Wednesday, October 25, 2023

கார்த்திகேயன்_பாண்டியன்! #நவீன்பட்நாயக்கின் .. . #வாரிசு ???

 

♦ஒடிசா மாநில ஐஏஎஸ் அலுவலரான வி.கே. பாண்டியன் என்ற வி. கார்த்திகேயன் பாண்டியன், ..
♦விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை விண்ணப்பித்த சில நாள்களிலேயே.. திங்கள்கிழமை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
♦மறுநாளான செவ்வாய்க்கிழமையே மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் (5T - 5டி) மற்றும் நவீன ஒடிசா தலைவராக - கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ள அவர்,
♦நேரடியாக முதல்வர் நவீன் பட்நாயக்கின் கீழ் பணியாற்றுவார் என்றும் ஆளுநரின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
♦ஏற்கெனவே, வெளிப்படைத் தன்மை, கூட்டாகப் பணி, தொழில்நுட்பம், மாற்றத்துக்கான தக்க தருணம் என்ற ..
♦இதே '5டி'யின் பொறுப்பு - செயலராக பாண்டியன் பணியாற்றிவந்தார்.
♦பஞ்சாயத்துகள் மூலம் கிராமங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரும் நம்ம ஒடிசா, நவீன ஒடிசா என்ற திட்டத்தை இந்த அமைப்புதான் செயல்படுத்தி வருகிறது.
♦2011 ஆம் ஆண்டு முதல் ஒடிசா முதல்வர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் பாண்டியன்,
♦முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறியப்படுகிறார்.
♦முதல்வர் சார்பில் மக்களிடமிருந்து நேரடியாகக் குறைகளைக் கேட்கிறார் என்பதற்காக
♦மிகக் கடுமையாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் பாண்டியன்,
♦ஆளும் பிஜு ஜனதா தளத்துக்காக அரசியல் வேலைகளில் ஈடுபடுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.
♦தற்போது அமைச்சர் அந்தஸ்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,
♦அனைத்துத் துறைகளின் மீதும் செல்வாக்கு செலுத்தக் கூடிய வாய்ப்பை, அதிகாரத்தை பாண்டியன் பெறுகிறார்.
♦1974-ல் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன்.
♦2000-ல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற பாண்டியன், ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அலுவலராகப் பணியைத் தொடங்கினார்.
♦இதே ஆண்டில்தான் ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக்கும் பதவியேற்று, இன்னமும் தொடர்கிறார்.
♦2007 முதல் 2011 வரை கஞ்சம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான்
♦முதல்வர் நவீன் பட்நாயக்கின் கவனத்தைப் பெற்றார்.
♦கஞ்சம் மாவட்டத்தில்தான் நவீன் பட்நாயக்கின் பேரவைத் தொகுதியான ஹிஞ்சிலி இருக்கிறது.
♦இங்கேயேதான் நவீன் பட்நாயக் எம்.பி.யாக இருந்த அஸ்கா மக்களவைத் தொகுதியும் இருக்கிறது.
♦ஆட்சியராக பாண்டியன் இருந்தபோதுதான், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தேசிய அளவில் இரு முறை கஞ்சம் மாவட்டம் விருது பெற்றது.
♦கஞ்சத்திலிருந்துதான் வி. கார்த்திகேயன் பாண்டியனின் மேல் நோக்கிய பயணம் தொடங்குகிறது.
♦பாண்டியனுடைய திறமையைப் பெரிதும் மெச்சிய முதல்வர் நவீன் பட்நாயக், 2011-ல் அவரை முதல்வர் அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டார்.
♦முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக கார்த்திகேயன் பாண்டியன் உருவானது எப்படி என்பது இன்னமும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விஷயம்.
♦2012-ல்தான் அந்த சம்பவம் நடந்தது. என்னதான் முதல்வர் அலுவலகத்தில் பணி என்றாலும் அந்த நேரத்தில் மற்றவர்களுடன் ஒப்பிட, பாண்டியன் மிகவும் ஜூனியர்தான்.
♦பியாரி மோகன் மொகபத்ரா என்பவர் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர்.
♦நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக் முதல்வராக இருந்தபோது அவரிடம் முதன்மைச் செயலராக இருந்தவர்.
♦மொகபத்ராவை அரசியலுக்குக் கொண்டுவந்தார் பிஜு பட்நாயக்.
♦1997-ல் தந்தை பிஜுவின் மறைவுக்குப் பிறகுதான் - பெரும்பாலும் ஒடிசாவுக்கு வெளியிலேயே இருந்து
♦பள்ளி, கல்லூரிப் படிப்பு எல்லாவற்றையும் டேராடூன், தில்லியில் முடித்தவரான நவீன் பட்நாயக் - அரசியலுக்கு, ஒடிசாவுக்கு வந்தார்.
♦அப்போது மகன் நவீன் பட்நாயக்கிற்கு ஒரு வழிகாட்டியைப் போலத் திகழ்ந்தார் மொகபத்ரா.
♦ஒடிய மொழியில் சரியாக எழுதவோ, வோ தெரியாதவராக இருந்ததாகக் கூறப்படும் நவீனுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாவகையிலும் உதவியாக இருந்து செயல்பட்டவர் மொகபத்ரா.
♦ஆனால், 2012-ல் முதன்முதலாக முதல்வர் நவீன் பட்நாயக் வெளிநாட்டுக்கு - லண்டனுக்கு சென்றிருந்தபோது,
♦கட்சியின் சில தலைவர்களின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற மொகபத்ரா முயற்சி மேற்கொண்டார். இதற்குக் காங்கிரஸும் உதவியதாகக் கூறப்படுகிறது.
♦ஒடிசாவில் அப்போது 144 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பிஜு ஜனதா தளத்துக்கு 104 உறுப்பினர்கள் இருந்தனர்.
♦மொகபத்ராவால் சுமார் 30 பேரின் ஆதரவை மட்டுமே திரட்ட முடிந்தது.
♦இந்த நேரத்தில் பாண்டியன்தான் பெரும்பாலான எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் ..
♦நவீன் பட்நாயக்கிற்காகத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து மொகபத்ராவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தடுத்ததாகக் கூறுவார்கள்.
♦கட்சியிலும் ஆட்சியிலும் கடினமான தருணங்களில் எல்லாம் நவீன் பட்நாயக்கிற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டுவந்ததன் மூலம் அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகிவிட்டார் பாண்டியன்.
♦ஒடிய மொழியினர் அல்லாதவராக, ஐஏஎஸ் அலுவலராக பணியிலிருந்தாலும் நவீனின் முழு விசுவாசியாக இருக்கிறார் பாண்டியன்.
♦நவீன் பட்நாயக்கிற்கு 77 வயதாகிறது. நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தாலும் அடிக்கடி அவர் உடல் நலம் பற்றி வதந்திகள் பரவுவது இயல்பாக இருக்கிறது.
♦23 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருக்கிறார் நவீன்.
♦இதுவரையிலும் தன்னுடைய வாரிசு என யாரையும் அவர் முன்னிறுத்தியதில்லை.
♦ஐஏஎஸ் பணியை ராஜிநாமா செய்துவிட்டு அமைச்சர் அந்தஸ்தில் பாண்டியனை பணியேற்கச் செய்திருப்பது ..
♦அதற்கான நகர்த்துதலா என்று உறுதிபடத் தெரியவில்லை.
♦ஏனெனில், என்னதான் அரசிலும் கட்சியிலும் பாண்டியனுக்கு செல்வாக்கு இருந்தாலும் அவர், வெளி ஆள்,
♦ஒடிய மொழி பேசாதவர் என்பதாகத்தான் பார்க்கப்படுவார்.
♦ஒடிசாவைச் சேர்ந்தவரான ஐஏஎஸ் அலுவலர் சுஜாதா (தற்போது ஒடிசா மகளிர் இயக்க மேலாண் இயக்குநராக இருக்கிறார்) என்பவரைத்தான் கார்த்திகேயன் பாண்டியன் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
♦விரைவில் பிஜு ஜனதா தளத்தில் பாண்டியன் இணையும் செய்தியும் வெளியாகலாம்.
♦நவீன் பட்நாயக்கிற்கு நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தாலும் ..
♦ஒடிசா அரசியலில் கார்த்திகேயன் பாண்டியனை மக்களும் பிஜு ஜனதா தளமும் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என உறுதிபடக் கூற இயலாது.
♦மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் தேர்தல் வரவிருக்கிறது.
♦முதல்வர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து - அரசுத் திட்டங்களின் வெற்றி அல்ல - பேரவைத் தேர்தல் வெற்றியையும் பாண்டியன் திட்டமிட வேண்டியிருக்கும்.
♦23 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நவீன், மீண்டும் வெல்வதிலும் முதல்வராகத் தொடருவதிலும் பாண்டியனுக்குப் பெரும் பங்கு வந்து சேர்ந்திருக்கிறது.
♦எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல, இந்த அந்தஸ்து உயர்வு காரணமாக, பிஜு ஜனதா தளத்தினரையும்கூட சேர்த்தே அவர் சமாளிக்க வேண்டியிருக்கும்.
♦கார்த்திகேயன் பாண்டியனின் தற்போதைய நியமனத்தை காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
♦அரசுத் துறைப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நேரடியாக அரசியலுக்கு அவர் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளன.
♦இப்போது ஆட்சிப் பணியில் சிறக்கப் பணியாற்றி, முதல்வராக இருப்பவரின் நம்பிக்கையைப் பெற்று ..
♦ஒடிசா அரசியலில் பெரும் புயலை எழுப்பிக் கொண்டிருக்கிறார் தமிழரான ஒருவர் - கார்த்திகேயன் பாண்டியன், மதுரைக்காரர்!
May be an image of 2 people and dais

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...