Sunday, October 29, 2023

பசும் பொன் முத்து ராமலிங்கத் தேவர் குருபூஜை விழா...

 மாபெரும் கட்சிகள், தேசிய கட்சி கள், மாநில கட்சிகள், இயக்கங்கள், அமைப்பாளர்கள்,என இத்தனை லட்சம் மக்களை இந்த குக்கிராமத்திற்கு அழைத்து வருவது எது?"

முதலமைச்சர் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை, இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அணியணியாக திரண்டு வருகிறார்களே!
தென் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் எப்படி இந்த நிகழ்வு ஆண்டு தோறும் நடந்தேறி வருகிறது.
தமிழகத்தின் எந்த மூலையில் இருந்து கிளம்பினாலும் பல ஆயிரம் போஸ்டர்கள், கட்அவுட்டுகள் , பல ஆயிரம் கார்கள் , பல லட்சம் மக்களை கடந்து தான் அந்தக் கிராமத்திற்குள் நுழைய முடியும்.
இதுவரை பசும்பொன் செல்லாதவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் அக்டோபர் 30 அன்று பசும்பொன் சென்று பார்த்து வாருங்கள். புதுவித அனுபவத்தை பெறுவீர்கள்.
முளைப்பாரி தூக்கி குலவை ஒலியோடு அணிவகுப்பு, பால் குடம் ஏந்தும் பெண்கள், இளைஞர்கள் தீச்சுடரேந்தி ஜோதி ஓட்டம் , காவடி ஆட்டம் , தேவராட்டம், சிலம்பாட்டம் என்று ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஆடிப்பாடி செல்வதை பசும்பொன் அடைவதற்குள் ஒரு ஆயிரம் முறையாவது காண்பீர்கள்.
பிறந்த குழந்தைகளை தேவர் சிலை முன்பு போட்டு திருநீறு அணிவிப்பது , முடியை காணிக்கை செலுத்துவது, மாலையிட்டு விரதமிருந்து தரிசனம் செய்வது....... இப்படி பல சநாதன நிகழ்வுகள் ...... ஒரு கோவிலுக்குள் நுழைந்திட்ட உணர்வு உங்களுக்கு நிச்சயம் ஏற்படும். குறிப்பாக பழனி அல்லது திருச்செந்தூரில் இருக்கும் உணர்வு உங்களைப் பற்றிக்கொள்ளும்.
இவை எல்லாம் அவரது சாதி சார்ந்த மக்கள் சாதீய உணர்வோடு செய்கிறார்கள்...
அரசியலும் இந்நிகழ்வில் ஒட்டிக் கொண்டதால் திரும்பிய பக்கமெல்லாம் அன்னதான பந்தல்கள் , நீர் பந்தல், மோர் பந்தல், அரசியல் தலைவர்களின் படங்கள், தோரணங்கள், கொடிகள் என மாநாடு நடைபெறுவது போன்றிருக்கும்.
மதியம் 12 மணி வாக்கில் தான் சாகசங்களை பார்க்க நேரிடும். பஸ்ஸின் மேற்கூரை, வாகனங்களின் மேற்கூரை என்று அவர் சாதி சார்ந்த இளைஞர்களின் உற்சாகம் இதர சாதி மக்களை பயமுறுத்தவே செய்யும்.
அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நூறு வண்டிகளில் வந்து தங்கள் பலத்தை காட்டுவார்கள்.
மதியம் 1 மணி அளவில் ஏதேனும் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து பார்த்தால் உங்களால் சொற்பமாக பல லட்சம் மனித தலைகளை பார்க்க முடியும். உங்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்காமல் ஊர் திரும்புவீர்கள்.
அவர் சாதி சார்ந்த மக்கள் சாதி உணர்வோடு... செல்கிறார்கள்...
ஆனால்...
மாபெரும் அரசியல் கட்சிகள்...
ஆளும் கட்சி... எதிர்க்கட்சிகள்...
சநாதன ஒழிப்பு போராளிகள்...
சநாதன ஆதரவு போராளிகள்...
ஜாதி வெறி யர்கள்...
ஜாதி ஒழிப்பாளர்கள் என்று வேறுபாடு இல்லாமல் ஆண்டு தோறும் போட்டி போட்டுக் கொண்டு ஓடுகிறார்கள்..
ஏன்...???
எதற்காக...
நமது ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள் ஆதாயம் இல்லாமல் எங்கேயும் ஓடமாட்டார்கள்...
இந்த ஓட்டு பொறுக்கி அரசியல் வாதிகள் பசும் பொன் நோக்கி ஓடுவது ஏன்...!!!???
முத்துராமலிங்கத் தேவர் மீது உள்ள பற்றினாலா... மரியாதையினாலா...
அல்லது...????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...