Thursday, October 26, 2023

அதிக போர்களை சந்தித்த நாடு!

 "இந்த உலகக்கோப்பையில் முதலில் வெளியேறும் அணி ஆப்கானிஸ்தானாக இருக்கும்"என கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பு இருந்தது!

ஆப்கானிஸ்தான் நாடு நல்ல வளங்களை கொண்ட நாடாக இருந்தாலும்,தற்போது ஒரு துயரத்தின் நாடாகவே இருக்கிறது!!
மிகப்பெரிய பழமையான பாரம்பரியத்தை கொண்ட நாடாக இருந்தாலும் அதிக போர்களை சந்தித்த நாடு!
உள்நாட்டு போர்,பழமைவாதம்,வறுமை,ஊட்டச்சத்து குறைபாடு என தடுமாறிக்கொண்டு இருந்த நாட்டில் தற்போது பூகம்பமும் புரட்டி போட்டுள்ளது.
அந்த நாட்டில் வந்து ஜொலிக்கும் பீனிக்ஸ் பறவைகள்தான் கணிப்புகளை பொய்யாக்கி தற்போது கலக்கி கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்.
தற்போது ஆப்கானிஸ்தானுக்கு உற்ற நண்பனாக பல உதவிகளை செய்யும் நாடு இந்தியா!குறிப்பாக ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் தாராளமாக இந்தியாவில் பயிற்சியில் ஈடுபடலாம் என வலிமையான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உருவாவதற்கு அடித்தளம் இட்டதும் இந்தியாதான்.
ஆப்கான மக்களும்,ரசிகர்களும் இந்தியாவை,இந்திய கிரிக்கெட் அணியை உயிராக விரும்புகிறார்கள்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பாக் எதிரான டி-டிவெண்டி கிரிக்கெட் போட்டியில் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றிப்பெற்றவுடன் ஆப்கான் ரசிகர்கள் டிவியில் இந்திய வீரர்களுக்கு முத்தம் கொடுத்தனர்.இதை வைத்தே அவர்கள் அன்பை புரிந்துக்கொள்ளலாம்.
நல்ல சம்பளம் இல்லை,விளம்பர வருமானம் கிடையாது ஆனால் மனப்பூர்வமாக தன் நாட்டுக்காக விளையாடி இந்த உலகக்கோப்பை தொடரில் இரண்டு ஜாம்பாவான்களை பந்தாடியிருக்கிறார்கள்.
தொடர்ந்து தன்னை வஞ்சிக்கும் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானுக்கு தீபாவளி போல!
சபிக்கப்பட்ட நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிசம் தான் தற்போதைய ஆப்கானிஸ்தான் அணி!!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்!!
May be an image of 5 people and text
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...