Sunday, October 22, 2023

பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால், வாசலில் நிற்கும் குலதெய்வம் கூட உங்கள் வீட்டிற்குள் விரும்பி வந்துவிடும்.*

 பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். அதிலும் வைகாசி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ குத்தம் இருந்தால், குலதெய்வத்திற்கு கோபம் இருந்தால், குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த வைகாசி பௌர்ணமி தின வழிபாட்டை மேற்கொண்டால், எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வம், எல்லா தடைகளையும் தாண்டி நம் வீட்டிற்குள் குடி கொள்ளும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

உங்கள் வீட்டு குல தெய்வம் பெண் குலதெய்வமாக இருந்தால் அதை உங்களுடைய வீட்டிற்குள் எப்படி வரவேற்பது,
உங்களுடைய வீட்டு குல தெய்வம் எந்த குலதெய்வமாக இருந்தாலும், முடிந்தால் அந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு வருவது மிகவும் சிறப்பானது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த முறைப்படி வழிபாட்டினை செய்து பாருங்கள்.
இன்றைய தினமே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நாளை காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள உங்களுடைய குலதெய்வத்தின் திருஉருவப் படத்திற்கு வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
பௌர்ணமி அன்று அம்மன் வழிபாடு குறிப்பாக பவுர்ணமி அன்று அம்மன் கோவில்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைப்பது சிறப்பு. மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்து வேண்டினால் சுபகாரியத் தடை நீங்கும். ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் அதிகரிக்கும். உங்கள் வீட்டினருகில் அம்மன் கோவில் உள்ளதுபெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். பௌர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த பௌர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். மேலும் பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களைப் பெற முடியும்.
பௌர்ணமியில் பொதுவாக, அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.பௌர்ணமி அன்று பெண்கள் விரத முறை மேற்கொள்வது சிறப்பு.
வீட்டில் வழிபடும் முறையும் பலன்களும்
மாதத்தில் ஒரு முறை வரும் பௌர்ணமி தினத்தன்று பெண்கள் வீட்டில் விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்வதன் மூலம் மாங்கல்ய பலம் கிட்டும். அத்துடன் நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். தனலாபம் பெருகும் , குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...