Sunday, July 9, 2023

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்.

 அகிலம் புகழும் ஆயிரத்தில் ஒருவனுக்கு இன்று 59 வயது பிறந்துள்ளது. தமிழில் கடற் கொள்ளையர்கள் பற்றிய கதை அமைப்பில் வந்த படம். பல்வேறு கலைப் படைப்புகளைத் தந்த பி.ஆர். பந்துலு அவர்களும் - மக்கள் திலகமும் முதன் முதலில் கூட்டணி சேர்ந்த படம். மெல்லிசை மன்னர்கள் கூட்டணியின் கடைசிப் படம். 2014-ம் ஆண்டு டிஜிட்டலில் வெளியாகி சென்னை ஆல்பட் திரையரங்கில் வெள்ளி விழாவைக் கடந்து 200 நாட்கள் ஓடி மறுவெளியிட்டிலும் சாதனை செய்த படம். இப்படி பல விதங்களில் வித்தியாசமான திரைப்படம்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வித்தியாசமானது என்பது ஒருபுறம் இருக்கட்டும். பதிவிட்டுள்ள இந்தப் புகைப்படமும் வித்தியாசமானதுதான்.
‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’
...இந்த வசனத்தை கேட்ட யார்தான் மறக்க முடியும்?
மதம் கொண்ட யானையும் சினம் கொண்ட சிங்கமும் நட்புடன் அமைதியாக நின்று கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். வழக்கமாக, புகைப்படங்களில் பிரபலமாக இருப்பவர்கள் நடுவில் இருப்பார்கள். அவர்களை மையப்படுத்தி ரசிகர்களோ அல்லது அவ்வளவாக பிரபலம் ஆகாதவர்களோ இருப்பார்கள். ஆனால், இந்தப் புகைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் குருசாமி நம்பியார் அவர்களும் ஓரமாக நிற்க, நடுவில் இருப்பவர் ஸ்டண்ட் கலைஞர்களான மாடக்குளம் சகோதரர்களில் மூத்தவரான எம்.கே.காமாட்சி நாதன் அவர்கள்.
அந்த வகையிலே இந்தப் புகைப்படம் வித்தியாசமானதுதான்.
ஏன்?... இனி திரும்பவே திரும்பாத அந்தக் காலமே வித்தியாசமானதுதான்!
May be an image of 3 people
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...