Saturday, July 8, 2023

பாசம் உள்ள மகன்கள் குறைவுதான்....

 ஒரு ஊரில் வயதான ஒருவர் மரணித்துவிட்டார். அவர் வீட்டில் உடலை அடக்கம் செய்யும் ஏற்பாடுகள் நடக்கிறது.

இச்சோக செய்தியயைக்கேட்டு திடீரென்று ஒருவர் இறப்பு நடந்த வீட்டுக்கு வந்து, இறந்த இவர் என் நண்பர்தான். ஆனால் இவர் எனக்கு 15 லட்சம் பணம் தரவேண்டும்.. அந்த பணத்தை தந்தால்தான் இந்த சடலத்தை எடுக்க அனுமதிப்பேன் என்கிறார்..
விவாதங்கள் நடக்கிறது..
இறந்தவரின் மூன்று மகன்களும் நாங்கள் ஒருபைசாகூட தரமாட்டோம், எங்கள் தந்தை இதுபற்றி கூறவேயில்லை என்று வாதாடுகிறார்கள்..
மகன்களுக்குத்தான் முதல் பாத்தியம், அவர்களே கொடுக்கமுடியாது என்றபோது எங்களாலும் முடியாது என அங்கிருந்த சொந்த பந்தங்களும் சொன்னார்கள்..
இந்நிலையில் பதட்டம் அதிகரிக்கின்றது..
இறந்தவரின் ஒரே மகள் ஓடி வருகிறாள், வந்து எதையும் யோசிக்காமல் தனது காது கழுத்து கைகளில் உள்ள நகைகளை கழற்றிக் கொடுத்து, இதை தற்போது வைத்துக் கொள்ளுங்கள் மீதியையும் நானே தருகிறேன் என்கிறாள்.
அந்த நபர் வேண்டாமம்மா.. மகளே நான்தான் உன் தந்தைக்கு 15 லட்சரூபாய் தரவேண்டும்..
உன் தகப்பனார் தனது மறைவுக்குப் பின் உண்மையில் என்னை யார் அதிகம் நேசிக்கிறார்கள் என்று அறிந்து அவரிடமே கொடுக்கச் சொன்னார் என்று சொல்லி 15 லட்சம் கொண்ட ஒரு காசோலையை அவர் மகளின் கையில் ஒப்படைத்தார்...
மகள் தன்கையில் பணம் கிடைத்தபின்னும் மனம் மாறாமல் அந்த காசோலையை தன் தாயிடமும்/சகோதரரிடத்தும் ஒரு மனதோடு சேர்த்து மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை செய்வோம் என வணங்கினாள்..
ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... இருப்பினும்,
பெண் பிள்ளைகளை பெற்றவர்கள்
மகாபாக்யசாலிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...