Wednesday, November 29, 2023

தமிழக ஊடக உலகிலும் உண்டு.

 தர்மம் எப்பொழுதும் தனித்து நின்றுதான் வெல்லும், தர்மம் இருக்கும் பக்கம் சிலர்தான் இருப்பார்கள், ஆனால் அந்த சிலர்தான் பெரும் கூட்டமான அதர்மத்தை சரித்துபோடுவார்கள்

இது உலகில் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் இருக்கும் காட்சி, இதுதான் மகாபாரதம் ராமாயணம் என எல்லா இடத்திலும் உண்டு, இன்றும் இந்த காட்சி எல்லா இடங்களிலும் உண்டு
அப்படியான காட்சி தமிழக ஊடக உலகிலும் உண்டு
அந்த இடத்தில் தனித்து நிற்கும் தர்மவான் அந்த ரங்கராஜ் பாண்டே
ஒரு தேசாபிமானமும் கலாச்சார பண்பாளரும் கொண்ட மிகசிறந்த பத்திரிகையாளர் அவர், எக்காலமும் தேசாபிமானம் ஒன்றே அவரின் பிரதானம்
தான் ஒரு இந்து என்பதை எப்பொழுதும் நெற்றியின் குங்குமம் மூலம் மட்டுமல்ல தன் பண்பான வார்த்தையாலும் செயலாலும் அவர் காட்டிகொண்டே இருக்கின்றார்
அவர் தேசாபிமானி, சுத்தமான இந்து எனும் வகையில் பன்னெடுங்கால இந்து பாரம்பரிய சான்றோர்களின் தொடர்ச்சி அவர்
மிக தீவிரமாக ஆக்ரோஷமாக பாய வேண்டிய இடத்திலும், பச்சை பொய்கள் பேசும் கும்பல் முன் உலகின் அனைத்து கெட்டவார்த்தைகளையும் கொட்ட வேண்டிய இடத்திலும் அவரின் அந்த நிதானம் வாழ்த்துகுரியது
மிக நிதானமான ஆனால் ஆணித்தரமான வாதங்கள், யாரையும் புண்படுத்தாத கேள்விகள், தர்க்கமும் வாதமும் உண்மையும் நிறைந்த வாதங்கள் என வாதிடுவார்
ஒரு வகையில் அவரிடம் பழைய ராஜாஜி கால பண்புகளும் காணபடும், கூர்ந்து பார்த்தால் தெரியும்
பொதுவாக தமிழகத்தில் ஒரு சாபம் உண்டு, அதுவும் ஊடக உலகில் எழுத்தாளர் உலகில் அது உண்டு
அதாவது எழுத்தாளனும் கலைஞனும் பத்திரிகையாளனும் தேசாபிமானியாக இருப்பது சிரமம், அப்படி இருந்தால் பிழைப்பது மிக கடினம்
எவ்வளவோ பெரும் ஜாம்பவான்களெல்லாம் தன்னை ஒடுக்கி தன் இயல்புக்கு மாறாக ஒடுங்கி எதையோ செய்துவிட்டு அடங்கியதெல்லாம் இதனாலே
சோ ராமசாமி நின்றார் ஆனால் அவரையும் பிராமணன் என்றார்கள் அதையும் தாண்டி அவர் நிலைத்தார்
ஜெயகாந்தன் எனும் மிக நல்ல தேசாபிமானி கம்யூனிஸ்டாக இருந்த ஒரே காரணத்தால் காணாமலே போனார், அவரை கைதூக்க யாருமில்லை
மற்றவர்களெல்லாம் திராவிட கட்சியின் துதிபாடியாக இருக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும், அல்லது அமைதியாகும் நிலை வரும் தமிழக சாபம் இது
இந்நிலையில் பாண்டே தப்பி நின்றார், அவர் கட்சி சார்பும் எடுக்கவில்லை எக்கட்சியிலும் இணைந்து பொறுப்பும் கோரவில்லை
ராமாயணத்தில் அனுமன் தன் கடமையினை தனியாக நின்று பலன் எதிர்பாரது உழைப்பது போல் செய்து கொண்டிருக்கின்றார்
ஊடக வேலை போனவுடன் அவர் தன்னை மாற்றிகொள்ளவில்லை, பிழைப்புக்கும் எதிர்காலத்துக்கும் எங்கோ சென்று ஒட்டிகொண்டு பொய்யும் புரட்டும் பேசவில்லை
பாண்டே பாண்டேயாக இன்றும் நிற்கின்றார்
அவரின் அறம் அவரை காக்கின்றது, இன்று தமிழகத்தில் தேசியம் பேசும் ஒரு சக்தியாக, யாருக்கும் பகைவரும் இல்லை நண்பரும் இல்லை எனும் அளவில் சரியாக சென்றுகொண்டிருக்கின்றார்
அவர் எழுப்பும் பல கேள்விகள் இவ்வொரு தேசாபிமானியும் எழுப்பும் கேள்விகள், அதனை தேசாபிமானிகளின் கண்ணியம் குறையாமல் ஒரு இழுக்கு வராமல் அவர் கேட்பதும் எதிர்கொள்வதும் வாழ்த்துகுரியது
இன்றுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் யாருடைய வலையிலும் விழாமல் அவர் செல்லும் நேர்த்தி வாழ்த்துகுரியது
தமிழக அறமும் தேசபற்றும் பத்திரிகையாளர்களால் காக்கபட்டது
பாரதி, ராஜாஜி, ஜெயகாந்தன், கண்ணதாசன் என பலர் பத்திரிகை மூலம் தேசாபிமானமும் இந்திய கலாச்சார மாண்பும் வளர்க்க பாடுபட்ட மண் இது
அந்த வரிசையில்தான் நாம் ரங்கராஜ் பாண்டே எனும் பத்திரிகையாளரையும் காண்கின்றோம், சரியான காலத்தில் காலம் கொடுத்த தேசாபிமானி அவர்
அவருக்கு இன்று பிறந்தநாள்
அந்த ஆண்டாள் தாயார் அந்த நல்ல தேசாபிமானிக்கு எல்லா வரமும் அருளும் அருளட்டும், வில்லிபுத்தூரின் பெருமாள் எக்காலமும் அவர் கையில் இருக்கும் ஞான சங்கு போல வழிநடத்தி வரட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...