எந்த ஒரு நடிகராக இருந்தாலும், அவருக்கென்று ஒரு நடிகர் இன்ஸ்பிரேஷன் இருப்பார். அந்த வகையில் அனைத்து கேரக்டர்களிலும் அசத்தும் திறன் கொண்ட சிவாஜி கணேசன் நடிக்கும்போது யாரை மனதில் நினைத்துக்கொள்வார்? அவரது இன்ஸ்பிரேஷன் யார் என்பதை அறிய நடிகர் சத்யராஜ் விரும்பியுள்ளார். ஒருமுறை சிவாஜி கணேசனுடன் நடித்த படத்தின் படப்பிடிப்பின்போது சத்யராஜ் அவரிடமே இந்த கேள்வியை கேட்டுள்ளார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, November 28, 2023
சிவாஜிக்கு இன்ஸ்பிரேஷன் இந்த தமிழ் நடிகரா?
"நீங்கள் நடித்த காலத்தில் எந்த நடிகரின் பாதிப்பு உங்களிடம் இருந்தது ?" என்று சத்யராஜ் கேட்க, "ஏன்டா நான் யாரை பார்த்து காப்பி அடிக்கிறேனு தெரிந்துகொள்ள வேண்டுமா?" என்று கேட்ட சிவாஜிக்கு "இல்லப்பா சும்மா தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்" என்று சத்யராஜ் கூறியுள்ளார். அதன்பிறகு பதில் கொடுத்த சிவாஜி, "நான் எந்த ஹாலிவுட் நடிகரையும் காப்பி அடித்ததில்லை. எனக்கு பிடித்த ஒரே நடிகர் எம்.ஆர்.ராதா தான்" என்று கூறியுள்ளார்.
மேலும், "உங்களுக்கு எல்லாம் இரட்டை குரலில் சினிமாவில் பேசி நடிக்கும் எம்.ஆர்.ராதா பற்றி தான் தெரியும். அவர் நாடகத்தில் நடித்து நீங்கள் பார்த்தது இல்லை. நாடகத்தில் எம்.ஆர்.ராதா நடிக்கும்போது எந்த இங்கிலீஷ் நடிகரும் அவர் பக்கத்தில் நிற்க முடியாது" என்று எம்.ஆர்.ராதாவுக்கு சிவாஜி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் இதை நம்பாத சத்யராஜ், எம்.ஆர்.ராதா நாடக கம்பெனியில் சிவாஜி இருந்ததால் இப்படி சொல்வதாக நினைத்துள்ளார்,
ஆனால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலும் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு எம்.ஆர்.ராதா என்று பதில் அளித்தை பார்த்து நான் அசந்துவிட்டேன் என்று நடிகர் சத்யராஜ் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment