Monday, October 23, 2023

உமா ரமணன்.....

 ஏ. வி. ரமணன் - உமா ரமணன் தம்பதியர். தமிழ்நாட்டில் வெள்ளி விழாவைக் கொண்டாடிய மிகப் பிரபலமான மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் ஏ.வி.ரமணன். திரைப்படங்களிலும் பாடியுள்ளார். இவரது மனைவியும் பிரபல பாடகியான உமா ரமணனாவார். இக்குழுவில் பாடகியாக வந்த உமா ரமணனுக்கும் ரமணனுக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது. இத்தம்பதியருக்கு விக்னேஷ் ரமணன் என்ற ஒரே மகன். பொறியியற்பட்டதாரி.

ஏ.வி.ரமணனின் இசைக்குழுவின் பெயர் “மியூசியானோ”. இக்குழுவில் விக்னேஷ் ரமணன் உயிர் நாடி. இக்குழுவில் உமா ரமணன் இந்திப் பாடல்களைப் பாடுவார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறாயிரத்துக்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்தவர் ஏ.வி.ரமணன்.
26.7.1973-இல் பிறந்தது “மியூசியானோ”. கவியரசு கண்ணதாசன் “இசை நிலவு” என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளார்.
காதல் வைபோகமே என்ற படத்தில் தனது மகனுடன் இணைந்து ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே….. என்ற பாடலைப் பாடியுள்ளார்.
‘போக்கிரி’ என்ற படத்தில் சுசீத்ராவுடன் இணைந்து என் செல்லப்பேரு ஆப்பிள் என்ற பாடலைப் பாடியுள்ளார்.
இதயம் போகுதே பட [ஆல்ப] த்தில் ’இதயம் ஓர் கவிதை’ என்ற சோகப்பாடலைத் தனித்துப் பாடியுள்ளார். உமா ரமணன் -
1980-1990-களில் பின்னணிப் பாடகியாக திரையிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைகளிலும் கலக்கியவர் உமா ரமணன். எம்.ஏ., பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரி நாட்களில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். விமானப் பணிப்பெண்ணாக ஆகவேண்டுமென்பதே கனவாகயிருந்தது இவருக்கு.
இந்நிலையில் தான் 1972-இல் தனது வருங்கால கணவரைச் சந்திக்கிறார். மனம் மாறுகிறது. அவரது ”மியூசியானோ இசைக்குழுவில்” பாடகியாக இணைகிறார். 4 வருடங்கள் செல்கிறது. காதலர்களான இவ்விருவரும் தம்பதியாகின்றனர். சுமார் 6000 கச்சேரிகளில் இருவரும் இணைந்து இசை விருந்தளித்தனர். அப்போதுதான் ஏ.வி.ரமணன் “நீரோட்டம்” என்னும் படத்திற்கு இசையமைப்பாளராகிறார். அப்படத்தில் தனது காதல் மனைவியைப் பாடகியாக அறிமுகம் செய்கிறார். பின்னர் பல்வேறு இசையமைப்பாளர்களிடமிருந்து அழைப்புக்கள் வருகிறது. ”நிழல்கள்” படத்தில் இளையராசாவின் இசையில் பாடும் சந்தர்ப்பம் அமைகிறது. ”பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்” என்ற கங்கை அமரனின் பாடலைத் தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாட இப்பாடல் இவரை முன்னணிக்கு இட்டுச்சென்றது.
தொடர்ந்து இளையராசாவின் இசையிலேயே நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார். “எங்கிருந்தாலும் வாழ்க” படத்தில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து “ஆசை நெஞ்சில்”, ”ஏவி.எம்.மின் புதுமைப் பெண்” படத்தில் கே.ஜே.யேசுதாசுடன் இணைந்து “கஸ்தூரி மானே கல்யாணத் தேனே”, மகாநதி” படத்தில் ”ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் பாதம் மங்கலம்”, “தூரல் நின்னு போச்சு” படத்தில் “பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்”, “கோவில் புறா” படத்தில் “அழகே தமிழே அழகிய”, ”மெல்லப் பேசுங்கள்” படத்தில் “செவ்வந்திப் பூக்களில் செய்த வீணை”, ”பகவதிபுரம் ரயில்வே கேட்” படத்தில் “செவ்வரளி தோட்டத்திலே உன்னெ நெனச்சேன்”, “அன்பே ஓடி வா” படத்தில் “காதில் கேட்டதொரு பாட்டு”, “தென்றலே என்னைத் தொடு” படத்தில் “கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலைப் பாத்திருந்தேன்”, “அரங்கேற்ற வேளை” படத்தில் “ஆகாய வெண்ணிலாவே அலை போல” , “கேளடி கண்மணி’” படத்தில் ”கே.ஜே.யேசுதாசுடன் சேர்ந்து”நீ பாதி நான் பாதி கண்ணே”, ரி.ராஜேந்தர் இசையில் ”ஒரு தாயின் சபதம்” படத்தில் “ராக்கோழி கூவையிலே ஏன் ராசாத்தி”, வித்யாசாகர் இசையில் “புதையல்” படத்தில் ”பூத்திருக்கும் வண்ணமே” போன்ற பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.
May be an image of 1 person and smiling
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...