Friday, October 27, 2023

*வரப்போகும் சந்திர கிரகணம்.*

 கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள்.. யார் யார்?

சந்திர கிரகணம் !!
🌟 சந்திர கிரகணம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.
இந்த கிரகணம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் :
ஆரம்ப காலம் அதிகாலை 01.05 AM
மத்திய காலம் அதிகாலை 01.44 AM
முடிவு காலம் அதிகாலை 02.23 AM
🌟 சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகின்றது. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணமும், சூரியன் மறைக்கப்படும் போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.
🌟 பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.
🌟 சந்திர கிரகணம் என்பது நிலா, பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
🌟 சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
🌟 கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
👉 அஸ்வினி
👉 பரணி
👉 மகம்
👉 மூலம்
👉 ரேவதி
இந்த ஐந்து நட்சத்திரக்காரர்களும் சாந்தி பூஜை செய்து கொள்ளவும்.
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...