Saturday, July 8, 2023

பிராமணர் அல்லாத ஒரு ஹிந்துவின் பதிவு ....

 சற்றே நீண்ட பதிவு தான்.. பொறுமையாக வாசித்து விடுங்கள்.*

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை.
நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.
நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில்.. ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு திலகம் & 10 ரூபாய்.
என் அம்மா மூடநம்பிக்கையால்.. அந்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்தார்கள் என்று நம்பிய எனக்கு வெறுப்பாக இருந்தது.
இது போன்ற விஷயங்கள்.. என்னை கோவில்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகள் இருந்து விலக்கி வைத்தது.
பின்னர் நான் வளர்ந்து, நான் விரும்பிய மதசார்பற்ற அரசியலைப் பின்பற்ற ஆரம்பித்தேன். புரட்சி, புடலங்காய் என பல வேப்பிலைகள் எனக்கு அடிக்கப்பட்டன. சேகுவேராவின் படம் போட்ட டி-ஷர்ட்டை, பணியனை அணிந்துகொண்டு சுற்றுமளவு தீவிர முற்போக்கு மற்றும் பகுத்தறிவுவாதியாகி போனேன்.
அன்று ஒருநாள் என்னை இளக வைத்த ஒரு செய்திக் கட்டுரையைப் பார்த்தேன்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரின் அறிவிப்பின்படி, இமாம்களின் சம்பளம் மாதம் ரூ.10,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும்.
அதேசமயம், உதவியாளர்களின் சம்பளம் மாதம் ரூ.9,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும்.டெல்லி வக்ஃப் வாரியத்தின் கீழ் வரும் தேசிய தலைநகரில் உள்ள 185 மசூதிகளுக்கு இந்த முடிவு பொருந்தும். மஸ்ஜித்களில் வசிக்கும் மௌலவிகள், மௌலானாக்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கணிசமான மாதச் சம்பளம் அரசு சார்பாக (மக்கள் வரிப் பணம்) வழங்கப்பட்டதை நான் உணர்ந்தேன்.
கிருத்துவ தேவாலயத்தில்.‌ பங்குத் தந்தைகள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் அவர்கள் எந்தவித கோரிக்கையும் வாய் திறக்கும் முன்பே நிறைவேற்றப் பட்டுவிட்டது. இந்த செயல்பாட்டை எல்லாம் நான் ஒரு நடுநிலையாளனாக வரவேற்றேன்.
பிறகு தான் அந்த உண்மை எனக்கு சுட்டது. இந்துக் கோவில்களுக்கு என்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. உண்மையில் பெரும்பாலான கோவில்களில் பூசாரிகளுக்கு கிட்டத்தட்ட சம்பளம் என்று எதுவும் வழங்கப்படவில்லை.
பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நம்பியே அந்த பூஜை செய்பவர்கள் இருந்தனர். அதை நான் பிச்சை என்று கேலி செய்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரசுகளின் வருமானம் பெரும்பாலும் இந்துக்களுடையது.
மேலும் கோவில் சொத்துக்கள் நிறைய நிறைய உள்ளன. ஆனாலும் இந்துக்களின் கோவில்களை பராமரிப்போர், பூஜை செய்வோருக்கு சம்பளம் மறுக்கப்படுகிறது.
எனது கோவில்களில் இருந்து என்னை விலக்கிய ஒரு மதமாற்றக் கட்டுக்கதையின் மறுபக்கம் பல்லிளித்த தருணம். உண்மையில் பூஜாரிகள் எந்த தவறும் செய்யவில்லை.
அவர்கள் குற்றவாளிகள் அல்ல. ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். எனது தர்மத்திற்கு ஆதாரமான வழிபாட்டுத் தலங்களைப் பராமரிப்பவர்கள். நான் வணங்கும் எனது கடவுள் சிலைகளைத் தூய்மை செய்பவர்கள். இன்று கையேந்தும் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் மேலும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.
நமது வரிப்பணத்தில்.‌ காசு வாங்கும் முல்லா, மௌலானாக்களுக்கு தரப்படும் மரியாதை கூட அல்ல ,, இவர்களுக்கு அவமானம் தரப்பட்டது. "கருவறைக்குள் நீ நுழைய முடியுமா..? என்ற தர்ம சங்கடமான கேள்வி ஒன்றை முன் வைத்து என்னை மடக்கினார்கள். அது எனது வேலை அல்ல என எனக்கு அப்போது தெரியாது.
ஆனாலும் எனது மாமா கோவில் ஒன்றில் கருவறையில் பூஜை செய்கிறார். 'பூஜாரி குடும்பம்' என்பதே ஊரில் அவருக்கு பெயர். ஆனால் அவர் பிராமணர் அல்ல. மெல்ல.. மெல்ல என்னைச் சுற்றி பின்னப்படும் பெரும் சூழ்ச்சி வலை ஒன்றை கண்டு கொண்டேன். அது *பிராமண வெறுப்பு!!*
தெ(ளி/ரி)ந்த பிறகு இந்த மதமாற்ற அரசியலை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன்.
முதலில் என் மனதில் எழுந்த கேள்வி, "ஏன்? இந்த பாகுபாட்டிற்கு என்ன காரணம்?"
நான் மேலும் தோண்டினேன் ..
பதில்..
*அரசியல்.*
ஆளும் கட்சி இந்து மதத்தை வளர்க்கவே விரும்பவில்லை. மாறாக நமது தர்மத்தை அழிக்க செய்த நிறைய முயற்சிகள் ('அதற்காகத்தான்.. அவர்களுக்கு கோடி கோடியாக ஹவாலா பணம் வருகிறது' என்ற தகவலை.. பின்னர் தேடி அறிந்து கொண்டேன்) நம் கண்ணுக்குத் தெரியாமல் திறமையாக மறைக்கப்பட்டது.
அவர்கள் மற்ற மதங்களை ஊக்குவிக்க விரும்பினர். (இந்த பணியும் அவர்களுக்கு கோடியோடியாகப் பணம் வாரி வழங்கும் அன்னிய சக்திகளின் அசைன்மென்ட் தான் என்பதும் புரிந்து கொண்டேன்) இவர்கள் வெளியில் நேர்த்தியாக வேஷம் போடுகிறார்கள். ( இந்த நடிப்பு தான் அவர்களது ஒரே முதலீடு)
இந்து மதத்தை முடக்கிப் போட.. அவர்கள் கண்டுபிடித்ததே.. "மதசார்பற்ற அரசியல்."
என்னைப் போலவே பெரும்பாலான இந்துக்கள் அதில் ஏமாந்து விட்டதை உணர்ந்தேன். அது அவர்களது வெற்றிகரமான செயல்பாடு.
ஏனெனில் ஏமாந்து போன கோடிக்கணக்காணோரில் நானும் ஒருவன்.
"ஏன் அந்த 70 வருடங்களில் ராமர் கோவில் கட்டப்படவில்லை?"
"ஏன் கங்கை தூய்மைப் படுத்தப்படவில்லை?"
"ஏன் காசி கோவிலின் ஆக்கிரமிப்புகள் நீக்கப்படவில்லை?"
"ஏன் சார்தாம் (கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் புனித ஸ்தலங்கள்) யாத்திரையின் பாதைகள் சீரமைக்கப்படவில்லை?"
"ஏன் கைலாய மலைக்கு இந்தியா நிலப்பரப்பினூடே வழிகள் உருவாக்கப்பட வில்லை?"
"ஏன் இந்துக்களின் (பெரும்பான்மையாக இருந்தும் கூட) உணர்வுகள் மதிக்கப்படவேயில்லை?மாறாக தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டார்கள்? "
என்ற.... என் எல்லா கேள்விகளுக்கும் எனக்கு பதில் கிடைத்தது.
‌ உண்மையிலேயே அவர்கள்.. இதில் எதையுமே, என்றுமே செய்ய விரும்பியதில்லை. இந்துக்களின் ஆலயங்களை மேம்படுத்துவது மதசார்பற்ற அரசியலுக்கு எதிரானது என்று எனக்கு கூறப்பட்டது.
ஆனால்..
தெருவெல்லாம் மசூதிகள், சர்ச்சுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அப்படி இருந்தும் அவர்களுக்கு இந்துக்கள் ஓட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தது. அதில் நானும் ஒருவன். இதை சொல்வதில் நான் தற்போது வெட்கப்படவில்லை.
ஏனென்றால்..
இன்று நான் ஏமாறுவதிலிருந்து தப்பித்துக் கொண்டேன்.
சில நாட்கள்.. தேர்தல்களில்.. நோட்டா கூட எனது தெரிவாக இருந்தது. ஆனால் உண்மை என்ன தெரியுமா??
நோட்டா வுக்கு ஓட்டுப் போட்டவர்களும் பெரும்பாலும் என்னைப் போன்ற விரக்தி அடை(யவைக்கப்பட்ட)ந்த இந்துக்களே.
உண்மையில்..
அந்நிய மத ஓட்டுக்கள் துல்லியமாக ஒருங்கிணைக்கப் பட்டு விட்டன. ஒட்டுமொத்தமாக யார்க்கு அவர்கள் ஓட்டு என்பது தீர்மானிக்கப் படுகிறது. ஆனால் இந்துக்கள் ஓட்டுக்கள் நோட்டா, இனவாதம், பகுத்தறிவு, பொதுவுடைமை மற்றும் மொழிவாதம் உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட காரணிகளால் சிதறடிக்கப் படுகின்றன. நான்(நாம்) இதை உணரும் முன் போலி மதசார்பற்ற கட்சி ஆட்சியில் அமர்ந்து.. தனது மதசார்பற்ற செயல்பாடுகளை மீண்டும் செய்ய ஆரம்பித்து விட்டது.
நீங்கள் இதை உணர்ந்து பார்க்கும் தருணம் இருந்திருக்கும்.
தாஜ்மகால்.. ஒரு அற்புதமான 'காதல் சின்னம்' என்று நமக்கு சொல்லப்பட்டது. ஆனால் மும்தாஜ் தொடர்ந்த கருத்தரிப்பால் தனது 14வது குழந்தையை பெற்றதால்.. இறந்தார் உண்மையில் ஷாஜஹானால் கொல்லப்பட்டார் என்று பிறகு தான் தெரிந்தது.
தாஜ் மகாலை இப்போது காதலின் சின்னமாக பார்க்க முடியவில்லை. அது ஒரு கட்டமைக்கப்பட்ட.. திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு.. நிறுவப்பட்ட பொய்.
அது இப்போது.. மறுக்கப்பட்ட பெண்ணுரிமையின் இரக்கத்திற்குரிய சின்னமாக எனக்கு புரிகிறது.
ஆனால் உங்களுக்கு தஷ்ரத் மஞ்சி தெரியுமா?அவரது முயற்சிகள் நம் வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை. தன் 22 வருட கடின உழைப்பால் மலையை வெட்டி சாலை அமைத்தவர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட.. ராஜ ராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயில் தான் ஒரு உலக அதிசயம்.
இது நமது மண்டைக்குள் உட்கார்ந்து கொண்டு வேறு யாரோ செயல்படுவது போன்றது. இது ஒரு சின்ன உதாரணம்.
இந்துக்களின் உணர்வுகள் மதிக்கப் படவில்லை என்பது கூட ஒரு பக்கம்.
மாறாக..
நமது மனம் புண்படுத்தப்பட்டது. 'இராமபிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம்' என்று காங்கிரஸ் கட்சி இந்திய அரசு சார்பாக அஃப்டவிட் தாக்கல் செய்தது.
கோடிக்கணக்கான இந்துக்கள் இருந்தும் அவர்களை காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் இதுவரை மதித்தது இல்லை.
வேதனையின் உச்சமான தருணங்கள் தொடர்ந்தன. 70 வருடங்களில் எதுவும் மாறவில்லை. காங்கிரசுக்கு மாற்று என்று நான் நினைத்த கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மீ, திரிணமூல், ஜகன் காங்கிரஸ், திமுக போன்ற பிற கட்சிகள் இந்துக்களை அவமதிப்பதிலும் பிற மதத்தவரை காபந்து செய்வதில் ஒருபடி மேலே இருந்தன.
கேரளா மற்றும் மே. வங்கத்தில் இந்துக்கள் மீது நடக்கும் கொலைவெறித் தாக்குதல்கள் பற்றிய தரவுகள் காங்கிரசே பரவாயில்லை போன்ற தோற்றத்தை தந்தது.
மீண்டும் மீண்டும் இந்துக்கள் ஏமாந்து போயினர். போலி மதசார்பின்மை.. ஒரு ஆபத்தான மதமாற்ற வலை என்று உணரும் வரை இது தொடரும் என்பதை அறிகிறேன்.
ஆனால்...
இவை எல்லாம் ஒருநாள் மாறி விட்டது!!!
*2014...!!*
நான் அதுவரை இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவானது, மற்ற இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக இந்துக்களை வைத்து மதவாதம் வளர்க்கும் கட்சி என்று நினைத்திருந்த அல்லது எனது மனதில் விதைக்கப்பட்டிருந்த ஒரு கட்சி ஆட்சி அமைத்தது.
அந்த நாளிலிருந்து எல்லாம் மாறி விட்டது. பேசுவதற்கு அஞ்சிய இந்துக்கள் தலை நிமிர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அயோத்தி, காசி, கங்கை, சார்தாம் போன்ற சீரமைப்புகள் இந்துக்கள் யாரும் கோரிக்கை கேட்காமலேயே நடந்தன.
இருந்தும் கூட எங்கும் முஸ்லீம் அல்லது கிறித்தவ விரோதம் வளர்க்கப்படுகிறது என்ற பேச்சே இல்லை.( ஆனாலும் இங்கொன்றும் அங்கொன்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் கட்டமைக்கப்பட்டு கொண்டே இருந்தன.)
நான் நினைத்தது தவறு. இத்தனை நாள் எனது முட்டாள்தனம் நிறைந்த போலி மதச்சார்பின்மையை உணர ஆரம்பித்தேன்.
என்னில் பிற ஊடகங்கள் மூலமாக வளர்த்தெடுக்கப்பட்ட நடுநிலை என்னை இதுநாள் வரை ஏமாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்டது என்பதை உணர்ந்த தருணம்.
எனது கண்களுக்கு முன்னே ஒரு கட்சி.. இந்துக்களின் நலனிற்காக செயல்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க நான் ஒன்றும் 'நடுநிலைக் குருடன்' அல்ல.
பளிச்சிடும் விளக்குகள், சாலைகளுடன் கங்கை வரை நீளும் காசி விஸ்வநாதரின் அந்த வளாகம் எனது மனதைத் திறந்து சொல்லி விட்டது.
இந்த ஆட்சியை ஒரு இந்துவாக நான் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதை. இந்த ஆட்சியின் சார்தாம் யாத்திரை, நமாமி கங்கா போன்ற திட்டங்களை அதன் விபரங்களை பிறகு நான் தேடிப் பார்த்தேன். உண்மை எனக்கு உறைக்க ஆரம்பித்தது.
ஏன் இந்த ஆட்சி மிகமிக தீவிரமாக எதிர்க்கப்படுகிறது.? என்பதை புரிய இப்போது அதிக நேரம் எடுக்கவில்லை.
ஆம். இப்போது எனது மதத்தை வளர்க்க விரும்பும் ஒரு கட்சி மையத்தில் உள்ளது. இதை சொல்லவோ ஆதரிக்கவோ உண்மை புரிந்த இந்நாட்டின் குடிமகனாகிய எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
இந்துக்களாகிய நான்/நாம் இதுவரை இவர்களை ஆதரிக்கவில்லை.
அதனால்தான்.. சோனியா, கெஜ்ரிவால், ஸ்டாலின், ஜெகன், பினாரயி போன்றவர்கள்.. பாதிரிகளின்/மௌல்விகளின் சம்பளத்தை உயர்த்த விரும்புகிறார்கள்.
இந்துக்களாகிய நாம் போலி மதச்சார்பின்மையால் மூழ்கி இருந்தோம். அதனால் தான் கோவில்களின் இந்த தேவையை யாரும் பார்க்கவில்லை.
நம் கண் முன்னே நமது கோவில் சொத்துக்களை அவர்கள் கொள்ளை அடிக்க முடிந்தது.
இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மத அடிப்படையில் வாக்களிக்க முடியாமல் செய்யப்பட்டோம். ஆனால் மறுபக்கம் மற்ற மதஓட்டுக்கள் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
இந்துக்களின் பார்வை மட்டும் மதசார்பற்ற நோக்கு கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இந்துக்களுக்கு தவறான புரிதல்களும், வழிநடத்தல்களும் ஊட்டப்பட்டது. நமது வழிபாடுகள், நடைமுறைகள் திட்டமிட்டு நிறுத்த/தடை செய்யப்பட்டன.
இது ஒரு கூடுதல் செய்தி. ஈரமுள்ள மனதால் படிக்க வேண்டாம்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் படி மனு தாக்கல் செய்யும் போது நரசிம்ம கோபாலன் என்ற கோவில் குருக்களின் மாத சம்பளமாக ரூ. 750, உயர்த்தப்பட்டது.
அதுவரை கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக (காலம் காலமாக) அவர் பெற்றுக் கொண்டிருந்த மாதச் சம்பளம் 250 ரூபாய்.
நீதிமன்றம் வழங்கிய 750/- சம்பளத்தை, "3 மடங்கு சம்பள உயர்வு - இதோ உனக்கு..." என்று கிண்டல் தொனியில் அவருக்கு அந்தப் பணம் வழங்கப் பட்டது.
கோயிலில்.. மேலும் ஆறு முழுநேர சேவை பணியாளர்கள் உள்ளனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெறும் மூன்று இலக்க சம்பளம். 900க்கு அருகில் என்று நினைத்து விட வேண்டாம். 300, 400, 600 என்ற அளவில் தான். திருப்பூந்துருத்தி ஆலய உதவியாளரின் மாதச் சம்பளம் வெறும் 240ரூபாய்.
அதுவும் பல மாதங்களாகத் தரப்பட வில்லை.
பத்தமடை அருகே உள்ள வில்வநாதர் கோவிலில் பூசாரிக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படுகிறது.
பிரம்மதேசத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் புராதனமான கைலாசநாதர் கோவிலில்‌. அர்ச்சகருக்கு மாதம் 19 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
🤦🏻‍♂️
இதெல்லாம் காணும்போது ஒரு இந்து தான் ஒரு ஆலய வழிபாட்டாளாராக கலங்கினால்.. இதற்கு "காரணம்.. நீங்களும், நானும் தான்" என்பதை வலித்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
எனக்கு அதில் தயக்கமில்லை. ஏனெனில் நான் உண்மை தெரிந்து கொண்டேன்.
நிஜத்தில் கோவில் சொத்துக்கள் பல ஆயிரம் கோடிக்கணக்கில். சம்பளம் தாராளமாக தரலாம். ஆனால் இது திட்டமிட்டுக் காரணத்துடன் மறுக்கப் படுகிறது.
இவர்களுக்கு ஆழமான உள்நோக்கம் இருக்கிறது. நமது கோவில்களை அழிய விடப்படவேண்டும்.
நமது கோவில்களில் அர்ச்சகர்களின் நிலை மிகவும் மோசமாக ஆக்கப்பட்டு விட்டது. அவர்களை பிச்சைக்காரர்கள் போல் காட்டியது யார்?
சம்பளம் இல்லாமல் கோவில் நடைமுறைகளுக்கு பணி செய்ய எவரும் முன்வரக் கூடாது. என்ற திட்டமிட்ட சதிச் செயல்பாடுகள்.
ஆனால்..
இது எல்லாம் மாறி விடும் என்று இன்று நான் நம்ப ஆரம்பித்து விட்டேன்.
ஒரு இந்துவாக.. என்னை சாதரணமாக அல்ல, தலை நிமிர்வுடன் என்னை உணர ஆரம்பித்தேன். இந்த முறை ""ஹிந்து வேறு ஹிந்துத்வா வேறு"" என்று ராகுல் காந்தி சொன்ன போது நான் ஏமாறவில்லை.
திருப்பி கேலி செய்தேன் அதை ஒரு 'இந்து வெறுப்பாளன்' சொல்லக்கூடாது என்று உடனே பதிவிட்டேன்.
அந்த தந்திரமான மதசார்பற்ற நிலை மனோநிலை மாறி சுதந்திரமான இந்து ஆதரவாளன் என உணர்ந்தேன்.
போலிகளை, வேஷமிடுபவர்களை என்னால் இப்போது எளிதாக கண்டுபிடித்து விட முடிகிறது.
மம்தா கோவிலுக்கு செல்வதும்,
பிரியங்கா திலகமிடுவதும்,
துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாக ஏறி இறங்குவதும்..
ஜெகன் இந்துவாக மாறியதாக படித்ததையும் என்னால் போலித்தனம் என்று உடனே உணர முடிகிறது.
இப்போது..
*நான் மிகவும் பெருமையுடன் எனது கோயில்களுக்குச் செல்கிறேன்.*
*கோவில்களில் என்னால் முடிந்த அளவு தானம் செய்கிறேன்.*
அந்தணர்களுக்கு.. பிச்சை என்றல்ல.. தாராளமாக காணிக்கை இடுகிறேன்.
நம் தெய்வங்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த.. நம் மரபைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நன்றி செலுத்தும் பங்களிப்பாக இதை நான் கருதுகிறேன்.
இப்போது அவர்கள் உருவத்தை கண்டு கேலி உணர்வு பொங்குவதில்லை. மாறாக அவர்களை காணும் போது மனத்தால் பணிகிறேன்.
நமது தர்மத்தைக் காக்க நினைக்கும் அந்த தியாக உணர்வு.. என்னில் நமது தர்மத்தின் ஊற்றைப் பெருக்கெடுக்க வைக்கிறது.
போலி வரலாறு மற்றும் ஆரிய படையெடுப்பை நம்பிய காலம் மலையேறிவிட்டதை அடுத்த முறை நீங்கள் கோவிலுக்குச் சென்று குருக்கள் அல்லது அர்சகரிடம் பணம் காணிக்கை அளிக்கும் போது.. அவர் பாதிக்கப்பட்டவர் & குற்றவாளி அல்ல என்பது உங்களுக்குத் தெ(பு)ரிய வேண்டும்.
"மலிவான.. மதமாற்ற அரசியலுக்கு அவர் பலியாக்கபட்டார்" என்பதை உணரும் தருணம் அது.
கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதையும், பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு சம்பளம் வழங்கப்படுவதையும் அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
விரைவில்.. இந்த நிலை மாறி நன்மைகள் வந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன்.
எனக்குத் தெரியும். இந்து என்ற எனது உணர்வால் நான் யாரையும் புண்படுத்தவில்லை.
ஆனால்..
இனி என்னை நான் இந்து என்பதற்காக யாரும் புண்படுத்தி விட முடியாது.
இந்து என்ற உணர்வில் எனது தர்மத்தை மதிக்கும், காப்பாற்றும் ஒரு ஆட்சியை தேர்ந்தெடுக்க நான் செயல்படுவேன்.
பிறரால் என்மீது கட்டமைக்கப்பட்ட தயக்கங்களை நான் குப்பையில் தள்ளினேன்.
இந்து என்றால் நடுநிலை அல்ல என்ற பொய்யை அடித்து நொறுக்கினேன்.
என்னைப் போன்ற இந்துக்கள் நடுநிலையாக இருப்பதால் தான் பிற மதங்கள் இன்று இந்த நாட்டில் சுதந்திரமாக இருக்கின்றன.
ஆனால்
இன்று எனது கோவிலை இடித்தால் பொறுத்துக் கொள்வதே நடுநிலைமை என்று எவனாவது சொம்படித்தால் அதை நம்பும் மூடனல்ல!! அதுதான் நிச்சயமாக முட்டாள்தனம்.
மதமாற்ற கட்சிகள் அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் இனி எனது ஆதரவைப் பெறுவதற்கு அவை இனிமேல் என்னை, எனது தர்மத்தை மதிக்க வேண்டும். மதித்தே ஆக வேண்டும். இதில் இனி மாற்றமில்லை.
*ஆம், நான் ஒரு இந்து!இந்துத்வனும் நானே!!*
பொறுமையாக வாசித்ததற்கு நன்றி.
🙏🏻
(10 பேர்களுக்கு பகிர்ந்து.. அவர்கள் உள்ளும் வெளிச்சம் வர காரணமாகுங்கள்.)
🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...