Saturday, July 8, 2023

“வியாபாரத்தில் வளர்ச்சி இரண்டையுமே கொடுத்தது அந்த Sales Tax Officer உருவாக்கின அந்த சிக்கல்தான்.” - இதயம் முத்து அண்ணாச்சி.

 விருதுநகர் இதயம் நல்லெண்ணை அதிபர் விஆர்.முத்து அவர்களின் பதிவு……..

"நமக்கு சிக்கல் உண்டாக்குபவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த வேண்டும்". எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு Sales Taxஇல் இருந்து ஒரு notice வந்தது. “நீங்கள் எண்ணெய்க்கு மட்டும்தான் வரி போடுகிறீர்கள். Canக்கு வரி போடவில்லை. அப்படி இருந்தாலும் நீங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு எண்ணெய்க்கு வரி கட்டியது போல canக்கும் வரி கட்ட வேண்டும். மூன்று வருடங்கள் நீங்கள் அந்த வரியை கொடுக்கவில்லை என்பதால் ஒன்றரை கோடி ரூபாய் நீங்கள் இப்பொழுது கட்ட வேண்டும்" என்று அந்த Sales Tax Officer கூறினார்.
இந்த billஐ பார்த்த எனது அப்பாவிற்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அவர் வருத்தம் என்னவென்றால் ‘40 வருடங்களாக தொழில் செய்து சம்பாதித்த மொத்த சம்பாத்தியமே ஒன்றரை கோடி தான்; ஒரே ஒரு noticeல் Sales Tax Department முழு சொத்தையும் அபகரிக்க போகிறார்கள்’ என்று சோகத்தில் ஆழ்ந்தார்.
முப்பது வருடங்களுக்கு முன்பு இதுதான் எங்கள் நிலைமை. பின்பு ஏதாவது செய்யவேண்டும் என்று நான் இரண்டு நடவடிக்கைகள் எடுத்தேன்.
1) ‘இந்த 40 வருடங்களாக சம்பாதித்தும் ஒன்றரை கோடி ரூபாயை கூட நம்மால் கட்ட முடியவில்லையே, என்ன தவறு செய்திருக்கிறோம்’ என்று ஆராய்ச்சி செய்தேன்.
இதுவரை 1% loss 1% profit என்று தான் வியாபாரம் செய்து கொண்டு இருந்திருக்கிறோம். இதைத் தெரிந்து கொண்ட பிறகு நான் 3% profitஇல் தான் வியாபாரம் செய்வேன் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.
2) நாங்கள் இந்த நீதிமன்ற வழக்கில் வெற்றியை அடைய வேண்டும்; அதற்கு ஒரு வழக்கறிஞர் எங்களுக்குத் தேவைப்பட்டது. சாதாரணமாக எங்கள் அப்பா ஒரு வழக்கறிஞர் 2000 ரூபாய் கேட்டார் என்றால் ‘1500 ரூபாய் வாங்கிக் கொள்கிறீர்களா?’ என்று தான் கேட்பார்.
ஆனால் இந்த வழக்கில் வெற்றி அடைந்தே ஆகவேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டிலேயே சிறந்த வழக்கறிஞரை நாங்கள் இதற்காக நியமித்தோம். வழக்கறிஞர், Mr. ரமணியிடம் இந்த வழக்கை ஒப்படைத்தோம்.
வழக்கு நடைபெற்றது. நீதிமன்றத்தில் stay வாங்கினார்கள். 3 வருடங்கள் கிட்ட கடந்தன.
அதற்குள் நாங்கள் அந்த ஒன்றரை கோடி ரூபாயை சம்பாதித்து விட்டோம். அதே நேரத்தில் இந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அந்த வழக்கில் வெற்றி அடைகிறோம்.
ஏன் வெற்றி அடைகிறோம் என்றால் ‘நாம் வீட்டிற்கு Gas Cylinder வாங்குகிறோம்ல அதில் Gasக்கு மட்டும் தான் வரி கட்டுகிறோம், Cylinderக்கு இல்லை. அதேபோல தான் எண்ணெய்க்கு மட்டும் வரி வசூல் பண்றதுதான் சரி, canக்குத் தேவையில்லை’ என்று நீதிமன்றம் முடிவு செய்வதற்கு மூன்று வருடங்கள் ஆகின.
இந்த மூன்று வருடங்களில் எங்களுக்கு அந்த ஒன்றரை கோடி ரூபாய் கட்டுவது மிச்சம். பின்பு நாங்கள் இன்னொரு ஒன்றரை கோடி ரூபாயும் சம்பாதித்து விட்டோம்.
மக்களே!! எங்களுக்கு இந்த 3 கோடி லாபம், வியாபாரத்தில் வளர்ச்சி இரண்டையுமே கொடுத்தது அந்த Sales Tax Officer உருவாக்கின அந்த சிக்கல்தான்.
அதனால் எப்பொழுதெல்லாம் உங்களுக்கு வியாபாரத்தில் சிக்கல் வருகிறதோ, சிந்தியுங்கள்!! சிந்தித்தால் புதிய யோசனைகள் உங்களுக்கு வரும்.
அதனால் நான் இப்போ என்ன செய்ய வேண்டும் என்றால் எனக்கு சிக்கல் கொடுத்த அந்த Sales Tax Officerக்கு மாலையிட்டு மரியாதை செய்யவேண்டும். அவரால் தான் இவ்வளவு சிந்தித்து இந்த வளர்ச்சியை அடைந்து இருக்கிறேன்.
ஆகவே பிரச்சனைகள் வந்தால் அதை சமாளிக்க கூடிய திறமையும் அதனால் வளர்ச்சியும் ஏற்படும். பிரச்சனைகளை சமாளித்து பழகுங்கள்.
##"இதயம்" முத்து அண்ணாச்சியின் பதிவு.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...