Monday, October 30, 2023

யுகேந்திரன் எனும் ஜெண்டில்மேன்.

 +++++++++++++++++++++++++++

யுகேந்திரன் பிக்பாசில் இருந்து வெளியேறியிருக்கிறார். வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பதே சரி.
அவர் இந்த ஆட்டத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் என வெளியேற்றப்பட்டிருக்கலாம். எனக்கு தெரிந்த சிலரே “அவர் ரொம்ப டீசண்ட், சாஃப்ட்..சண்டைல்லாம் போடலைன்னா எப்படி வெச்சுருக்காங்க” என்கிறார்கள். அந்த அளவுக்கு பிக்பாஸ் பார்க்கும் நம்மையும் பழக்கி விட்டிருக்கிறார்கள்.
ஹிஸ்டரிக்கலாக கத்தினால், சூழ்ச்சி செய்தால், விஷத்தனத்தோடு ஒரு வில்லனாக இருந்தால் தான் பிக்பாஸில் இருக்க முடியுமா, வெல்ல முடியுமா? அது சரியா? முதல் சில சீசன்களில் அப்படி இல்லையே?
உதாரணத்துக்கு முதல் சீசனில் காயத்ரி, வாசு மகன், ஆர்த்தி க்ரூப் சேர்ந்து கொண்டு தாக்குவார்கள். தாக்குதலை விக்டிம் மனநிலையோடு எதிர்கொண்ட பரணி பரிதாபத்தோடு வெளியேறுவார். எதிரிகளிடம் மண்டியிட்ட ஜூலி பரிகாசம் செய்யப்பட்டார். எதிர்த்து கேள்வி கேட்ட ஓவியா இன்று வரை கொண்டாடப்படுகிறார். சொல்லிச்சொல்லி ஒவ்வொரு வாரமும் ஓவியாவின் எதிரி க்ரூப்பில் ஒருவர் வெளியேறுவார். பார்க்கும் நமக்கு வெறியேறும். அத்தனை திருப்தியோடு கமல் வரும் எபிசோடை எதிர்ப்பார்ப்போம்.
நான் பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்ததற்கு காரணம் இது தான். நமக்கு என்ன அநியாயம் யார் பண்ணாலும், அறம் வெல்லும் என நிறுவும் புள்ளி தான். அது அடுத்தடுத்த சீசன்களில், ஆரி என தொடர்ந்தது. ராஜூ ஜெயித்த சீசன், எச்சூழ்நிலையையும் இலகுவாக அணுகினால், டீசண்ட்டா இருந்தால் தப்பில்லை என ஒரு நம்பிக்கையை தந்தது.
அதற்கு பிறகு அசீம் ஜெயித்த பிக்பாஸ் எல்லாம் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. காசு கொடுத்து ஓட்டு, சண்டை போட்டால் மாஸ் என்றார்கள். இப்போதுள்ள சீசனில் மாயா போன்றவர்கள் ‘கண்டெண்ட்’ என்ற ஒற்றை சொல்லை சொல்லியே தங்கள் விஷத்தனத்தை தாங்கிப்பிடிக்கிறார்கள். ”வெச்சு செய்யனும்” என்கிற politically incorrect பதத்தை இருநிமிடத்திற்கு ஒருமுறை சொல்கிறார்கள். வன்புணர்வு என அதன் அர்த்தம் புரிந்து சொல்கிறார்களா என்றுகூட தெரியவில்லை.
நிற்க, என்னை பொருத்தவரை, யுகேந்திரன் எந்த தப்பும் செய்யவில்லை. பிக்பாஸ் நடத்தையை வைத்துப் பார்த்தால், வெளியில் மிகுந்த மனச்சமநிலையோடு (emotional balance) தன் வேலை, குடும்பத்தை கையாள்பவராகவே தென்பட்டார். என்ன விமர்சனம் வைத்தாலும் இடைமறிக்காது காதுகொடுப்பார். எந்த விவாதத்திலும் ஒரு அசைக்க முடியாத உறுதியும், புன்முறுவல் முகத்தில் இருக்கும், ஒரு கண்ணியம் இருக்கும். That's super impressive.
யூகேந்திரன் என்னை விட ஒருசில வருடங்கள் மட்டுமே பெரியவர். ஒரு சமகாலத்தவராக, அவரளவு மெச்சூரிட்டி எனக்கு இல்லையே என்னுமளவு ஆச்சர்யப்படுத்தினார். அதற்காக உள்ளே சும்மாவும் இல்லை. எல்லோருடனும் ஆக்டிவாக நட்பு பாராட்டி, எல்லாவற்றிலும் கலந்துகொண்டார்.
Yugendran Vasudevan உங்களிடம் யாரேனும் ஸ்பஷ்டமாக இதை சொல்வார்களா என்று கூட தெரியாது.
You did not do anything WRONG to be evicted. If any, You were Impressive and Inspirational.
நீங்கள் நன்கு ஆடினீர்கள் யுகேந்திரன்.
++++
May be an image of 1 person, beard and eyeglasses
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...