர சொல்லுகிறார் செந்தில் பாலாஜி அதை அவரும் வாங்கி வருகிறார் அதை தின்ண்டு முடித்தவுடன் அவருடைய மனைவி, என்னுடைய கணவனை காணவில்லை அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று ஒரு ஆள்கொணர்வு மனுவை எழுதுகிறார் அதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் எங்கே நீதிபதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் விட்டுவிடுவாரோ என்னும் அச்சத்தில் இருந்தும். அந்த நம்பிக்கையும் நமக்கு வீண் போகவில்லை ஆழ்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார்.
உண்மையிலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் உடைய தம்பி அசோக்கை கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்று காவல்துறையிடம் கேட்டு விடுவார்களோ இன்னும் அச்சத்தில் இருந்தோம். அதையும் நாம் விரும்பக்கூடிய வகையில் கேட்கவில்லை இவர் அல்லவா நீதிபதி!
கிராமப்புற வீதிகளிலும் சாலையோரங்களில் நடந்து ஏழை சாமானியன் ஒருவன் தனக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் நீதி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயமாக நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்னும் ஒரு நம்பிக்கையில் தான் தன்னுடைய வாழ்க்கையை வாழுகிறான் என்னும் நிலையில் இவர் போன்று நேர்மையான நீதிபதிகள் அந்த சாதாரண ஏழை எளிய சாமானியனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அமைகிறார்கள்
இவர் போன்ற நேர்மையான நீதிபதிகள் வாழும் சமகாலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கு மிகவும் பெருமையான விஷயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...