பாரதிராஜா நிறைய புதுமுகங்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார், என்பது நாம் அறிந்ததே.
அதுபோன்ற படங்களின் வெற்றிக்குப் பின்னால், அவரது நல்ல டைரக்ஷனைத் தவிர, இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன.
1). படங்களின் ஹீரோக்கள், ஹீரோயின்கள் யார் நடித்தாலும் நாம் கவலைப்பட்டதில்லை.
(புதுமுகங்களான இவர்கள் அவரவர் திறமையாலும், ‘பாரதிராஜா பட்டறை’யில் உருவானவர்கள் என்பதாலும், பின்னாளில் புகழ் பெற்று விளங்கினர் என்பது வேறு விஷயம்)
2). படத்தில் நல்ல பாடல்கள் இருக்க வேண்டும், பின்னணியிசை நன்றாக இருக்க வேண்டும், என்பதில் நாம் மிகவும் குறியாக இருந்தோம்.
- நான் இன்றும் நம்புகின்றேன், அக்காலக் கட்டத்தில், பாரதிராஜாவின் படங்களின் வெற்றிக்குப் பின்னால் மிகுந்த பலமாக இருந்தது, இளையராஜா அவர்களின் பின்னணியிசையும், அவர் போட்ட ட்யூன்களில் அமைந்த பாடல்களும்தான், என்று.
இளையராஜா அவர்களின் இந்த இசைவடிவங்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் புது முகங்களைக் கொண்டும், முழுக்க முழுக்க நமது மண்வாசனையுடனும் எடுக்கப்பட்ட பாரதிராஜா அவர்களின் பல படங்கள் வெற்றிப் படங்களாகியிருக்குமா என்பது கேள்விக்குறியே.
பாரதிராஜா அவர்கள் இதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என்றே நம்புகிறேன்.
இப்படிக்கு,
இளையராஜா இசைப்பிரியன்.
No comments:
Post a Comment