தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்கு கூட நம் முன்னோர்கள் பஞ்சாங்கத்தில் நாட்கள் குறித்து வைத்துள்ளனர்.
அதேபோல் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமான நாட்கள் என்றும் குறிப்பிட்டு வைத்துள்ளனர்.
ராகு காலத்தில் நல்ல காரியம் செய்யலாமா?
நாம் அன்றாடம் செய்து வரும் பணிகளுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்கத் தேவையில்லை. புதிதாக ஒரு முயற்சியில் ஈடுபடும் போது மட்டும் நல்லநேரம் பார்ப்பது சிறந்தது.
ஆனால் தவிர்க்க முடியாத சில நேரத்தில், ராகு காலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிட்டால், அப்போது விஷ்ணு துர்க்கையை மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டு சுமங்கலிப் பெண்ணின் கையால் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு தொடங்க வேண்டும்.
பின் அந்த சுபகாரிய செயல் வெற்றி அடைந்தவுடன் துர்க்கை ஆலயத்திற்கு சென்று துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். இதனால் நாம் தொடங்கிய சுபகாரியம் சிறப்பாக இருக்கும்.
திருநாள் சந்தடியில் வெயிலில் புரண்டு விளையாடிட செய்வதும் ஞாயமோ? - இவ் வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தும் வாரநாட்களின் ஆரம்ப எழுத்து.
எ-டு: திருநாள் - திங்கள்
சந்தடி - சனி.
No comments:
Post a Comment