Thursday, November 30, 2023

நான் புரிந்துகொண்ட வரையில் சென்னை மாநகரம் என்றுமே மழைநீர் வடிகால்வசதி பெற இயலாது. இதுபோன்ற மழை வெள்ளை பாதிப்புகள் அதன் தலைவிதி.

 சென்னையை சொந்த ஊராக கொண்ட பயலுங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க!

காரணம் அவனுங்க படிப்பறிவில்லா தற்குறிங்க தான்!
ஐஏஸ்,ஐபிஎஸ், வக்கீல் ,மருத்துவர் எவரும் அங்கே உருவாக மாட்டாங்க!
அங்கே பிரபல கல்லூரி இருக்கும்,அந்த பரதேசிபயலுங்களுக்கு சீட்டு கிடைக்காது!

ஹலோ...நான் மடிப்பாக்கத்துலேந்து மனோகர் பேசறேன். இங்கே ஒரே மழை. மாம்பலத்துலயும் மழையா?
ஆமா சார்
நான் நிக்கற இடத்துல தொடை வரைக்கும் தண்ணீ நிக்குது.
அப்படியா? நான் நிக்கற இடத்துல பாதம் வரைக்கும் தான் தண்ணீ இருக்கு
பரவாயில்லையே
நான் முதல் மாடீல நிக்கறேன்.

2015ல் மழை சென்னைக்கு கொடுத்த பாடத்தை உதாசீனப் படுத்தி, எந்த ஒரு முன்னேற்றமோ முயற்சியோ செய்யாமல் மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் இவர்களுக்கு ஓட்டு போட்டவர்களைச் சொல்ல வேண்டும்.
May be an image of body of water and text that says 'DINAMALAP மடிப்பாக்கம், சென்னை தேங்கிய மழைநீரால் தீவுகளானது தலைநகரம்'

சரஸ்வதியாய் திகழ்ந்து விளங்கும் வாணியம்மா.

 கலைவாணி என்ற இயற்பெயருடன் திரை இசை உலகிற்கு வந்தவர், அவருக்குள்ளேயே இசை கலை இருந்ததாலோ என்னவோ பெயரில் இன்னொரு கலை வேண்டாம் என்று நினைத்து வாணியாக இசை குடும்பத்தில் இருந்து வந்த தமது கணவர் ஜெயராம் அவர்களை மணம் புரிந்து வாணி ஜெயராமாக பம்பாய்க்கு வங்கி பணி மாறுதல் பெற்று சென்றார். அங்கு தன் இசை பயணத்தை தொடங்கியவர் சென்னையில் நடைபெற்ற ஒரு கச்சேரிக்காக தான் பாடிய ஹிந்தி பாடல்களின் தொகுப்பை பாடி பயிற்சி எடுத்து கொண்டிருந்த சமயம், அதை கவனித்த இசை மேதை திரு.எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் அழைப்பின் பேரில் முதன் முதலாக தமிழ் திரை இசை உலகில் தாயும் சேயும் என்ற படத்திற்காக பாடல் பாடினார். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. முதல் படம் வெளிவராத சூழலில் அதே இசை நிகழ்வை கவனித்து மலையாளத்தில் 1973ல் வெளியான சொப்னம் என்ற படத்திற்கு இசை அமைத்த இசை மேதை திரு.சலீல் சவுத்ரி அவர்கள் வாயிலாக “நின்னை ஞான் நென்றோ விளித்து (சவர்யோவிதத்தில் விதர்னொரு)” பாடலை பாடி அப்பாடல் பயங்கர ஹிட்டடித்தது.

தொடர்ந்து சங்கர் கணேஷ் இசையில் 1973ல் வீட்டுக்கு வந்த மருமகள் படத்திற்காக முதன் முறையாக தமிழில் ஜோடி பாடலாக டி.எம்.எஸ் அவர்களுடன் “ஓரிடம் உன்னிடம்” என்ற பாடல் பாடினார். பின் முதன்முதலாக மெல்லிசை மன்னரின் இசையில் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திற்காக “மலர் போல் சிரிப்பது” பாடல் பாடி இருந்தாலும், 1974ல் தீர்க்க சுமங்கலி படத்திற்காக இவர் பாடிய “மல்லிகை என் மன்னன் மயக்கும்” பாடல் மந்தைவெளி மயிலாப்பூர்களை தாண்டி மலேசியா என உலக நாடுகளில் இருக்கும் இசை ரசிகர்களை வானொலி மூலமாக சென்று அடைந்தது இவரது புகழையும் சேர்த்து. பிறகு அதே 1974ஆம் வருடம் விஜயபாஸ்கர் அவர்களின் இசையில் வந்த எங்கம்மா சபதம் படத்திற்காக “அன்பு மேகமே இங்கு ஓடி வா” பாடலை சோலோவாகவும், பின் பாடும் நிலாவுடன் டூயட்டாகவும் பாடி அதிரி புதிரி ஹிட்டடித்தது தமிழ் திரை இசை கண்ட சம்பவமானது. 1975ஆம் வருடம் அபூர்வ ராகங்கள் படத்தில் இவர் “கேள்வியின் நாயகனே” என சசிரேகாவுடனும் “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை” என தனியே பாடியதுடன், ஏழு ஸ்வரஙகளில் பாடலுக்காக முதன் முறையாக தேசிய விருதை பெற்றார். அன்று தொடங்கிய இவரது இசை பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, மார்வாரி, பெங்காலி, ஆங்கிலம் என 19 மொழிகளில் பாடப்பட்டு அந்தந்த மொழி மக்களை தமது குரலால் பரவசபடுத்தினார்.
1977ஆம் ஆண்டு வெளியான புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வரும் “பூந்தென்றலே நல்ல நேரம்” பாடலே பாடகர் ஜெயச்சந்திரனுடன் இணைந்து இசைஞானியின் இசையில் வாணிமா பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடதக்கது. 1979ல் வெளிவந்த அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் வரும் “நானே நானா யாரோ தானா” பாடல் மூலம் தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகி விருதை பெற்றார். முள்ளும் மலரும் படத்தில் இவர் பாடிய “நித்தம் நித்தம் நெல்லு சோறு” பாடல் இசைஞானியின் இசையில் மோர்சிங், கடம் என வெறும் இரண்டே இரண்டு இசை உபகரணங்களை கொண்டு இசை அமைக்கபட்டது என்பது பெருமைக்குரியது. மல்லிகை என் மன்னன் பாடல் கொடுத்த பெருமையையும் புகழையும் போல இசைஞானி இசையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இவர் பாடிய “என்னுள்ளில் எங்கோ ஏங்கும்” பாடல் அனைத்து தமிழ் திரையிசை ரசிகர்களாலும் போற்றி கொண்டாடப்பட்டது. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன் பாடலை பற்றி மட்டும் ஒரு தனி பதிவே போடலாம்.. இசைஞானியின் இசை ஒரு புறம் அதகள படுத்த... வாணியம்மா தன் குரலால் அந்த பாடலை அடிபொலியாக்கி இருப்பார். நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா பாடல் அன்றைய இசை ரசிகைகளின் இன்ப கேளிக்கை கொண்டாட்ட பாடலாக வலம் வந்தது குறிப்பிடதக்கது.
இசைஞானியின் இசையில் வாணிமா பாடிய சில பாடல்களின் தொகுப்பு:
ஒரே நாள் உனை நான் நிலாவில்
மான் கண்டேன் மான் கண்டேன்
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
ஆள அசத்தும் மல்லியே மல்லியே
எங்கே நான் காண்பேன் என்
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ
உன்னைக் காணும் நேரம்
வெண்ணிலா ஓடுது கண்ணிலே
சுக ராகமே சுக போகமே
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது
ஏபிசி நீ வாசி எல்லாம் உன்
பூவான ஏட்ட தொட்டு பொன்னான
சங்கீதம் என்பது சினிமா என்பதை தாண்டி லலித சங்கீதம், சாஸ்திரீய சங்கீதம், உப சாஸ்திரீய சங்கீதம், நாட்டுபுற சங்கீதம் என அனைத்து இசையின் தளங்களிலும் தனக்கென தனி பாணியை உருவாக்கி இன்று வரை அனைத்து இசை ரசிகர்களின் மனதிலும் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதியாய் திகழ்ந்து விளங்கும் வாணியம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... ❤❤❤
May be an image of 1 person

பேச்சாலேயே காங்கிரஸை வீழ்த்தினர்.

 தங்களின் அடுக்கு மொழி... அலங்கார பேச்சால் தமிழக அரசியலை முதன் முதலில் திசை வீழ்த்தி ய கட்சி திமுக....

அண்ணாதுரை தொடங்கி , அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் இணைந்து பேச்சாலேயே காங்கிரஸை வீழ்த்தினர்.
1967 ல் திமுகவின் பேச்சுத்திறனால் வீழ்ந்த காங்கிரஸ் இன்று வரை எழ முடியாமல் , இறுதியில் திமுக வின் காலடியிலேயே சுருங்கிப் போய் விட்டது.
இப்படி ஒரு கேடுகெட்ட நிலை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்பட்டதில்லை...
எம்.ஜி.ஆர் அவர்களின் தனித்துவம் காரணமாக திமுக சில முறை தோற்கடிக்கப்பட் டாலும் , இன்று வரை திமுக வின் பிடியில் தமிழக அரசியல் இருப்பதற்குக் காரணம் அக்கட்சியின் அலங்கார பேச்சுதான். சரக்கே இல்லாமல் பேச்சை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு வெற்றி பெற்று விட முடியும் என்று அக்கட்சி பலமுறை நிரூபித்து விட்டது.
ஆனால், பேசியே வளர்ந்த கட்சியை பேச்சிலேயே வீழ்த்திக் கொண்டிருப்பவராக இன்று அண்ணாமலை தோன்றியிருக்கிறார்.
அடுக்கு மொழி, வாய் ஜாலம், அவ்வப்போது அநாகரீகம்... நாலாந்தர நகைச்சுவை என்பதே திராவிடப் பேச்சின் பலமாக இருந்த நிலையில், அறிவு பூர்வமாகவும் அர்த்த பூர்வமாகவும் பேசி, பேச்சாலேயே திமுகவை வீழ்த்தும் கலை அண்ணாமலையிடம் அபரிமிதமாக குடி கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
அவருடன் மோதிய செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வர முடியாமல் தவிக்கிறார். பி.டி.ஆர்., பொன்முடி, எ.வ.வேலு போன்றவர்கள் அண்ணாமலையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒடுங்கி விட்டனர்.
பல அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதில் அளிப்பதையே தவிர்க்கின்றனர்.
இன்று மனோ. தங்கராஜ் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்.
எதற்கு வீண் வம்பு என்று,பச்சை பாக்கெட் பால் நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு விட்டது.
இத்தனைக்கும் காரணம் அண்ணாமலை உடனுக்குடன் தரும் பதிலடிகள்தான்.
பேச்சு அவருக்கு பெரும் பலம். அரசியல் மேடை மட்டுமின்றி இதர மேடைகளிலும் ஆழமாகப் பேச அவரால் முடிகிறது.
அந்த காலத்தில் , அதிகார பலத்துடன் இருந்த திமுக வை எம்.ஜி.ஆரின் இமேஜ் வீழ்த்தியது. இன்று அதிகாரத்தில் இருக்கும் திமுக வை அண்ணாமலை தன் பேச்சால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்.
பேச்சால் வளர்ந்த திமுகவுக்கு பேச்சே சவாலாக மாறியுள்ளது.
தமிழக அரசியல் மற்றொரு திருப்பத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது.

நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.

 நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.

முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்து, இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தயாரிப்பாளரின் கதை இது.
முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுப்படத்தையும் முடித்துவிடும் தேவரின் வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல, யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.
சாண்டோ சின்னப்பா தேவர் - யார்?
இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு 'சாண்டோ சின்னப்பா தேவர்' என்ற பெயர் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. 'தேவர் ஃபிலிம்ஸ்' என்று சொன்னால் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் மிருகங்களை வைத்துப்படம் எடுத்தவர் என்று சொன்னால் அனைவரும் அறிவர்.
கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்தார் ’மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்’. சுருக்கமாக, `எம். எம். ஏ. சின்னப்பா தேவர்` என்றழைக்கப்பட்ட சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுநர். நல்ல உடற்கட்டு உள்ளவர்.
நவீன உடலழகுக் கலையின் தந்தை என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய பாடிபில்டர் ’யூஜின் சாண்டோ’ மீது கொண்ட ஈர்ப்பால், அக்கால பயில்வான்கள் பலரையும் போல தனது பெயரோடு சாண்டோ எனும் அடைமொழியைச் சேர்த்து அழைக்கப்பட்டார். அவர் எடுக்கும் படங்களில் சிறிய வேடங்களிலும், அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார். மதுரைவீரன் படத்தில் சங்கிலிக் கருப்பனாக மிகக் குறைவான நேரமே வருவார். ஆனால் அவருடைய உருவம் அப்படியே மனதில் நிற்கும்.
சினிமாவில் நுழையும் முயற்சியும்
டூரிங்க் டாக்கிசில் சினிமா பார்ப்பது சின்னப்பாவுக்கு ருசிகரமான அனுபவம். கூலி வாங்கியதும் ஓடுகிற ஒரே இடம் அதுதான். மவுனப்படங்கள் மட்டுமே வெளியான காலகட்டம் அது. வெளிநாட்டு சண்டைப்படங்கள் என்றால் தேவருக்கு அத்தனை இஷ்டம். மறுநாள் நண்பர்களுடன் சேர்ந்து அட்டைக்கத்தி வீசுவார், ஆக்ரோஷமாகப் பாய்ந்து குத்துவார், குதிரை ஏறிப் பறக்கும் சின்னப்பாவின் ஆசையில் ஆற்றங்கரைக் கழுதைகள் அல்லல்படும், கிணற்றில் நீர் இறைக்கும் தாம்புக் கயிறு சின்னப்பாவை மரத்துக்கு மரம் தாவும் டார்ஜனாக மாற்றுமாம்.
1931-ஆம் ஆண்டு சினிமா பேசத் தொடங்கியது. ஒலியோடு கூடிய ஒளிச்சித்திரங்களில் நடிக்க நடிகர் நடிகையர் தேவை எனும் விளம்பரங்களோடு, பிரபல சினிமா நிறுவனங்களின் முகவரிகள், அக்கால பத்திரிகைகளில் வரத்தொடங்கின. உற்சாகமான சின்னப்பத்தேவர் தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாரானார். பல சினிமா நிறுவனங்களுக்கு தனது புகைப்படத்துடன் வாய்ப்புக் கேட்டு கடிதம் எழுதினார். எதற்கும் பதில் வரவில்லை. இரவு தெருக்கூத்துகளில் ஆடிப்பாடி ஆத்ம திருப்தியடைந்தார்.
அடிப்படை சங்கீதம், ராக பாவம் குறித்தெல்லாம் தெரியாவிட்டாலும், கேள்வி ஞானத்தில் சொற்களைச் சேர்த்து இஷ்டத்துக்குப் பாடுவார். அதற்கே கைத்தட்டல்கள் தொடர்ந்தன.
நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. அதற்கு திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டனர்.
பிரபல ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பத்தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
சென்ட்ரல் ஸ்டுடியோவில் எடிட்டராகப் பணியாற்றிய தன் உடன்பிறந்த தம்பி, எம்.ஏ.திருமுகத்தை அழைத்து தனது முதல் படத்தை இயக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார் சின்னப்பா தேவர். மனோகரா திரைப்படத்தின் எடிட்டர் அவர்தான். ஆனால், கதை பிடிக்கவில்லை என்று சொல்லி தம்பி மறுத்துவிட, தயாரிப்பாளர் எஸ்.ஏ.நடராஜன் இயக்கத்தில் 1955ஆம் ஆண்டு தேவர் தயாரிப்பில் வெளியான `நல்ல தங்கை’ சுமாராகத்தான் ஓடியது. ஆனாலும் அவர் துவண்டுவிடவில்லை.
அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கி, கதாநாயகனாக எம்.ஜி.ஆரையும் ஒப்பந்தம் செய்துவிட்டார். தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து படம் தயாரிக்க விருப்பமில்லாமல், புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க நினைத்தவருக்கு, தன் நிறுவனத்துக்கான பெயர் தேர்வில் சிக்கல் நீடித்தது. தமிழ் சினிமா செழிப்பாக இருந்த அந்த காலகட்டத்தில் தினம் ஒரு சினிமா கம்பெனி உதயமாகின. மருதமலை முருகன் ஃபில்ம்ஸ், ஸ்ரீ வள்ளி வேலன் கம்பைன்ஸ், சிவசுப்ரமணியன் மூவீஸ், செந்தில் ஆண்டவர் கிரியேஷன்ஸ், முத்துக்குமரன் பிக்சர்ஸ் என முருகனுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
செங்கோட்டை சிங்கம் படத்தில்தான் அறிமுகப்படுத்தினார்.
’’வெற்றி... வெற்றி... நாலாவது ஆட்டத்திலும் எனக்குத்தான் வெற்றி...’’ என்று எஸ்.வி.சுப்பையா பேசுகிற முதல் காட்சியின் வசனத்தை வாய்விட்டுக் கூறினார், ஆரூர்தாஸ். ’’நிறுத்துப்பா... முதல் மூணு ஆட்டத்த நாம காட்டலியே’’ என்றார் தேவர்.’’அதனால எண்ணண்ணே... தயாரிப்பாளரா இது உங்களுக்கு நாலாவது படம், அதைத்தான் வெற்றி வெற்றி-ன்னு எழுதினேன்’’ என்று கூற தேவர் உருகிவிட்டார். ஆரூர்தாஸ் கூறியபடி, அந்தப்படமும் வெற்றிபெற, தனது ஒவ்வொரு படத்திலும் கதாநாயகன் வெற்றி... வெற்றி... என்று கத்தியபடியே ஓடி வருவதை ஓர் அம்சமாகவே நிலைநாட்டினார்.
ஒரு கட்டத்தில் மற்ற ஃபைனான்சியர்களை நாடிச் செல்ல மனமில்லாமல், குறைந்த செலவில் புதுமுகங்களை மட்டும் வைத்துப் படம் பண்ணலாமா, அல்லது மிருகங்களை அதிகளவில் பயன்படுத்திப் படம் பண்ணலாமா என்கிற யோசனையில் இருந்த தேவர், ’’எலிஃபேண்ட் பாய்’’ என்னும் ஆங்கிலப்படத்தை தமிழ்ப்படுத்த விரும்பினார். தனது லட்சியப் படமாகவும் அதனை அறிவித்தார்.
யானைகளை எப்படிப் பிடிக்கிறார்கள் என்பதை நிஜமாகவே படமாக்க எண்ணினார். முழுக்க முழுக்க காட்டு மிருகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். முதுமலை ஸ்ரீநிவாச எஸ்டேட்டில் யானைகளுக்காக பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி தவம் கிடந்தார். 1960ஆம் ஆண்டு தீபாவளிக்கு ’யானைப் பாகன்’ ரிலீசானது.
உண்மையில் தமிழ் சினிமாவில் புதுமையான முதல் முயற்சி அது என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் தீனதயாளன், அதே தினத்தில் வெளியான கைதி கண்ணாயிரம், கைராசி, மன்னாதி மன்னன் போன்ற படங்களின் முன் யாரும் யானைப்பாகனை கண்டுகொள்ளவில்லை என்றும், பத்திரிகைகள் கூட, தேவரின் டாக்குமெண்ட்ரி படம் என்று கிண்டல் செய்ததாகவும் குறிப்பிடுகிறார்.
உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்டு, திரையுலகை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி.ஆரை தேவர், முருகா அல்லது ஆண்டவரே என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, முதலாளி என்றும் அழைத்துக்கொள்வர் என, தீனதயாளன் எழுதியுள்ளார்.
எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர். இதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.
போட்டவர் தேவர். முருகனின் தலங்களை அடிப்படையாகக்கொண்ட பாடல்களோடு ’தெய்வம்’ எனும் திரைப்பட்டத்தை தயாரித்து 1972ஆம் ஆண்டு வெளியிட்டார். கண்ணதாசன் வரிகளுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட். ’’மருதமலை மாமணியே’’ பாடல் இடம்பெற்றதும் இத்திரைப்பபடத்தில்தான். ரமணியம்மாள் குரலில் ’’குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’’, சீர்காழி கோவிந்தராஜனின் காந்தக் குரலில் ஒலித்த ‘’திருசெந்தூரின் கடலோரத்தில்’’ எனும் பாடல்களைக் கேட்போரெல்லாம், இன்னமும் சிலிர்த்துப் போவார்கள்.
நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வர வைத்ததும் தேவரின் சாதனைதான்.
இறுதிப் பயணம்
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போதே மறுநாள், அதாவது 1978ஆம் செப்டம்பர் 8ஆம் நாள், மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார்.
தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது. தேவரின் மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின், மகன் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடிப்பில் பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர்.
May be an image of 1 person and flute

தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்.!

 கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்.!

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில்.
தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்தது.
இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார்.மேலும் இக்கோவில் சிவ பெருமான் வாசி என்ற கோடாரியால் மூங்கிலுக்கு கீழே எடுக்கும் போது அவர் மீது இரத்தம் வந்துவிட்டது. ஆதலால் இக்கோவில் சிவலிங்கை தொடாமல் தான் பூஜை செய்கிறார்கள்.பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவனுக்கு பால் சுரந்து கொடுக்குமாம், அப்போது மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தை பசுவுக்கு காட்டுமாம்.
இந்த ஊரில் சிறு மன்னன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால அரசன் பெரும் படையெடுத்தான். ஆனால் போரில் வெற்றி பெறுவதற்காக காளி உருவில் வானில் இருந்து அம்புமலை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது, மீண்டும் கரிகாலன் சிவனை வேண்டி போரில் வெற்றி பெற்றான். போரில் வெற்றி பெறுவதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் கட்டிவைத்தார் சிவபெருமான். அந்த காளியின் பெயர் சொர்ண காளி,தனி சந்நதி உள்ளது.
உன்னை இங்கு வரவழைக்கவே போரில் உன்னை ஜெயிக்க வைத்தேன் என கரிகாலனிடம் சிவன் கூறினாராம். இக்கோவிலை கட்ட கரிகாலனுக்கு ஆதிசங்கரர் உதவி புரிந்திருக்கிறார். ஆதிசங்கரர் வந்தார் என்பதற்கு ஆதாரம் தான் அவர் கையால் வரைந்த ஸ்ரீ சக்கரம். இக்கோவிலின் சொர்ணபைரவர் தெற்கு பார்த்து இருப்பார். முக்கியமான விஷயம் இது ஒரு கேது ஸ்தலம். மிக மிக மிக அருமையான கோவில். தெய்வமில்லை என்பவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக தெய்வத்தை காணலாம்.
May be an image of 7 people, monument and temple
All reactions

தெரியவில்லை...

 திராவிட திருட்டு மாடலின் வளர்ச்சி....

எறும்பில் துவங்கி..
திராவிட மாடலின் பரிணாம வளர்ச்சி காகம் வரை வந்துள்ளது
நாளை எதுவோ? தெரியவில்லை...
💥எறும்பு - சர்க்கரையை தின்றது
💥கரையான் - சாக்குகளை அழித்தது
💥முதலை. - கூவத்தில் ஆய்வு செய்வதை தடுத்தது
💥அணில். - கரண்ட் கம்பியை கடித்தால் மின்தடை
💥ஹெவி ரெயின் - கறுப்பு மையை முட்டைக்குள் இறக்கியது...
இப்போது...
💥காகம் - அழுகிய முட்டையை குடிநீர் தொட்டியில் போட்டது...
ஆகா.... என்ன அருமையான திராவிட மாடல் வளர்ச்சி....
இது பெரியாறு மண்ணுடா... 😎😎😎
May be an image of bird
All reaction

எஸ்.எஸ்.ஆரின் தந்தை லட்சியமாகவே வைத்து இருந்தார்.

 எப்படியாவது தனது மகனை தன்னைப்போல அரசாங்க அதிகாரியாக ஆக்கிவிடவேண்டும் என்று எஸ்.எஸ்.ஆரின் தந்தை லட்சியமாகவே வைத்து இருந்தார்.

1937-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "சிந்தாமணி'' படம், சக்கை போடு போட்டது. எஸ்.எஸ்.ஆர். மனதில் அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. "சிந்தாமணி'' கதையை பள்ளியில் நாடகமாக போட்டபோது, எஸ்.எஸ்.ஆர். கதாநாயக னாக நடித்தார். அவர் நன்றாக நடித்ததால், அவருக்கு அப்போது முதல் பரிசு கிடைத்தது.
இந்த நாடகத்தை நடத்திய ஆசிரியர், "நீ அழகாக இருக்கிறாய். நடிப்பும் நன்றாக வருகிறது. எனவே, சினிமா உலகிற்கு நீ சென் றால் புகழ் பெறமுடியும்'' என்று எஸ்.எஸ்.ஆரிடம் கூறினார். "நீ இனி படிக்க வேண்டாம். நடிக்கப்போ'' என்று கூறி, நாடக கம்பெனியில் சேர தன் செலவில் மதுரைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரைக்கு சென்ற எஸ்.எஸ்.ஆர் டி.கே.எஸ். நாடக சபாவில் சேர்ந்தார். அங்கு "சிவலீலா'' நாடகத்தில் காவலாளி வேடமே கிடைத்தது. அதன் பிறகு "மகாபாரதம்'' நாடகத்தில் சகாதேவ னாக நடிக்கத் தொடங்கினார். இதில், திரவுபதியாக (பெண் வேடத்தில்) நடித்தவர் ஏ.பி.நாகராஜன்.
தன் மகன் நாடக நடிகனாகி விட்டானே என்ற வெறுப்பில் இருந்த எஸ்.எஸ்.ஆரின் தந்தை,எஸ்.எஸ்.ஆரின் நடிப்பைப் பார்த்து பாராட்டினார். இது எஸ்.எஸ்.ஆருக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.
நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தந்தை பெரியாருடனும், அறிஞர் அண்ணாவுடனும் பழகும் வாய்ப்பு எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கிடைத்தது.
19-11-1943-ல் ஈரோட்டில் `சந்திரோதயம்' நாடகத்தை நடத்த அண்ணா வந்தார்.
அப்போது அந்த நாடகத்தில் அண்ணாவும் நடிக்க வேண்டி இருந்தது. எனவே ஏற்கனவே அங்கு நாடகம் நடத்தி வந்த குழுவில் இருந்த எஸ்.எஸ்.ஆர். அண்ணாவுக்கு `மேக்கப்' போட்டார்.
தொடர்ந்து எஸ்.எஸ்.ஆர். நாடகத்தில் நடித்து வந்தாலும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தீவிரம் அடைந்தது. எனவே, நாடக கம்பெனியில் இருந்து விலகி, சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.
சென்னைக்கு வந்த நாளில் "அபிமன்யு'' படத்தில் அபிமன்யுவாக நடிக்க எஸ்.எஸ்.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. "மேக்கப் டெஸ்ட்'' கூட முடிந்து விட்டது.
இந்த நிலையில், "எஸ்.எஸ்.ஆர். எங்கள் நாடகக் குழுவில் இன்னும் 7 மாதம் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது'' என்று, டி.கே.எஸ். நாடக குழுவினர் தெரிவித்தனர். இதனால், அபிமன்யு படத்திலிருந்து எஸ்.எஸ்.ஆர். விலக நேரிட்டது.
இதைத்தொடர்ந்து, "அபிமன்யு'' படத்தில் எஸ்.எம்.குமரேசன் நடித்தார். அர்ச்சுனனாக எம்.ஜி.ஆர். நடித்தார்.
அதன் பிறகு சேலம் மூர்த்தி பிக்சர்சின் "ஆண்டாள்'' படத்தில் எஸ்.எஸ்.ஆர். பின்னணி பாடகரானார்.
"இன்ப உலகிலே மன்மதன் பூங்கனை'' என்ற பாடலை பாடினார்.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலி யார், ஏவி.எம்.முடன் கூட்டு சேர்ந்து "பராசக்தி''படத்தை தயாரித்தார். கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனத்தை எழுதிய இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுடன், எஸ்.எஸ். ராஜேந்திரன் புதுமுகமாக அறிமுக மானார். சிவாஜிகணேசனின் அண்ண னாக "ஞானசேகரன்'' என்ற வேடத் தில் எஸ்.எஸ்.ஆர். சிறப்பாக வசனம் பேசி நடித்தார்.
குறிப்பாக, சிவாஜிகணேசனைப் போல் தெளிவாகவும், உணர்ச்சியுட னும் வசனம் பேசும் ஆற்றல் ராஜேந் திரனுக்கு இருந்தது.
1952-ம் ஆண்டு தீபாவளித் திரு நாளில் வெளிவந்த "பராசக்தி'', தமிழ்ப் பட உலகில் மறுமலர்ச்சி ஏற்படச் செய்ததுடன், அதில் இடம் பெற்ற அனைவருடைய வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
எஸ்.எஸ். ராஜேந்திரன் நடித்த முதலாளி மகத்தான வெற்றி: ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தம்
எம்.ஏ.வி. பிக்சர்சார் குறைந்த செலவில் தயாரித்த "முதலாளி'' படம், மாபெரும் வெற்றி பெற்று, எஸ்.எஸ்.ராஜேந்திரன் வாழ்க் கையில் திருப்புமுனை ஏற் படுத்தியது.
"பராசக்தி''யில் அறிமுக மான சிவாஜிகணேசனும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் தொடர்ந்து பல படங்களில் சேர்ந்து நடித்தனர். அவற்றில் முக்கியமானது "மனோகரா.''
"பராசக்தி''க்குப் பிறகு சிவாஜிகணேசன் - கலைஞர் கருணாநிதி பங்கேற்ற மகத் தான வெற்றிப்படம் "மனோ கரா.'' அதில் சிவாஜியின் உயிர்த்தோழனாக ராஜேந்திரன் உணர்ச்சிகரமாக நடித்தார்.
அறிஞர் அண்ணா கதை- வசனம் எழுதிய "சொர்க்க வாசல்'' படத்தில் "நடிப்பிசைப் புலவர்'' கே.ஆர்.ராமசாமி யுடன் எஸ்.எஸ்.ஆர். சேர்ந்து நடித்தார். இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமியின் ஜோடி பத்மினி. ராஜேந்திரனின் காதலி அஞ்சலிதேவி. படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இதே நேரத்தில் பீம்சிங் டைரக்ஷனிலும், கருணாநிதி கதை- வசனத்திலும் உருவான அம்மையப்பனில் கதாநாயகனாக எஸ்.எஸ்.ஆர்.நடித்தார். அவருக்கு ஜோடி ஜி.சகுந்தலா. படம் சுமாராகத்தான் ஓடியது.
"ரத்தக்கண்ணீர்'' படத்தில் எம்.ஆர்.ராதாவின் நண்பனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது.
முரசொலி மாறன் திரைக்கதை - வசனத்தில் ஏவி.எம். தயாரித்த "குல தெய்வம்'' (1956) படத் தில் எஸ்.எஸ்.ராஜேந்தி ரனின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. இந்த படம் 100 நாட்களை தாண்டி ஓடியது.
"ரங்கோன்ராதா'' (1956) படத்தில் மீண்டும் சிவாஜியுடன் எஸ்.எஸ். ஆர்.இணைந்து நடித் தார். இந்தப்படமும் வெற்றிகரமாக அமைந்தது.
1957 தீபாவளி அன்று வெளியான எம்.ஏ.வி. பிக்சர்ஸ் தயாரிப்பான "முதலாளி'', வரலாறு படைத்தது. இதில் எஸ். எஸ்.ராஜேந்திரனும், தேவிகாவும் ஜோடியாக நடித்தனர்.
அதுவரை பல படங் களுக்கு துணை டைரக்ட ராக இருந்த "முக்தா'' சீனிவாசன், இப்படத்தின் மூலம் டைரக்டரானார்.
குறைந்த `பட்ஜெட்'டில் தயாரிக்கப்பட்ட "முத லாளி'', தீபாவளிக்கு வெளிவந்த பெரிய பேனர் படங்களை யெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, முதல் இடத்தைப் பெற்றது. எஸ்.எஸ்.ராஜேந்திரன் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.
இப்படத்தில், தேவிகா ஏரிக்கரையில் நடந்து செல்ல, "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே'' என்று பாடியபடி (குரல்: டி.எம்.எஸ்) எஸ்.எஸ்.ராஜேந்திரன் பின் தொடர்வார். இந்த பாடலும் காட்சி அமைப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதற்கு 2 மாதங்கள் கழித்து, பொங்கலுக்கு வெளிவந்த "தை பிறந்தால் வழி பிறக்கும்'' படம், ராஜேந்திரனுக்கு மற்றொரு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
தமிழ்ப் புலவராக இருந்த ஏ.கே.வேலன் இந்தப் படத்தின் மூலம் பட அதிபராகவும்,டைரக்டராகவும் ஆனார். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம், எல்லோரும் வியக்கும் வகையில் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வசூல் மழையில் நனைந்த ஏ.கே. வேலன், இதன் மூலம் கிடைத்த லாபத் தில் தன் தந்தை பெயரால் "அரு ணாசலம் ஸ்டூடி யோ''வை அமைத்தார்.
இந்தப் படத்தில், மலை யாளப்பட உலகின் "சூப் பர் ஸ்டார்'' பிரேம் நசீர், எஸ்.எஸ்.ஆருக்கு அடுத்த வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மற்றும் ராஜசுலோ சனா, எம்.என்.ராஜம், டி.வி.நாராயணசாமி முத லியோர் நடித்த இப்படத் தில், "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'', "அமுதும் தேனும் எதற்கு'', "எளியோரை தாழ்த்தி'', "மண்ணுக்கு மரம் பாரமாப'' "ஆசையே அலைபோல'' முதலான அனைத்து பாடல்களும் ஹிட் ஆயின. மருதகாசி, கண்ணதாசன், சுரதா, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, முத்துசாமி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன்.
"முதலாளி'', "தை பிறந் தால் வழி பிறக்கும்'' ஆகிய படங்களின் வெற் றியைத் தொடர்ந்து ராஜேந்திரனுக்கு ஏராளமான படங்கள் ஒப்பந்தம் ஆயின.
ஒரு முறை கோவையில் நாடகம் நடத்த எஸ்.எஸ்.ஆர். சென்றபோது "ஆட்டோ கிராப்''வாங்க வந்த ஒரு இளம் பெண்ணை, தனது நாடகத்தில் நடிகையாக்கினார். இவர்தான், பின்னாளில் கேரள திரை யுலகின் மிகப்பெரிய நடிகை யாக திகழ்ந்த ஷீலா.
புராணப் படங்களில் நடிக்க மறுத்த எஸ்.எஸ்.ஆர்: லட்சிய நடிகர் என்று பெயர் பெற்றார்
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், புராணப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் "லட்சிய நடிகர்'' என்று பட்டம் பெற்றார்.
"முதலாளி'', "தை பிறந் தால் வழி பிறக்கும்'' படங்களைத் தொடர்ந்து, "பிள்ளைக்கனியமுது'', "பெற்ற மகனை விற்ற அன்னை'', "திருடர்கள் ஜாக்கிரதை'', "தேடிவந்த செல்வம்'', "அன்பு எங்கே'', "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'', "மாமியார் மெச்சிய மருமகள்'', "கல்யாணிக்கு கல்யாணம்'' என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரித்த "பிள்ளைக் கனியமுது'' படத்தில் சிறுத்தையுடன் சண்டை போடும் காட்சியில் எஸ்.எஸ்.ஆர். `டூப்' போடாமல் நடித்தார். சிறுத்தையின் கால் நகம் வெட்டப்பட்டு, வாய் தைக்கப்பட்டு, அதன் பின்னர் சிறுத்தையுடன் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சிறுத்தை காலால் உதைத்ததில், எஸ்.எஸ்.ஆர். முகத்தில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது.
ஆனால் சூட்டிங் நடந்து கொண்டே இருந்தது. படத்தின் இயக்குனரிடம் "நான் நடிக்கும்போது பயப்படுவதுபோல நடிப்பேன். அதைப் பார்த்து சூட்டிங்கை நிறுத்திவிடா தீர்கள்'' என்று எஸ்.எஸ்.ஆர். கூறி இருந்ததே இதற்கு காரணம். இந்தக்காட்சி சிறப்பாக அமைந்தது.
சிவாஜி - எம்.ஜி.ஆருடன் நடித்த படங்கள்
சிவாஜி கணேசனுடன் "பராசக்தி'', "பணம்'', "மனோ கரா'', "ரங்கோன் ராதா'', "தெய்வப்பிறவி'', "ஆலய மணி'', "பச்சைவிளக்கு'', "கைகொடுத்த தெய்வம்'', "பழனி'', "சாந்தி'', "எதிரொலி'' ஆகிய படங்களில் எஸ்.எஸ்.ஆர். நடித்தார்.
"தெய்வப்பிறவி''யில் சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர். மூவரும் போட்டி போட்டு நடித்தனர். இறுதிக்கட்டங்கள் உணர்ச்சிமயமாக இருந்தன.
"கை கொடுத்த தெய்வம்'' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உருவாக்கிய அற்புத படைப்பு. சிவாஜிகணேசன், சாவித்திரி, கே.ஆர்.விஜயா ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர். அருமையாக நடித்தார்.
சாவித்திரியின் உன்னத நடிப்பை வெளிப்படுத்திய படம் இது. சாவித்திரியின் அண்ணனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா.
அதன் பிறகு "காஞ்சித் தலைவன்'', "ராஜா தேசிங்கு'' ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர். இணைந்து நடித்தார். இவற்றில் எம்.ஜி.ஆரின் நண்பன் வேடம் எஸ்.எஸ்.ஆருக்கு.
May be an image of 1 person and text that says 'நடேஷ்'

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...