Tuesday, November 21, 2023

தோற்றதற்கு... 10 காரணங்களை கூறலாம்.

 பேட்டிங்கில் நம்பர் 1

பவுலிங்கில் நம்பர் 1
இப்படி எல்லாம் இருந்தும்
அனைத்து லீக் போட்டிகள் மற்றும்
அரை இறுதி போட்டியில் தொடர்ந்து வென்றும்...
இறுதிப்போட்டியில் மட்டும் இந்தியா தோற்றதற்கு...
கீழ்க்கண்ட 10 காரணங்களை கூறலாம்.
பேட்டிங் :
1. பிட்ச் கண்டிஷன் புரியாமல், பந்தின் வேகம் தெரியாமல், ரோஹித் போன்று தானும் சிக்ஸர் அடிக்க முயன்று... ஆரம்பத்திலேயே உயரே தூக்கி அடித்து அவுட்டான கில்.
2. முதல் விக்கெட் விழுந்த பிறகும், எதிரே கோலி ஹேட்ரிக் பவுண்டரி அடித்து ரன் ரேட் 8 இருக்கும்போது... சிக்ஸர், ஃபோர் என்று மேலும் அடித்த பின்... ஒரு சிங்கிள் அடித்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யாமல் தொடர்ந்து 3வது பந்தையும் உயரே அடிக்க முயற்சி செய்த ரோஹித்தின் தேவையற்ற தவறான ஷாட். மீண்டும் மீண்டும் 47 ரன் போதுமென அவுட் ஆகும் ரோஹித்.
3. ஜென்யூன் பேட்டர் சூர்யகுமாருக்கு முன்னதாக ஜடேஜாவை இறக்கி சூர்யகுமாரின் பேட்டிங் திறனை குறைத்து மதிப்பிட்டு அவரின் தன்னம்பிக்கையை குலைத்த தவறான செயல்.
4. தன்னம்பிக்கை இன்றி வந்த சூரியகுமார்... ஓவரில் முதல் பந்தில் எல்லாம் சிங்கிள் எடுத்து ஷமி, பும்ரா, குல்தீப் போன்ற பவுளர்கள் வசம் பேட்டிங்கை தந்துவிட்டு, பொறுப்பான பேட்டர் ஆக ரன் அடிக்காமல் எதிர் முனையில் நின்று வெறுமனே வேடிக்கை பார்த்த பொறுப்பற்ற சூர்யகுமார்... ஸ்லோ பிட்சில் ஸ்லோ பாலில் கீப்பர்க்கு பின்னே தவறான ஷாட் அடிக்க தொடர்ந்து முயற்சி செய்ய... ஹேசல்வுட் அதே பந்தை மீண்டும் மீண்டும் அவருக்கு வீச... அதிலேயே அவர் அவுட் ஆன கேலியான செயல்.
5. சுமார் 26 ஓவர்கள் களத்தில் நின்று ஆடிய ராஹுல் ஜடேஜா சூரியகுமார் ஆகியோர் வெறும் 2 பவுண்டரி மட்டுமே ஆடி தேவையான ரன்களை அடிக்காமல் மிகவும் மந்தமாக ஆடியது.
பவுலிங் :
6. முதல் ஓவரில் வார்னர் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்ற இருவரும் பிடிக்காமல் விட பந்து தங்களுக்கு இடையே பவுண்டரி போனது கூட பரவாயில்லை... இருவேறு பந்தை கேட்ச் பிடிக்க முயற்சியே எடுககாதது கொடுமையாக இருந்தது. அது ட்ராவிஸ் ஹெட்டுக்கு அதிக நம்பிக்கையையும் ஊட்டத்தையும் கொடுத்திருக்கலாம்.
7. இதுவரையில்... இரண்டாம் ஓவரில் புதிய பந்தை வீசி அனுபவம் பெற்று இருந்த சிராஜுக்கு ஓவர் தராமல்... 8வது ஓவரில் வீசி அதிக விக்கெட்டுகளை எடுத்து பழக்கப்பட்ட ஷமிக்கு 2வது ஓவர் கொடுத்து... அதனால் அவருக்கு பால் அதிகமாக ஸ்விங் ஆகி பந்து ஒயிடு போவதும், கீப்பர் தாண்டி பவுண்டரி போவதும், ஓவர் ஸ்விங் ஆகி பேட்டில் படாமல் பந்து விலகிச்செல்வதும்... அதனால் அணிக்கு கிடைத்திருக்க வேண்டிய விக்கெட்கள் கிடைக்காமல் போனதும் நடந்து... நிறைய விக்கெட் எடுத்திருக்க வேண்டிய ஷமி 1 விக்கெட்டை மட்டும் எடுக்க... அவரின் ஓல்ட் பால் சீமிங் திறமை அணிக்கு கிடைக்காமல் போனது.
8. துவக்கம் முதல் 10 ஆட்டங்களில் தொடர்ந்து ஓபனிங் ஓவர் போட்டு இறுதிப்போட்டியில் தன் மீதான நம்பிக்கை போய் விட்டதை உணர்ந்த சிராஜ்... 17வது ஓவரில் பவுலிங் போட வந்ததால் அவரின் ஆரம்ப நியூ பால் ஸ்விங் திறமை நேற்று அணிக்கு பயனற்றுப் போனது. (இறுதிப்போட்டியில் திடீரென ரோஹித்தை ஓபனிங்கை விட்டு தூக்கி 5வது இடத்தில் இறக்கினால் எப்ப்டி இருந்திருக்குமோ... இதுவும் அப்படி இருந்தது)
9. வழக்கமாக மிடில் ஓவரில் விக்கெட் எடுக்கும் ஷமியும் இப்போது இல்லாத நிலையில்... ஸ்பின்னர்கள் இருவருமே மிடில் ஓவர் வீச அவர்கள் இருவருமே விக்கெட் எடுக்காதது பெரிய பின்னடைவு.
10. விக்கெட் எடுக்காத ஸ்பின்னர்கள் முழு ஓவர்களையும் வீசி முடித்திருக்க... விக்கெட் டேக்கிங் பவுளர்கள் பந்து வீசாமல் ஒதுக்கப்பட்ட நிலையில்... தக்க நேரத்தில் பவுலிங் சேஞ் செய்யாமல்... முதன்முதலில்... ரோஹித்திடம் ஒரு மோசமான கேப்டன்சியை இறுதிப்போட்டியில் நேற்று பார்க்க முடிந்தது.
May be an image of 1 person and text that says 'ROHIT 45 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் என்ன? இந்திய அணி'
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...