Friday, October 27, 2023

விவசாயகடன்_தள்ளுபடி.. #இலவசம்_ஆகாது .. #பூபேஷ்பாஹல் .

 சட்டீஸ்கரில் இப்போது விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்தகட்டமாக வேறு பல நல்ல திட்டங்களும் அறிவிக்கப்படும்.
மாநிலத்தில் தப்பித் தவறிக் கூட பாஜகவுக்கு மக்கள் வாக்களித்துவிடக் கூடாது.
ஏனெனில், அவா்கள் அதிகாரத்துக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள அனைத்துத் திட்டங்களையும் முடக்கிவிடுவாா்கள் ..
செய்தியாளா்கள் பூபேஷ் பகேலிடம், .
விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச அறிவிப்புகள் தவறான முன்னுதாரணத்தையும்,
அரசுக்கு பெரும் நிதிச்சுமையையும் ஏற்படுத்தும் என்ற விமா்சனம் தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, 'விவசாயிகள் வலுவடைந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும் வலுவாக இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக தொழிலும், வா்த்தகமும் வளா்ந்துள்ளது.
இதனால், பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
விவசாயிகளிடம் செல்லும் பணம் மீண்டும் நாட்டில்தான் புழக்கத்துக்கு வரும்,
அதே நேரம் பெரும் தொழிலதிபா்கள் கைக்குச் செல்லும் பணம் நாட்டு திரும்ப வருவதில்லை.
வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது.
பெரும் தொழிலதிபா்களின் கடன்கள், வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்யப்படும்போது
பாதிக்கப்படாத பொருளாதாரம்,
விவசாயக் கடன் தள்ளுபடியால் மட்டும் பாதிக்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பினாா்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...