முருங்கை இலை நன்மைகள் பற்றி முன்னமே எழுதி இருக்கேன் வீடியோவும் போட்ருக்கேன் .இப்ப முருங்கை இலை பொடிய எப்படி சாப்பிடனம்னு கேட்ருந்தாங்க சிலர்.
1. 1/2 ஸ்பூன் பொடிய வென்னீர்ல கலந்து குடிக்கலாம் எப்ப வேணாலும்.
2. சாதத்ல கலந்து நெய் சேர்த்து சாப்பிடலாம்.நல்லெண்ணேய் மேச் ஆகாது.நெய் வேணாம்னா செக்கு தேங்காய் எண்ணெய்.
3.சப்பாத்தி மாவுல கலந்தால் க்ரீன் சப்பாத்தி யம்மியா இருக்கும்.
4.பனீர் ப்ரை பண்ணா மிளகாய் தூளுக்கு பதில் மொரிங்கா பொடி தூவலாம்
5. ஆம்லெட் பண்றப்ப மேல தூவி பண்ணலாம்.
6.வேக வைத்த முட்டையில் தூவி சாப்பிடலாம்.
7. மோரில் கலந்து குடிக்கலாம்
ஆனா தினம் ஏதோ ஒரு வகையில முருங்கை பொடி சேத்துகறது நல்ல பல(ம்)ன் தரும் .முக்கியமா இம்யூனிட்டி அதிகமாகும்.
நான் இலைய நிழல்ல காயவச்சு பொடி பண்ணி தரேன். சத்துக்கள் குறையாம ,சுவையும் நலலாருக்கும்.




No comments:
Post a Comment