Tuesday, October 24, 2023

வங்கிகளில் கணினி பயன்பாடு :

 வங்கிகளில் ,வங்கிக்கணக்கில் தொகை செலுத்து வதற்கோ ,பெறுவதற்கோ செல்லும் சமயத்தில், பரிவர்த்தனை செய்ய இயலாமல் , கணினி வேலை செய்யவில்லை - சர்வர் வேலை செய்யவில்லை- சப்ளையார் வேலை செய்யவில்லை - மின்சார விநியோகம் இல்லை என்கின்ற காரணத்தால் மேற் கண்ட பணியினை செய்திட வங்கி பணியாளர்களால் இயலுவதில்லை.

கணினி இயங்கும் வரை வங்கிப்பணியாளர் அவருடைய இருக்கையில் அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதும் - வாடிக்கையாளர்கள் வரிசையில் கால் கடுக்க நின்றுகொண்டிருப்பதும் வாடிக்கை யான தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது .
அவசரகாலங்களில் இச்சூழல் சிரமமான நிலையைத்தான் உருவாக்குகின்றது.
கணினி ,பயன்பாட்டுக்கு வரும் முன்பு வங்கியில் கணக்குப் புத்தகத்தில் மேற்கண்ட பணிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
அதேபோல் , கணினி இயங்காத சமயங்களில் ,பழைய முறையில் சில மணி நேரங்கள் ,முற்காலத்தில் செய்ததைப்போல் பதிவேடுகளில் மேற்கண்ட பரிவர்த்தனையை செய்து வாடிக்கையாளர்களுக்கு காலவிரயம் ,மன உளைச்சல் ,அதிக நேரம் வங்கியில் காத்திருக்கும் நிலை இவைகள் தவிர்க்கப்பட்டால் நலமாக இருக்கும்.
வங்கிகள் இம்முறையினை பின் பற்ற முன் வர வேண்டும்.
வரணும் என்பது எதிர் பார்ப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...