Thursday, November 23, 2023

கேள்வி ஞானத்தின் மூலம் இசையமைப்பாளராக ஜொலித்தார்.

 தமிழ் சினிமாவின் முதல் தயாரிப்பு நிறுவனம் என போற்றப்படும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் திரையுலகில் ஜொலித்தவர் ஜி. ராமநாதன். திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த இவர் இளம் வயதிலேயே தாய், தந்தையை இழந்து அண்ணனது அரவணைப்பில் வளர்ந்துள்ளார். தனது 18 வயதில் பாராத ஞானா சபா நாடக குழுவில் இணைந்து ஹார்மோனியம் வாசிப்பவராக மாறினார்.

அப்போதைய சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் சத்யசீலன் படத்தில் தான் ஜி. ராமநாதனின் முதல் படம். கர்நாடக இசையை முறையாக பயிலாவிட்டாலும், கேள்வி ஞானத்தின் மூலம் இசையமைப்பாளராக ஜொலித்தார். சினிமா இசையமைப்பாளராக மாறிய பின்னர் மேடை நாடகங்களிலும் தொடர்ந்து இசைமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1936 முதல் 1963 வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைப்பாளராக கோலோச்சிய இவர் 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஹரிதாஸ், உத்தமபுத்திரன், அம்பிகாபதி, கப்பலோட்டிய தமிழன், அரசிளங்குமரி, துாக்குத்துாக்கி என இவர் இசையமைத்த படங்கள் கல்ட் கிளாசிக்காக அமைந்தன.
காலத்தால் அழியாத கிளாசிக் பாடல்களான ’மன்மத லீலையை வென்றார், சிந்தனை செய் மனமே, முல்லை மலர் மேலே, யாரடி நீ மோகனி’ போன்ற பல பாடல்கள் இவர் இசையமைத்தது தான்.
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்த இவர் சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோரின் ஆரம்ப கால படங்களில் பிரதான இசையமைப்பாளராக இருந்தவர் ஜி. ராமநாதன். அந்த வகையில் அவர்கள் இருவரின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளிலும் இசைமைத்த இவர், 1952இல் வெளிவந்த தி ஜங்கிள் என்ற ஆங்கில படத்துக்கும் இசையமைத்தார். தனது காலத்தில் மற்றொரு இசையமைப்பாளராக இருந்த கே.வி. மகாதேவன் இசையிலும் பாடல் பாடியிருக்கும் இவர், ஏராளமான நடிகர்களையும் தனது இசையில் மறக்க முடியாத பல பாடல்களையும் பாட வைத்துள்ளார்.
ரசிகர்களால் இசை மேதை, இசை சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட ஜி. ராமநாதன், அருணகிரிநாதர் என்ற படத்தின் கம்போசிங்போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் பாதியில் விட்டு சென்ற அந்த படத்தை மற்றொரு இசையமைப்பாளரான டி.ஆர். பாப்பா முடித்தார்.
தமிழ் சினிமாவில் முதல் கிளாசிக் பட இசையமைப்பாளராக ஜொலித்த ஜி. ராமநாதன் நினைவு நாள் இன்று.
May be an image of 1 person
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...