Monday, November 20, 2023

“புறக்கணிப்பிலிருந்து புறப்பட்ட புயல்”

 முகமது ஷமி 6 மேட்சுகளில் 23 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தவில்லை! ஒட்டு மொத்த இந்திய ரசிகர்கள் மனதையும் வீழ்த்தியிருக்கிறான்! உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்தின் கொடுங்கோல் அரசியலுக்கும், அதன் கொடூர மனப்பான்மைக்கும் ஷமியை காட்டி உதாரணம் சொல்லலாம்! முதன் முதலில் ஷமியின் பந்துவீச்சையும் அதன் வேகத்தையும் பார்த்து வியந்து போய்..

இவன் நிச்சயம் இந்திய பவுலிங்கில் தவிர்க்க முடியாத ஒரு பவுலராக வருவான் என்று சொன்னவர், சாட்சாத் நம்ம வாசிம் அக்ரம் தான்! இதை ஒரு பவுலிங் வல்லுநரின் கருத்தாக பார்க்காமல் பிச்சைகாரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனேவா என்கிற மனநிலையிலேயே பார்த்தனர்! மும்பை அணியில் வாசிம் ஜாஃபர் என்னும் பேட்ஸ்மென் ஒருவர் இருந்தார்! அவரெல்லாம்..
அணியில் தொடர்ந்து ஆடியிருந்தால் கவாஸ்கரின் அத்தனை டெஸ்ட் சாதனைகளையும் டெண்டுல்கருக்கு முன்பே முறியடித்து இருப்பார்! அபாரமான பேட்டிங் திறமை இருந்தும் அவரும் ஷமி போலவே காத்திருப்பில் வைக்கப்பட்டார்! கிடைத்த வாய்ப்பில் ஜாஃபர் ஒரு இரட்டை சதம் கூட விளாசினர்! ஆனால் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படவில்லை! நல்ல வீரர்கள் பலர்..
அணிக்கு தேர்வாகி வந்தும் ஆடும் லெவனில் கூட ஆட வைக்கப்படாமல் போன கதைகளைக் கேட்டால்.. நமக்காவது எலந்தைப்பழம் அவனுக்கு பலாப்பழம்!! ரேஞ்சிலேயே இருக்கும்! நமது அணியில் ஷமியை டிவி மெகா சீரியலில் வருவது போல அவருக்கு பதிலாக இவர் என்பது போலத் தான் அணிக்குள் வைத்திருந்தனர்! புவனேஷ்குமார்களும், ஹர்திக்குகளும்..
காயமடைந்தாலோ அல்லது விளையாட முடியாமல் போனாலோ தான் ஷமிகளுக்கு வாய்ப்பு வரும்! இரண்டொரு மேட்சில் மீண்டும் அவர்கள் திரும்பிவிட்டால் கிடைத்த வாய்ப்பில் ஜொலித்து இருந்தாலும் ஷமிக்கள் மீண்டும் பெஞ்சில் உட்கார வைக்கப் படுவார்கள்! கிட்டத்தட்ட அது வாட்ச்மேன் பெஞ்ச் போலத் தான்! வெளியவே காத்திருக்கணும் என்னைக்காவது ஒரு நாள் நம்மை..
உள்ளே கூப்பிடுவாங்க! திறமையின் அடிப்படையில் மட்டுமே ஒருவனை தேர்ந்தெடுத்து வாய்ப்பு தருவோம், சாதி மத பேதம் பார்க்க மாட்டோம், வெற்று அரசியலை விளையாட்டில் புகுத்த மாட்டோம், முக்கியமாக நல்ல வீரனை வெளியே காத்திருப்பில் வைக்கமாட்டோம் போன்றவை தான் நமது நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டியவையாகும்! கிரிக்கெட் விளையாட்டு..
உடல் மட்டுமல்ல மனதும் சார்ந்தது! இந்த இடத்தில் ஒரு திறமையானவனின் மனநிலையை எண்ணிப்பாருங்களேன்! எவ்வளவு குமுறல்கள், எவ்வளவு அவமானங்கள், எவ்வளவு புறக்கணிப்புகள், எவ்வளவு சோகங்கள், எவ்வளவு கண்ணீர் துளிகள் அவன் உள்ளுக்குள்ளே நொறுங்கிப் போய் தன் திறனை எல்லாம் இழந்தல்லவா நிற்பான்! அப்படியொரு துயரவேளையில்..
நல்ல வாய்ப்பு வந்து அதில் அவன் சொதப்பி விட்டால் அவர் கேரியரே காலி! இப்படி வாய்ப்பே தராது பின்னங் கழுத்தை சேர்த்து அடித்து விரட்டப்பட்ட திறமையாளர்கள் பலர்! சஞ்சு சாம்சன்கள் வெளியே காத்திருக்க தினேஷ் கார்த்திக்குகள் அணியில் ஆடும் அவலமெல்லாம் எங்கும் நடக்காது! வாய்ப்பு கிடைக்கும் போது ஜாகீர்கானையே உடல் தகுதியைக் காட்டி..
உட்கார வைத்த சம்பவங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கு! இந்த புறக்கணிப்பால் புழுங்கிப் போய் புலம்பலோடு புறப்பட்டு போனவர்கள் பலர்! ஆனால் ஷமி ஒருவன் தான் இருங்கடா நேரம் வரும் போது நான் யாருன்னு காட்டுறேன்னு காத்திருந்து தன்னை நிரூபித்தவன்! புடம் போட்ட பொன்னாய் புறக்கணிப்பில் இருந்து மீண்டு வந்தான்! எனக்குஅலம்பல் புலம்பல் எல்லாம் வராது என்று..
தனது உறுதியான மனதால் வென்று நின்று இருக்கிறான்! பாருங்கப்பா எங்க கிரிக்கெட் நிர்வாகத்தின் லட்சணத்தை என்று தன் வாயால் ஒரு வார்த்தை கூட தான் பேசாது தனது பவுலிங் மூலம் அதை பேச வைக்க உலகில் யாராவது ஓரிருவரால் தான் செய்யமுடியும்! மனவுறுதியுடன் அப்படி செய்திருக்கிறான் ஷமி! எத்தனை முறை உடலும் உள்ளமும் எரிய எரிய மைதானத்தில்..
குளிர் பானங்கள் ஏந்தி சென்றிருப்பான்! எத்தனை முறை மாற்று வீரனாக களத்தில் இறங்கி பந்து பொறுக்கி எறிந்திருப்பான்! இவனைப் போன்றவர்கள் மனம் வெதும்பினால் என்ன ஆகும்? இன்றைக்கு உலகம் முழுவதும் இந்திய கிரிக்கெட்டர்களுக்கு இருக்கும் மவுசில் அவர்கள் வேறு நாட்டின் அணியில் போய் விளையாடுவது மிக மிக எளிது! அதைத்தான் இந்திய நிர்வாகம்..
விரும்புகிறதா? நிர்வாகம் இதே நிலையை எப்போதும் கையில் எடுக்குமானால் நம் நாட்டின் நல்ல ஆட்டக்காரர்கள் வேறு நாடுகளுக்கு ஆடப் போகமாட்டார்களா! நாம் இங்கிருந்து ஷமிக்களை ஏற்றுமதி செய்து விட்டு ஷர்துல்களோடு போய் அவர்களுடன் மோதப் போகிறோமா? அது நன்றாக இருக்குமா? நிர்வாகம் சிந்திக்கட்டும்! இந்த அரசியலை படம்பிடித்து தனது..
அபார ஆட்டத்தின் மூலம் உலகிற்கு காட்டியிருகிறான் ஷமி! நாட்டின் மீது அவனுக்கு இருந்த பற்றும், அவனது பந்து வீச்சில் தெரிந்த வேகமும், சாதிக்க வேண்டும் என்கிற வெறியும், கிரிக்கெட் ஆட்டத்தின் மீது அவன் கொண்ட உத்வேகமும், அவனது தன்னம்பிக்கையும் தான் இவனை இன்று தேசமே பாராட்டுகிறது! இவன் புறக்கணிப்பில் இருந்து புறப்பட்ட புயல் என்பதே உண்மை!
🩷வாழ்த்துகள் ஷமி 🩷
May be an image of 1 person
All react

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...