Monday, October 23, 2023

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.

 தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்...

சமூக நீதியில் அக்கறை உள்ளதாக சொல்லிக் கொள்பவர்கள் இதை வலியுறுத்த வேண்டும்...
சாதிவாரி கணக்கெடுப்பு, கல்வி வேலை வாய்ப்புகளில் யார் யாருக்கு எத்தனை விழுக்காடு என்ற புள்ளி விவரங்களை எடுத்து வெளியிட்டால் தமிழகத்தின் சமூக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அது இந்த திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு உகந்ததாக நிச்சயம் இருக்காது. தங்களுடைய நலன்களுக்காக திமுக அரசு இதை தட்டிக் கழிக்கிறது. திரும்பத் திரும்ப மாநில அரசுக்கு அதிகாரமில்லை; நடுவண் அரசு தான் செய்ய வேண்டும் என்று திசை திருப்புகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. புள்ளியியல் சட்டம் 2008 அதை மாநிலங்களுக்கு வழங்கி உள்ளது. ஆனால் திராவிட மாடல் அரசு அதைச் செய்யாமல் நடுவண் அரசின் மேல் பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கிறது. ஊடகத்தின் வாயிலாக இதை நடுவண் அரசு மட்டுமே செய்ய முடியும் என்ற தவறான கருத்தை திரும்பத் திரும்ப பரப்புகிறார்கள். தமிழகத்தில் சட்டம் அறிந்த எத்தனையோ மேதைகள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தமிழக அரசின் ஆலோசகர்களாகக்கூட இருக்கிறார் கள். அவர்களின் கருத்துக்களைக் கூட கேட்டறியாமல் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க தயங்குகிறது. பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாருக்கு இருக்கக்கூடிய சமூக நீதி அக்கறை கூட தமிழக அரசுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. சமூக நீதியில்அக்கறை கொண்டோர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...