Sunday, October 22, 2023

ஆட்சி_மொழி, #அலுவல்_மொழி #என்ன_வேறுபாடு.????

 official language என்பதன் பொருள் என்ன?

குட்டி முதலாளித்துவமும் பட்லர் இங்கிலீஷும்!
-----------------------------------------------------------------------------
official language என்றால் அதிகாரபூர்வமான மொழி என்று
பொருள். What does this imply? மற்ற மொழிகள்
அதிகார பூர்வமற்றவை (unofficial) என்பது implied.
எனவே official language = அதிகாரமுறு மொழி.
என்ன அதிகாரம் அந்த மொழிக்கு வழங்கப் படுகிறது?
வேறு என்ன அதிகாரத்தை ஒரு மொழிக்கு வழங்க
முடியும்? ஆட்சி செய்யும் அதிகாரத்தை மட்டுமே
வழங்க முடியும். Therefore this further implies that the term
OFFICIAL LANGUAGE means a language that governs. எனவே
official language =அதிகாரமுறு மொழி =ஆட்சிமொழி.
அடுத்து, அலுவல் மொழி என்றால் என்ன பொருள்?
அ) அதிகாரபூர்வமானது என்று பொருள் அல்ல.
ஆ) ஆட்சி மொழி என்றோ ஆளுகை செலுத்தும் மொழி
என்றோ பொருள் அல்ல.
இ) அலுவல் மொழியை ஆங்கிலத்தில் WORKING LANGUAGE என்று கூறலாம். இதற்கு, அதாவது working languageக்கு எந்த விதமான locus standiயும் கிடையாது.
Locus standi ஏதுமற்ற ஒரு பஞ்சைப் பராரியால் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற இயலாது.
ஈ) ஆட்சிமொழி = official language (locus standi உண்டு)
அலுவல் மொழி = working language (locus standi இல்லை)
உ) working majority என்ற தொடரைக் கருதுங்கள்.
working majority என்பது ஒருவிதமான பெரும்பான்மையே.
என்றாலும் அது அறுதிப் பெரும்பான்மை அல்ல
(not an absolute majority). அது போலத்தான் working language
என்பதும். அதாவது அலுவல்மொழி என்றால் அது
ஆட்சிமொழி என்பதைவிட அந்தஸ்து குறைவானது.
சட்டபூர்வத் தன்மை (legal status) குறைந்தது.
தமிழ்நாட்டில் 1965 முதல் 1970 வரை இந்தி எதிர்ப்பு வீரியமாக இருந்தது. காலப்போக்கில் அது நீர்த்துப் போனது.
அன்று
வெறும் குட்டி முதலாளித்துவ மற்றும் ஏழை
எளிய மக்களின் கட்சியாக இருந்த திமுக, அதிமுக
போன்ற கட்சிகள்
இன்று
பணமூட்டைகளின் கட்சிகள்
ஆகி விட்டன.
எனவே முன்பு போல் இந்தியை
எதிர்க்கும் தேவை அவர்களுக்கு இன்று இல்லை.
எனவே நீர்த்துப் போன இந்தி எதிர்ப்பைச்
சுட்டுவதற்காகவே அலுவல்மொழி என்ற சொல்லை
MALAFIDE intention உடன் உருவாக்கினர்.
திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியைக் கருதுவோம்.
திமுகவின் நிரந்தர வாக்கு வங்கியாக இஸ்லாமிய
வாக்கு வங்கி உள்ளது. இஸ்லாமியச் சகோதரர்கள்
இந்தியைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள். அவர்கள்
ஒருபோதும் இந்தியை எதிர்க்க மாட்டார்கள்.
1937ல் தந்தை பெரியாரே முன்னின்று நடத்திய இந்தி
எதிர்ப்புப் போராட்டத்தில், முஸ்லிம்கள் என்ன செய்தனர்? உருது பேசும் முஸ்லிம்கள் பெரியாரை ஆதரிக்கவில்லை. அவர்கள் இந்தியை எதிர்க்க மாட்டோம் என்று சொல்லி விட்டனர்.
இந்தியும் உருதும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற
உளவியல் நம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இருப்பதால், இந்தி எதிர்ப்பு என்று வரும்போது அவர்கள் இந்தியை எதிர்க்க முன்வர மாட்டார்கள்.
1960களில் இருந்தது போல், இந்தி எதிர்ப்பில் திமுக தீவிரமாக இருந்தால் என்ன ஆகும்?
தனது இஸ்லாமிய வாக்கு வங்கியை அது இழக்க நேரும்.
இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்தி எதிர்ப்பைப் பெயரளவுக்கு மட்டுமே திமுக கடைப்பிடித்து வருகிறது.
இந்தியாவில் தேசியமொழி என்று எதுவும்
கிடையாது. அதாவது de jure national language
எதுவுமே கிடையாது. ஆனால் de facto national
language உண்டு. அது இந்தி. இதை உணர மறுப்பது
பேதைமையுள் எல்லாம் பேதைமை!
மத்திய அரசில் 33 ஆண்டு காலம் பணியாற்றிய எங்களைப் போன்றவர்கள் official language என்பதன் மெய்ப்பொருளை அறிவோம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒலிக் மீட்டிங்
(OLIC Meeting) என்றால் என்ன என்று தெரியும்.
அது என்ன ஒலிக் மீட்டிங்?
OLIC = Official Language Implementation Committee.
அதாவது இந்தி ஆட்சிமொழி என்பது வெறும் சட்ட
வாசகம் மட்டும் அல்ல. அது in letter and spirit அமல்படுத்த
வேண்டிய விஷயம். அதற்காக ஒவ்வொரு மத்திய அரசு
அலுவலகத்திலும் இந்த ஒலிக் மீட்டிங் நடப்பது உண்டு.
அரசமைப்புச் சட்டம் ஷரத்து 351 என்ன சொல்கிறது?
இந்தியை ஆட்சிமொழியாக ஆக்குவதற்கு
என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
இந்தி வெறும் அலுவல் மொழிதான் என்றால்
ஷரத்து 351 எதற்கு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது என்று சிந்திக்க வேண்டும்.
ஷரத்து 343 பற்றியும் ஷரத்து 351 பற்றியும் முதன் முதலில் கூறியவன் நான்தான். நீங்கள் உங்களின் மனச்சாட்சியைத் தொட்டுப் பார்த்து பதில் சொல்லுங்கள். நான் சொல்லாமல் நீங்களாகவே தெரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்?
இறுதித் தீர்ப்பு!
---------------------
OFFICIAL LANGUAGE = ஆட்சிமொழி.
இதுதான் சரியான முறையான ஆங்கில மொழிபெயர்ப்பு.
அதாவது Royal British English, Oxford English, Cambridge English என்று அனைத்து வகையான ஆங்கிலத்தின்படியும் ஏற்கத் தக்க ஏதுவான மொழிபெயர்ப்பு.
Official language = அலுவல் மொழி.
இந்த மொழிபெயர்ப்பு பட்லர் இங்கிலீஷின்படியான
மொழிபெயர்ப்பு. இது பொருத்தமற்றது. எனவே
இகழ்ச்சியுடன் நிராகரிக்கப் படுகிறது.
With authority and aplomb நியூட்டன் அறிவியல் மன்றம்
இத் தீர்ப்பை வழங்குகிறது.
-----------------------------------------------------------------------------
May be an image of 2 people and people studying
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...