Sunday, July 9, 2023

சிந்தியுங்கள்.... நீங்கள் சிந்தித்தே ஆக வேண்டும்....

 காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது... முதலமைச்சர் பங்காரப்பா !

தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்றால், அது எனது உயிர் போன பிறகு தான் நடக்கும்.... முதலமைச்சர் வீரப்ப மொய்லி !
காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.... முதலமைச்சர் தேவகவுடா !
உச்சநீதிமன்றமே உத்தரவு போட்டாலும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விட முடியாது... முதலமைச்சர் வி.ஹெச்.பாட்டீல் !
கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்கே இங்கு தண்ணீர் இல்லாத போது ( பொய்) தமிழ்நாட்டில் விவசாய தேவைக்கு நாங்கள் எப்படி தண்ணீர் தர முடியும் ?..... முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா !
சமயபுரம் மாரியம்மன் மனது வைத்து நல்ல மழை பெய்தால் மட்டும் தான் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும்.... முதலமைச்சர் குமாரசாமி !
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்... முதலமைச்சர் சித்தராமையா !
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்... துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் !
இவை -
கடந்த காலங்களிலும் தற்பொழுதும் கர்நாடக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவில் முதலமைச்சர்களாக இருந்தவர்களின் பேச்சுக்கள்...
அவர்களுக்கிடையே, கர்நாடகாவில் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்திருக்கிறது.... பாஜக வை சேர்ந்த நான்கு பேர் முதலமைச்சர்களாக பதவி வகித்திருக்கிறார்கள்....
1. எடியூரப்பா
2. சதானந்த கவுடா
3. ஜெகதீஷ் ஷட்டர்
4. பசவராஜ் பொம்மை
தமிழக மக்களே,
இப்பொழுது சொல்லுங்கள்....
இந்த நான்கு முதலமைச்சர்களில் யாரேனும் ஒருவராவது காங்கிரஸ் முதலமைச்சர்கள் பேசியது போல் தமிழகத்தை வஞ்சிப்பது போல் பேசியிருக்கிறார்களா...?
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று இந்த நான்கு பேரில் ஒருவராவது பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா...?
அது போன்ற மனசாட்சியற்ற மனிதாபிமானமற்ற வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து வந்திருக்கிறதா...?
சொல்லுங்கள்....
நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்....
சிந்தியுங்கள்....
நீங்கள் சிந்தித்தே ஆக வேண்டும்....
தமிழர்களுக்கு நண்பன் யார்...? துரோகி யார்...?
பின் குறிப்பு : *பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த அந்த பத்தாண்டுகள், தமிழ்நாட்டில் யாரும் போராடாமலேயே காவிரி நீர் சீராக வந்து கொண்டிருந்தது....*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...