Monday, October 30, 2023

இது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு உணவாகும்.

 ஷவர்மா என்பது ஒரு கம்பியில் மசாலா தடவிய இறைச்சியை ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி வெப்பத்தில் நன்றாக வேக வைத்து பிறகு அதை துருவி அதனுடன் மயோனைஸ், முட்டைக்கோஸ் இவற்றையெல்லாம் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ரொட்டியில் வைத்து கொடுப்பதே ஷவர்மா என இன்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு உணவாகும்.
இதில் சிக்கன் ஷவர்மா, மட்டன் ஷவர்மா, ஃபிஷ் ஷவர்மா, எக் ஷவர்மா,என்று பல வகைகள் இருந்தாலும் சிக்கன் ஷவர்மாவையே அதிகம் விரும்பி அனைவரும் சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு தயாரிக்கப்படும் இந்த ஷவர்மா நம் உயிரையே கொல்லும் அளவிற்கு கேடு விளைவிக்கக் கூடியது.
அதாவது சாதாரணமாக ஒரு இறைச்சியை வெளியில் வைத்த சில மணி நேரத்திலேயே கெட்டுவிடும். இந்த ஷவர்மா செய்வதற்காக இறைச்சியை பல மணி நேரமாக வெளியிலே வைத்து அதை சமைத்துக் கொடுக்கின்றனர். எனவே அந்த இறைச்சி கெட்டுப் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.
சாதாரண இறைச்சியை 45 நிமிடங்கள் ஆவது வேகவைக்க வேண்டும். ஆனால் ஷவர்மா செய்யும் இடத்தில் கூட்டத்தின் காரணமாக அவசரமாக செய்வதால் வேகாத இறைச்சி கலப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இது போன்ற வேகாத இறைச்சியை உண்பதால் நமக்கு கேன்சர் நோய், செரிமான கோளாறு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஷவர்மாவில் இருக்கும் இறைச்சி கெட்டுப் போனதா என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் பச்சை காய்கறிகளையும் சேர்த்து தருவதால், வாங்குபவர்கள் அது கெட்டுப் போயிருந்தாலும் அதைப்பற்றி அறியாத அளவிற்கு ரசித்து சாப்பிடுகின்றனர்.
ஷவர்மா கடைகளில் தரப்படும் மயோனைஸ் அவர்களே தயாரிப்பது. இது பச்சை முட்டை, வெள்ளைப் பூண்டு, எண்ணெய், மைதா போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
பச்சை முட்டையால் செய்யப்பட்ட மயோனைஸ் பலமணி நேரம் இருப்பதால் இதுவும் உடம்பிற்கு கெடுதல் விளைவிப்பதாகவே கூறப்படுகிறது.
ஷவர்மா செய்வதற்கு பயன்படுத்தப்படும் ரொட்டியின் பெயர் கூபுஸ் என்பார்கள். இதை மைதா மாவு, கோதுமை மாவு, ஈஸ்ட், மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யக் கூடியது.
மேலும் இதில் கோதுமை மாவை விட மைதா மாவு அதிகமாக சேர்க்கப்படுகிறது. மைதா நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
ஷவர்மாவில் உள்ளடக்கி இருக்கும் ஒரு உணவுப் பொருள் கூட நம் உடம்பிற்கு நல்லதல்ல என்றும் இதையெல்லாம் நாம் தவிர்த்து விட்டு பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தப் படுகிறது........
May be an image of 3 people, burrito, gyro and text
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...