Tuesday, October 24, 2023

அடுத்து வேலுமணியை சொல்வீங்களா ??

 பசும்பொன்னுக்கு.

♦அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்ததில் இருந்தே
♦வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
♦லோக்சபா தேர்தல் தோல்வி , இடைத்தேர்தல் தோல்விகள், சட்டசபை தோல்வி, உள்ளாட்சி, நகராட்சி தோல்வி என்று வரிசையாக தோல்விகளை சந்தித்தது.
♦பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார்.
♦தென் மாவட்டத்தில் அவர் எதிர்பார்க்கும் ஆதரவு வரவில்லை.
♦அதனால்தான் மதுரையில் அவர் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை.
♦அதனால்தான் அங்கே புளிசாதம் மீந்து போனது.
♦அதோடு சங்கரன் கோவிலில் அவர் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.
♦வந்த கூட்டம் கூட பாதியில் கலைந்து சென்றுவிட்டது.
♦அதனால் பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார்.
♦அவர் அங்கே செல்லலாம். ஆனால் அவருக்கு அங்கே எதிர்ப்பு வரலாம்.
♦அவர் மீது முக்குலத்தோர் கோபத்தில் உள்ளனர்.
♦முக்குலத்தோர் கடுமையான கோபம் கொண்டு உள்ளனர்.
♦சசிகலாவிற்கு துரோகம் செய்தார்.
♦டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்தார்.
♦கூட இருந்து ஆட்சி செய்ய உதவியாக இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்தார்.
♦10.5 சதவிகிதத்தை பிரித்து வன்னியர்களுக்கு கொடுத்தார்.
♦மீதம் உள்ள மொத்த 10 சதவிகிதமும் தென் மண்டலத்திற்கு என்று சுருங்கிவிட்டது.
♦இதனால் தென் மண்டலத்தில் கடுமையான கோபத்தில் உள்ளனர்.
♦இடஒதுக்கீட்டை காலி செய்துவிட்டார் என்று கோபத்தில் உள்ளனர்.
♦அதிமுக மீதே கோபத்தில் உள்ளனர்.
♦ஒரு காலத்தில் முக்குலத்தோர் காங்கிரசை ஆதரித்தனர்.
♦பின்னர் திமுகவை ஆதரித்தனர்.
♦அதன்பின் அதிமுகவை ஆதரித்தனர்.
♦ சசிகலா வருகை காரணமாக அதிமுக பக்கம் வாக்குகள் சென்றது.
♦ஜெயலலிதா காலத்தில் மொத்தமாக முக்குலத்தோர் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். இப்போது நிலைமை அப்படியில்லை.
♦எடப்பாடி செய்த துரோகம் காரணமாக தென் மண்டலத்தில் அவர் வெற்றியே பெற முடியாது.
♦7 முக்கியமான தொகுதிகள் உள்ளன.
♦இங்கே முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் உள்ளன.
♦திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர் என்று 7 தொகுதிகள் முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதிகள்.
♦இங்கே எல்லாம் எடப்பாடிக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காது. அங்கே எல்லாம் கிளீன்
♦போல்ட் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
7- 9 லோக்சபா தொகுதிகளில் உள்ள 39 சட்டசபை தொகுதிகளில் 14 இடத்தில்தான் அதிமுக வென்றுள்ளது.
♦இங்கே தினகரன் மட்டும் 4 லட்சம் வாக்குகள் வென்றுள்ளார்.
♦அப்படி எல்லாம் இருக்கும் போது..
♦இப்போது
ஓ பன்னீர்செல்வம் இல்லாத போது..
♦டிடிவி தினகரன் வாக்கை பிரிக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குகள் கிடைக்காது.
♦எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும்..
♦எவ்வளவு முறை குருபூஜைக்கு போனாலும் வாக்குகள் கிடைக்காது.
♦எடப்பாடி ஸ்டாலினுக்கு எதிராக நிற்கிறார் என்று சொல்ல முடியாது.
♦அவருக்கு சிறுபான்மையினர் வாக்குகள் சென்றுவிடும் என்றும் சொல்ல முடியாது.
♦இஸ்லாமியர்களை விடுதலை செய்ய ஏற்கனவே அரசு பரிந்துரை செய்துவிட்டது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
♦ஆளுநர்தான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
♦அப்படி இருக்க எடப்பாடி இதில் ஸ்டாலினை எப்படி எதிர்க்க முடியும்.
♦அவர் ஆளுநரைத்தானே எதிர்க்க முடியும்? அவர் ஆளுநரிடம்தானே கேட்க முடியும்.
♦ஆனால் அங்கே கேட்கவில்லையே.
♦இஸ்ரேல் - பாலஸ்தீனம் போருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
♦ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் சொல்லவில்லையே. அவர் சொல்லி இருக்கலாமே.
♦அவர் ஏன் எதுவும் பேசவில்லை.
♦எடப்பாடியிடம் நான் பார்த்த ஒரே மாற்றம் அவர் நெற்றியில் விபூதி இல்லை. எப்போதும் விபூதியுடன் வருவார். அது இப்போது இல்லை.
♦அந்த விபூதியை அழித்துவிட்டு வருகிறார். அவரிடம் பார்த்த ஒரே மாறுதல் இதுதான்,
♦சிறுபான்மையினரை அரவணைக்க வேண்டும். அவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று இப்படி செய்கிறாரோ என்று தோன்றுகிறது.
♦அவரின் சமீபத்திய கூட்டங்களில் எல்லாம் நான் கவனித்தேன்.
♦அவர் விபூதி இல்லாமல் வருகிறார். இப்படி செய்தால் சிறுபான்மையினரை இழுக்கலாம் என்று அவர் நினைக்கிறார் போல.
♦ஆனால் அது எல்லாம் நடக்காது.
♦விபூதி இருக்கோ.. இல்லையோ அவர் என்ன பேசுகிறார் என்பதே முக்கியம்.
♦அவர் பேசுவதை வைத்தே அவரின் அரசியல் இருக்கும்.
♦அவர் விபூதி வைத்துக்கொண்டு மோடியை எதிர்த்தால் கூட மக்கள் நம்புவார்கள்.
♦ஆனால் அவர் அதை செய்வது இல்லையே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...