"மகாராஷ்டிர அரசியலில் நடப்பது ஜனநாயகம் அல்ல. அது ஒரு தமாஷ். சட்டம் அதை அனுமதிப்பது போல் தெரிகிறது. அவை அதிகாரத்தின் ரொட்டி துண்டுகளைப் பற்றியது."
'அதிகாரத்தின் ரொட்டி துண்டுகள்'
'அரசியல் அதிகார ரொட்டி துண்டினை' ருசிப்பதற்காக தானே 1998 ல் காங்கிரஸ் உங்களை ராஜ்யசபா நியமன எம்பி யாக முன்னிறுத்திய போது ஏற்றுக் கொண்டீர்கள்.
தொடர்ந்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மற்றும் சட்டதுறை அமைச்சர் என
பல ரொட்டி துண்டுகளை சுவைத்து மகிழ்ந்த பிறகு சலிப்பு தட்டியதால் கடந்த மே 16 2022 ல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய பிறகும் கூட
அதே மே மாதம் 25 ல் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவோடு சுயேட்சை(?) ராஜ்ய சபா உறுப்பினரானது கூட எதற்காக ?
அரசியல் அதிகார ரொட்டி துண்டினை சுவைப்பதற்கா தானே.
ஆனால் இதே வாய் தான் 'ஒருவர் வழக்கறிஞராக பணியாற்ற வேண்டும் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிட வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் செய்ய கூடாது' என்று பிப்ரவரி 2023 ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு சொன்னது.
ஆனால் அப்போதும் கூட 'அரசியல் அதிகார ரொட்டி துண்டினை கைவிடவில்லையே ஏன்?'
1991 ல் சரத்பவார் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்பதற்காக தனது பாராளுமன்ற எம்பி பதவியை ராஜினாமா செய்து வழி விட்டவர் தானே அஜித் பவார்.
அதன் பிறகு மத்திய அமைச்சராக எத்தனை ஆண்டுகள் வலம் வந்தார் சரத்பவார்.
நீங்கள் என்ன காரணத்திற்காக 2022 ல் காங்கிரஸ் கட்சியினை விட்டு விலகி வந்தீர்களோ,
அதே காரணத்திற்காக தான் 1999 ல் சரத்பவார் மஹாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியினை உடைத்து தனது கட்சியாக பலப்படுத்திக் கொண்டார். எதற்காக?
'அரசியல் அதிகார ரொட்டி துண்டினை தொடர்ந்து ருசி பார்ப்பதற்காக'.
அஜித் பவாரின் 41 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை முழுவதும் சரத் பவாருக்காகத் தானே செலவழித்தார். சரதபவாரின் தளபதியாக தானே பணியாற்றி வந்தார் அஜித் பவார்.
ஆடி களைத்து வயதான சரத் பவார் இப்போது தன் பங்கு அதிகார ரொட்டி துண்டினை அஜித் பவாரிடம் ஒப்படைக்க வேண்டியது தானே முறை?.
கெஞ்சியும், உருகியும், உரிமையுடனும் கேட்டு தரப்படாத 'அதிகார ரொட்டி துண்டினை' தன் பங்கிற்கும், தான் சுவைப்பதற்காகவும் உடைத்து கொண்டார் அஜித் பவார்.
இதில் தவறென்ன இருக்கிறது கபில் சிபல் சார்?
உச்ச நீதிமன்ற முன்னனி வழக்கறிஞராக ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சுமாராக இருபத்தி ஐந்து லட்சம் ரூபாயை கட்டணமாக பெறும் உங்களுக்கு,
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கப்படும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி எதற்காக?
'அதிகார ரொட்டி துண்டிற்காக தானே'.
போகட்டும், போகட்டும்.
அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக தாங்கள் தமிழகம் வரவிருப்பது எதற்காக?
'அதிகார ரொட்டி துண்டினை முறைகேடாக வயிறு நிறைய புசித்து, ருசித்து சட்டத்தின் பிடிக்குள் வந்தவரை விடுவிக்கத் தானே?
இதில் தார்மீக நேர்மை எங்கே இருக்கிறது கபில் சிபல் சார்?
நீங்கள் உங்கள் மட்டத்தில் 'அதிகார ரொட்டி துண்டினை' ருசிக்க துடிக்கிறீர்கள்.
அரசியல்வாதியாக பிறர் அவர்கள் பங்கு 'அதிகார ரொட்டி துண்டினை' ருசிக்க முயற்ச்சிக்கிறார்கள்.
ஹாஹாஹா.
ஒரே தமாஷ் தானே கபில் சிபல் சார்...
"மஹாராஷ்டிரா அரசியல் சதிராட்டம் குறித்து கருத்து சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை கபில் சிபல் சார்."
No comments:
Post a Comment