Sunday, October 29, 2023

ராஜாக்கு நான் எழுதி இருக்கேன்.

 இசைஞானியின் 4ஆவது படமான பத்ரகாளியில் முதன் முதலாக வாலி அவர்கள் கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடலை எழுதியவுடன் அந்த படத்தின் அனைத்து பாடலையும் எழுதினார். முதன் முதலில் கவுண்டர்பாயிண்ட் என்ற இசை நுட்பத்தை அறிமுகப்படுத்திய பாடலான என் கண்மணி உன் காதலன் பாடல் இவருடைய கைவண்ணம் என்பது குறிப்பிடதக்கது..

பத்ரகாளி படத்திற்கும் முன்னரே மெல்லிசை மன்னர் இசையில் சுசீலா அம்மா பாடி வாலி எழுதிய "வட்ட நிலா வண்ண புறா தொட்டிலாடுதோ... அதன் சிட்டு விழி சுட்டு மொழி என்ன கூறுதோ”.. என்ற பாடலே இசைஞானி வாலியின் வரிகளில் டியூன் போட்டு இசை அமைத்தது. இசை அமைக்க வாய்ப்பு கேட்கும் போது இந்த பாடல் பதிவான கேசட்டை தயாரிப்பாளர் இசைஞானியிடம் தந்து “இந்த பாடலை விட சிறப்பாக நீ ஒரு ட்யூன் அமைத்து கொண்டு வா உனக்கு வாய்ப்பு தருகிறேன்” என்று கொடுத்தது... வாலியின் அந்த பாடல் வரிகளை கொண்டு ஒரு டியூன் அமைத்து இசைத்ததே தனது முதல் அனுபவமாக இசைஞானி ஒரு நிகழ்வில் கூறினார்.
"பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல்.வி.பிரசாத்தின் சொந்த படமான பிரியாவிடையில் ஜி.கே.வெங்கடேஸ் இசையில் சீட்டு கட்டு பற்றி வரும் பாடலுக்கு ஒரு மெல்லிய உருவத்துடன் பெல்பாட்டம் போட்டுகொண்டிருந்த பையன் டியூனை எனக்கு கிடாரில் வாசித்து காட்டினார். நான் அவரிடம் உன் பெயர் என்ன என்று கேட்டேன் அதற்கு அவர் ராஜா என்றார்... பின் அந்த பாடலை ராஜா பாருங்க ராஜாவை பாருங்க என்று பல்லவி ஆரம்பிப்பதாக எழுதினேன். ராஜா ராஜா ராஜான்னு ஏகப்பட்ட பாட்டு ராஜாக்கு நான் எழுதி இருக்கேன். ஏதோ ராஜாவை திருப்தி படுத்துவதற்க்காக அப்படி எழுதவில்லை... முதலில் பிரியாவிடையில் எழுதியது பின் ராஜாவின் இசையில் அதுவே எனக்கு நல்ல செண்டிமெண்டாக அமைந்தது.".. வாலிப கவிஞர்.
ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல..
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா...
ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க...
காற்றில் வரும் கீதமே... என் கண்ணனை அறிவாயா... இந்த பாடல் கம்போசிங்கில் இசைஞானி டியூனை சொல்ல சில ஷன இடைவெளியில் சரளமாக அவர் வரிகளை சொல்ல இவர் அதை பாட.... ஆஹா... இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்... கேட்போருக்கு வரிகளுடன் அந்த இசை பேரழகாகும்....
ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயரான ரங்கராஜனை இசைஞானி இப்படி சிலேடையாக குறிப்பிடுவார்... “அந்த ரங்கன் நானறிவேன். இந்த ரங்க நாதனவன். அந்த ரங்கம் நானறியேன். எந்த ரங்கம் சென்றாலும் சொந்த அரங்கம் ஆக்கும் அவன். அந்த ரங்கம் வந்ததனால் இந்த ரங்கம் பெற்றானோ.. எந்த ரங்கம் நான் பிறந்தேன். இந்த ரங்கம் ஏறுதற்கு....”
வாலிப கவிஞரின் பிறந்த நாளில் அவரின் புகழை போற்றி வணங்குவோம்... 🌺❤️🙏
May be an image of 1 person
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...