Friday, October 27, 2023

யாருக்கும்_வெட்கமில்லை !!!

♦15 இலட்சம் தரவில்லை.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை... ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦ரூபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦பெட்ரோல் விலைகுறையவில்லை .. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦கருப்பு பணம் மீட்கப்படவில்லை... ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦பொருளாதாரம் வளரவில்லை.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦பெண்களுக்கு பாதுகாப்பில்லை... ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦கார்ப்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦மாநில உரிமைகள் பறிபோகிறது... ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..
ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦ஜனநாயகம் நசுக்கப்படுகிறது... ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦வன்முறை பேயாட்டம் ஆடுகிறது... ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦நீதிபதிகள் பந்தாடப்படுகிறார்கள்..
ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦பத்திரிக்கைகளின் குரல்வலை நசுக்கப்படுகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!
♦25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்..
குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..
ஆனாலும் பிடித்திருக்கிறது!
♦இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
...
...
...
♦ஏனென்றால்
''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை''
பிடித்திருக்கிறது...!!!
♦பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?
♦ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!
♦மசூதியை இடித்து கோவில் கட்டுவதால்
இந்து மக்களுக்கு என்ன நன்மை ?
♦முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?
♦மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?
♦காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?
♦CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?
♦இனியும் இடிப்போம்! என கூறும் மசூதிகள் இடிக்கப் படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?
♦09 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?
♦பாஜக இந்துக்களுக்கு செய்த ஒருநன்மையையாவது கூற முடியுமா?
♦உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?
♦நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல்,
♦பக்கத்து வீட்டு கரண்டு பில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவிதமனநோய் தான் அது,
♦பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது போல்,
♦ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம்எனில் புரிந்து கொள்ள முடிகிறது !
♦ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
♦ஆம் ! ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்தி விடலாம்.
♦ஆனால், ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...