Thursday, November 23, 2023

காலம் அதை செய்யும்.

 திருவண்ணாமலையில் அதுவும் மகா புனிதமான கிரிவலபாதையில் சித்தர்களின் 13 சமாதிகள் இடிக்கபட்டது என்பது பெரும் அதிர்ச்சி செய்தி

கேட்டால் வருமான வரிதுறையினர் அது வாரிசு இல்லா இடம் என்றார்களாம்
அப்படியானால் ராஜராஜசோழன் வாரிசு இன்று இல்லை, மதுரை பாண்டியர் வாரிசு இல்லை அப்படியனானால் எல்லா இடத்தையும் கைவைத்துவிடுவார்களா?
அப்படியே வாரிசு இல்லாத ஆன்மீகதலம் என்றாலும் அதை அறநிலையதுறை கைபற்றி ஆலயத்தோடு இணைக்கவேண்டுமே தவிர அதை வருவாய்துறை கைபற்ற என்ன உரிமை உண்டு என்பதுதான் தெரியவில்லை
அய்யா ராம்சாமிக்கு வாரிசு இல்லை அதற்காக ராம்சாமி அய்யாவின் சொத்துக்களையெல்ல்லாம் வருவாய்துறை ஏன் கைபற்றவில்லை?
திருவண்ணாமலையில் நடப்பதெல்லாம் அச்சமூட்டும் நிகழ்வுகள், இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தபடுவதாக தெரிகின்றது
திருவண்ணாமலை கோவிலில் தெர்சாபடத்துடன் விபூதிபொட்டலம், கிரிவல பாதையில் அசைவகடைகள் அனுமதி, கோவில் கோபுரத்தை மறைக்கும் திட்டம், அம்மணி மண்டப இடிப்பு வரிசையில் இப்போது சித்தர் பீடத்தின் மீதே கைவைத்துவிட்டார்கள்
இதன் பின்னணியில் யாரோ இருக்கின்றார்கள், ஏதோ மர்மசக்தி திட்டமிட்டு செய்கின்றது எனுமளவு காட்சிகள் நடக்கின்றன‌
இது சம்பந்தமாக தமிழக அரசு ஒரு குழுவினை அவசரமாக அமைத்தல் வேண்டும், இனி இம்மாதிரி குதர்க்க நடவடிக்கையில் யாரும் ஈடுபடாதவாறு கட்டளை பிறப்பித்தல் வேண்டும்
முதலில் வருவாய்துறையினர் கைபற்றி இடம் ஆலய நிர்வாகத்தோடு இணைக்கபட்டு , இடிக்கபட்ட ஜீவசமாதிகள் உடனே கட்டபடல் வேண்டும்
அதை செய்யதவறினால் நிச்சயம் பக்தர்கள் விட்டாலும் தெய்வமும் சித்தர்களின் சக்தியும் இவர்களை விடபோவதில்லை, அறிந்தே பெரும் பாவம் செய்வது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல‌
மாலிக்காபூரும், பிஜப்பூர் சுல்தானும், அப்சல்கானும் செய்யாததை இவர்கள் செய்யதுவிடமுடியாது, அவர்களே தோற்றோடித்தான் போனார்கள் அப்படி இப்போது குறுக்குவழியில் முயற்சிக்கும் கும்பலும் விரைவில் ஒழிக்கபடும் என்பது சத்தியம்
அரச அதிகாரம் அலல்து சட்டரீதியான பாதுகாப்பு இல்லாத மதம் சீரழியும், அப்படித்தான் உரிய அங்கீகாரமில்லாமல் காவல் இல்லாமல் இம்மத தலங்கள் இங்கே இப்படி சிறிய கும்பலின் கையில் சிக்கியிருக்கின்றன‌
காலம எல்லாவற்றுக்கும் ஒரு முடிவினை வைத்திருக்கும், ஜனநாயக காலத்தில் உரிய சட்டதிட்டங்களை இந்துமதத்துக்காக உருவாக்குவதான் முதல் அவசியம்
காலம் அதை செய்யும்
ஆனாலும் திருவண்ணாமலையில் நடக்கும் காட்சிகளை கண்டால் அந்த இடிபாடுகளை கண்டால் நாமெல்லாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோமா இல்லை கஜ்னி,லோடி, அப்சல்கான், அவுரங்கசீப் போன்றோர் ஆட்சி காலத்தில் வாழ்கின்றோமா என்பதுதான் தெரியவில்லை
பிரிட்டிகாரன் ஆட்சியில் கூட அவன் இந்துதலங்களை இடிக்கவில்லை, கைவைக்கவில்லை, காரணம் இந்துஸ்தான ஆட்சியினை பிடித்த அவன் மொகலாயம் எனும் பெரும் சாம்ராஜ்யம் வீழ காரணமே இந்து ஆலயங்களை இடித்ததே என அறிந்ததால் ஒதுங்கினான்
இங்கு அதையெலலம் அறியாமல் யாரோ எதையோ செய்ய முயன்று சில அதிகார பீடங்களும் அவர்களிடம் வீழ்ந்திருக்கின்றது
ஆனானபட்ட அவுரங்கசீப்பே செய்யமுடியாததை, பிரிட்டிஷ் அரசன் செய்யாததை சில பதர்கள் செய்துவிடலாம் என நினைத்தால் காலம் அவர்களுக்கு சிலவற்றை புரியவைக்கும்.
நன்றி : பிரம்ம ரிஷியார்
May be an image of 10 people
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...