Tuesday, October 31, 2023

நடிகர் திலகத்துடன் ஒரு சுவாரஸ்யம் : ஒரு நிருபரின் டைரி.

 ஒரு செய்தி நிறுவன குழுமத்திற்காக டில்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம்.தேசிய விருது வாங்க வரும் தமிழ் திரைப்பட வி.ஐ.பி.,க்களை பேட்டி எடுப்பது வழக்கம். பல திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என பேட்டி எடுத்தவர்களின் பட்டியல் நீளம்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, 'தாதா சாகிப் பால்கே விருது' அறிவிக்கப்பட்டது.

திரைத் துறையின் மிகப் பெரிய விருது இது. நடிகர் திலகம் என போற்றப்பட்ட இவருக்கு சிறந்த நடிகர் விருதை வழங்கி பெருமைப்பட்டுக் கொள்ளாத அரசு, கடைசியாக தாதா சாகிப் பால்கே விருதிற்கு சிவாஜி கணேசனைத் தேர்ந்தெடுத்தது.ஜனாதிபதி கையால் விருது பெறுவதற்காக டில்லி வந்திருந்தார் நடிகர் திலகம். அரசு தரப்பில் விருது வாங்குபவர்கள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலான 'அசோக்'கில்தான் தங்குவார்கள். சிவாஜியும் அங்கு தான் தங்கியிருந்தார்.
நான் பணியாற்றிய செய்தி நிறுவனத்துக்காக சிவாஜியை பேட்டி எடுக்க தீர்மானித்தேன்.பேட்டி வேண்டாம்அசோக் ஹோட்டலுக்கு போன் செய்து சிவாஜியின் அறைக்கு கனெக்ட் செய்ய சொன்னேன்.ரிங் போய்க்கொண்டிருந்தது. யாரும் அறையில் இல்லையா? இவ்வளவு நேரம் யாரும் போனை எடுக்கவேயில்லையே?ஒரு வழியாக ரீசிவர் எடுக்கப்பட்டது. சிவாஜியின் சிம்மக் குரல் கேட்கும் என நினைத்த எனக்கு ஏமாற்றம்
.'யெஸ்''வணக்கம். சிவாஜி சாரோட பேச முடியுமா''நான் பிரபு. அவரோட சன் பேசறேன். நீங்க யாரு?'என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.“பேட்டி எடுக்கனும்”'அப்பா இப்ப ரெஸ்ட்ல இருக்காங்க. சமீபத்திலதான் அவர் உடம்பு சரியில்லாம இருந்தார். இப்போ கொஞ்சம் பரவாயில்லை'பிரபுவின் குரலில் தயக்கம் தெரிந்தது.'ஓ. அப்படியா?... சாரோட பேட்டி எங்க இதழ்ல வரனும்னு எடிட்டர் விரும்புகிறார்.
அத்தோட இந்த பேட்டி பப்ளிஷ் ஆனா எங்களுக்கு பெருமை''அப்பா அடிக்கடி எமோஷனல் ஆகி விடுகிறார். நீங்க ஏதாவது கேள்வி கேப்பீங்க. உடனே, அப்பா எமோஷனல் ஆனா பிரச்னை. பேட்டி வேண்டாமே'பிரபுவிடம் தாஜாநடிகர் திலகத்திடம் எப்படியாவது பேட்டி எடுத்துவிட வேண்டும் என மனதிற்குள் ஒரு ஆர்வம்.முதன் முதலாக நடிகர் திலகத்தை நான் திரையில் பார்த்தது தங்கமலை ரகசியம் படத்தில். அப்போது நான் மூன்றாவது நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்ததாக நினைவு.என் பாட்டி, அம்மாவின் அம்மா- நடிகர் திலகத்தின் படம் ஒன்றைக் கூட விடமாட்டார். என்னையும் சில சமயம் படம் பார்க்க அழைத்துப் போவார்.
அப்படி பார்த்தது தான் சிவாஜியின் தங்கமலை ரகசியம்.வேலுாரில் கிருஷ்ணசாமி ஸ்கூலைத் தாண்டினால் மணி தியேட்டர் வரும். அது பெரிய தியேட்டர் கிடையாது. ஒரு டூரிங் டாக்கீஸ்... அதாவது டென்ட் கொட்டாய். இப்போது அதெல்லாம் போய்விட்டது.
மணலில் பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து நடிகர் திலகத்தை முதன் முதலாக திரையில் பார்த்தேன். இந்த நினைவெல்லாம் மன திரையில் ஓடியது.'நான் நிச்சயம் அப்படி கேள்வி கேட்க மாட்டேன். தயவு செய்து சாரிடம் கேளுங்கள்' என பிரபுவிடம் கெஞ்சினேன்.'ஒரு வேளை அப்படி அவர் எமோஷனல் ஆனால் பேட்டியை நிறுத்திக் கொள்கிறேன்' என உறுதி மொழியும் அளித்தேன்.'சரி பார்க்கலாம். ஒரு மணி நேரம் கழித்து போன் பண்ணுங்க' என்றார் பிரபு.
பிரபுவின் வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்தாலும் பேட்டி கிடைக்குமா கிடைக்காதா என ஒரே டென்ஷன்.எப்போது ஒரு மணி நேரம் ஆகும் என அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒரு வழியாக பிரபுவுக்கு போன் செய்தேன். பிரபு ரிசீவரை எடுத்தார். பேட்டி கிடைக்குமா? எனக்குள் ஒரு பரபரப்பு.'சார், உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன்''சரி, வாங்க... ஆனால் 20 நிமிடம்தான் உங்களுக்கு. நீங்க கேள்வி கேட்டு அப்பா எமோஷனல் ஆயிட்டாருன்னா…நீங்க பேட்டியை நிறுத்திக்க வேண்டியது தான்' என்றார் பிரபு.
அப்பாடா ஒரு வழியாக அனுமதி கிடைத்துவிட்டது…இது போதும்.'ரொம்ப தேங்கஸ் சார். எந்த பிரச்னையும் வராம பார்துக்கொள்கிறேன்' உறுதி மொழி அளித்தேன்.எமோஷனல் ஆன நடிகர் திலகம்ஒரு பொக்கேயுடன் உடனே அசோக் ஹோட்டலுக்கு போட்டோகிராபருடன் கிளம்பிச் சென்றேன். சிவாஜியின் அறைக்கு சென்றதும் பிரபு வரவேற்றார். சிறிது நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.இன்னொரு அறையைக் காட்டி, ' உள்ளே போங்க. அப்பா உங்களுக்காக காத்திகிட்டிருக்காரு' என்று சொன்ன பிரபு இன்னொரு விஷயத்தையும் சொன்னார்..'நான் சொன்னதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்… அப்பா எமோஷனல் ஆகக் கூடாது'பிரபுவும் உள்ளே வந்து ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டார்.
தலையாட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தேன். முதன் முறையாக நடிகர் திலகத்தை நேரடியாக பார்க்கப் போகிறேன்...வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேஷ்டி, நெற்றி யில் விபூதி பட்டை…வெண்மையான தாடிக்கு இடையே கறுப்பு மீசை.வணக்கம் சொன்னேன்.'வாங்க தம்பி' சிம்மக்குரலோன் வரவேற்றார். 'தம்பி எந்த ஊர்?' விசாரித்தார். விபரங்களைச் சொன்னேன்.'முதல்ல இந்த காபியை எடுத்துங்க' மேசையைக் கை காட்டினார். காபி சாப்பிட்ட பின் பேட்டி ஆரம்பித்தது.அவருடைய நாடக வாழ்க்கை, சினிமாவிற்கு வந்தது…வாய்ப்பு அளித்த பெருமாள் முதலியார் என பல விஷயங்களைப் பேசினார்.
'உங்களுக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறித்து சவுகார் ஜானகி ஒரு பேட்டில உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காங்க' என்றேன்.'யாரு ஜானகியா?' ஒரு கணம் என்னைப் பார்த்தார். கண்களில் ஒளி தெரிந்தது. திடீரென எழுந்து நின்றார்.என்னாச்சு இவருக்கு? இந்த விஷயத்தை சொல்லி மாட்டிக் கொண்டுவிட்டோமா..'ஜானகியா சொல்லிச்சு' கேட்ட படியே ஜன்னல் ஓரம் சென்று நின்றார். ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு வெளியே வெறித்துப் பார்த்தார். இதுதான் சமயம் என போட்டோகிராபர் க்ளிக் செய்து தள்ளினார். (சிவாஜி இப்படி நிற்பது எங்கள் இதழில் அட்டைப் படமாக வந்தது)பிரபு என்னை கேள்விக்குறியோடு நோக்கினார்.அவ்வளவு தான் பேட்டி போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.
'அப்பா என்னாச்சு' என பிரபு, நடிகர்திலகத்தை கேட்டார்.'ஒண்ணுமில்லே… ஜானகி நினைப்பு வந்தது. மனசு அப்படியே அந்த காலத்துக்கு போயிடுச்சி' சிவாஜியின் கண்கள் கலங்கியிருந்தன.நானும் எழுந்து கொண்டேன். பின் ஜன்னலை விட்டு மறுபடியும் சோபாவில் அமர்ந்து கொண்டார். பேட்டி தொடர்ந்தது.எல்லாம் முடிந்து கிளம்பும் போது …'தம்பி சென்னைக்கு வந்தா அவசியம் வீட்டுக்கு வாங்க. தஞ்சாவூர் காபி குடிக்கலாம்' என அன்போடு சொன்னார்.ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
May be an image of 1 person and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...