Wednesday, October 25, 2023

எஸ் பி முத்துராமன் எழுத்தில்...

 திட்டமிட்டபடி அதிகாலை 4 மணிக்கு அங்கே யூனிட்டோடு போய் சேர்ந்தோம். அங்கே அப்படி ஒரு கடுங்குளிர். அதை தாங்கிக்கொண்டு ஒட்டுமொத்த யூனிட்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டோம். அந்த அதிகாலை நேரத்தில் திடீரென ஒரு பரபரப்பான சத்தம் கேட்டது. குளிர் தாங்கமுடியாமல் அங்கே வேலை செய்து கொண்டிருந்த உதவி இயக்குநர் வி.ஏ.துரை மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அவரை அருகில் இருந்த ஜெனரேட்டர் வேனுக்கு தூக்கிக்கொண்டு போய் வெப்ப கதகதப்பில் வைத்து கை, கால்களை தேய்த்துவிட்டு இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தோம். அந்த உதவி இயக்குநர் வி.ஏ.துரைதான் பின்னாளில் ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ போன்ற படங்களைத் தயாரித்தவர்.

'புதுக்கவிதை’ படத்தில் ரஜினி மோட்டார் சைக்கிளில் ரயிலை துரத்துவதுபோல ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ரயில் டிராக்கும், சாலையும் அருகருகே இருக்கும் இடம் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையையொட்டி ஒரு ரயில் டிராக் செல்வது தெரிய வந்தது. அங்கு படப்பிடிப்பை ஆரம்பித்தோம். ரயிலில் கேமராவை வைத்து ரஜினி ரயிலை துரத்துவதை படமாக்கினோம். கேமராவுக்கு நேராக ரஜினி இருந்தால் தான் காட்சி சரியாக அமையும். ரயில் போகும் வேகத்துக்கு இணையாக, கொஞ்சமும் பிசகாமல் ரஜினி மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.. காட்சி ரொம்ப சிறப்பாக அமைந்தது.
ரயிலில் ஒரு புதுமணத் தம்பதி ஒருவரையொருவர் செல்லமாக கொஞ்சிக் கொண்டே வருவது போல காட்சி. இளம் தம்பதி வேடத்துக்கு ஜோடியை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது தான் மூர்த்தி என்ற இளைஞனின் ஞாபகம் எனக்கு வந்தது. அவர் ரொம்ப நாட்களாகவே என்னிடம், ‘‘உங்க படத்துல வேலை பார்க்கணும். அவுட்டோர் ஷூட்டிங்னாலும் என்னை அழைச்சுட்டுப் போங்க சார்’’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவருக்கு அந்த ரோலை கொடுக்கலாம் என்ற யோசனை அப்போது எனக்கு வந்தது. அவரிடம் விஷயத்தை சொன்னதும், மகிழ்ச்சியோடு அந்த சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த மூர்த்தி தான் இன்றைக்கு மிகவும் பாப்புலராக இருக்கும் நடிகர், இயக்குநர் பார்த்திபன் அவர்கள். பின்னர் அவர் உதவி இயக்குநராகி ‘புதியபாதை’ போன்ற புதுமையான படங்களை இயக்கினார். என் இயக்கத்தில், தாணு அவர்கள் தயாரித்த ‘தையல்காரன்’ படத்தில் நாயகனாகவும் நடித்தார்.. ஒரு விழாவில் பரிசு கொடுப்பதாக இருந்தாலும், ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக இருந்தாலும் தனக்கென ஒரு பாணி, பேச்சு மொழி என்று வித்தியாசமாக செய்து அசத்துவார். புதுமை விரும்பி பார்த்திபன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
May be an image of 1 person and musical instrument
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...