Monday, October 23, 2023

காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்திற்கும் தனிருசி இருக்கிறது.

🌹காருகுறிச்சி அருணாசலம்....
திருமண விழாக்களுக்கு எப்போதும் போடும் முதல் ரெக்கார்டு காருகுறிச்சியின் நாதஸ்வரம்தான். அந்த மங்கல இசையை ஒலிக்க விட்டவுடன்தான் கல்யாண வீடு ஒளிரத் தொடங்கும். உண்மையில் சந்தோஷத்தின் அடையாளமாகவே நாதஸ்வரம் ஒலிக்கிறது.
🌹அந்த வாத்தியம் கரிசல் மனிதனின் அன்பைப் போல வீரியமானது. உக்கிரமானது. நாட்டுப்பசுவின் பாலுக்கெனத் தனி ருசியிருப்பது போலவே காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்திற்கும் தனிருசி இருக்கிறது.
🌹நாதஸ்வர இசை ரசிகர்களுக்கு காருக்குறிச்சியாரிடம் இருந்த மதிப்புக்கும் அன்புக்கும் ஈடுகூற முடியாது. ஒருமுறை, சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசை விழாவில் நடைபெற்ற
🌹 அருணாசலத்தின்
நாதஸ்வரக் கச்சேரியை வானொலி நிலையத்தினர் வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு 12 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பிய நிகழ்வும் அரங்கேறியது என்றால், மக்களுக்கு அருணாசலத்தின் இசையின் மீது இருந்த மதிப்பே காரணமாகும்.
🌹புகழின் உச்சிக்கு சென்றாலும், சிறிதும் கர்வமில்லாமல், எல்லோரிடத்தும் அன்புடனும் பண்புடனும் பழகிவந்தார் அருணாச்சலம்.
🌹அருணாச்சலம், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராஜர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடனும், திரைப்பட கலைஞர்களுடனும் தனது திறமையால் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
தன்னுடைய இன்னிசை எழுப்பும் நாதஸ்வர கலையால்
‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்படத்தில் எஸ். ஜானகி பாட அருணாச்சலம் நாதஸ்வரம் வாசித்துள்ள
🌹‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
நாதஸ்வரம் இருக்கின்ற வரையில், இசை இருக்கின்ற வரையில் அவருடைய பெயர் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகா வித்வான் காருக்குறிச்சி அருணாச்சலம்.
May be an image of 3 people, oboe, clarinet and flute
All reactions:

All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...