Monday, November 20, 2023

சிவாஜின்னா?

 இதுவரைக்கும் வந்த ஹீரோக்கள்ல நடிப்புல யாருப்பா டாப் ஹீரோ ?

சிவாஜிதான்ப்பா!
தமிழ்நாட்டுல யாருப்பா டாப்?
சிவாஜிதான்ப்பா
இந்தியாவிலே?
அதுவும் சிவாஜிதான்ப்பா?
உலகத்துல..அட அதுவும் சிவாஜி தான்பா.
பெரிய வசனங்களாக இருந்தாலும் அதை தங்கு தடை இல்லாம பேசறதல யாருப்பா டாப்பு?
சிவாஜிதானப்பா...
அதிகமா வேஷம் போட்டு நடிச்ச ஒரு நடிகரை சொல்லுப்பா?
சிவாஜி தவிர வேற யாரப்பா! ..
தமிழ் வந்து ஒரு மாநில மொழி,
அப்படி தமிழ்ல வெளியான ஒரு படம் வெளிநாட்டு விருது வாங்கியிருக்கா?
இது 1959லயே சிவாஜிசெஞ்சுட்டாருப்பா...
விருது வாங்குற படமா இருந்தா கமர்சியலா ஓடி இருக்காதேப்பா?
அந்தப் படம் கொட்டற மழை மாதிரி வசூல் செய்த படமப்பா! ..
சிவாஜி நடிப்ப புடிச்ச பல பெரிய நடிகர்கள் இருந்தா பேர சொல்லுப்பா?
நடிக்கிற எல்லா நடிகர்களும் சிவாஜியோட நடிப்பதாப்பா நடிக்கிறாங்க.
சிவாஜி படம் ஒரே மாதிரியா ,இல்லே, பல மாதிரியாப்பா?
ஒரே படத்துல பல மாதிரிப்பா!
சிவாஜி நடிச்ச நடிப்புல எதுப்பா பெஸ்ட் ?
அந்த வேஷத்தை அதுக்கு மேல யாரும் செய்ய முடியாது அப்படிங்கறதாப்பா பெஸ்ட் ...
சிவாஜிக்கு அடுத்தது யாரையாச்சும் சொல்ல முடியுமாப்பா ?
அப்படி யாரும் இல்லையேப்பா !...
கவர்மெண்ட்டு சிவாஜிக்கு நல்ல விருது கொடுத்திருக்காப்பா ?
நடிகர் திலத்தை விட நல்ல விருது வேறு எதுப்பா!..
இவ்வளவு காலமாகியும் சிவாஜியோட புகழ் எப்படியப்பா?
அது வருஷா வருஷம் கூடிகிட்டே தான் இருக்குதப்பா !...
சிவாஜி எந்த வேசத்தையாவது நடிக்க முடியாதுன்னு சொல்லி இருக்காராப்பா ?
இன்னும் நடிக்க வேண்டிய வேஷம் இருக்குன்னுதான் சொல்லி இருக்காரப்பா! ..
சிவாஜியோட நடிச்சு பேர் வாங்கின நடிகைகள் இருக்காங்களாப்பா ?
அவரோட நடிச்ச பின்னாடி தான் பேரே வாங்கினார்களப்பா !...
சினிமா பார்க்காதவங்க சிவாஜியோட படத்தை பார்த்திருக்காங்களாப்பா ?
அவரு நடிச்சதால தான் படமே பார்த்து இருக்காங்கப்பா!..
சிவாஜியோட பஞ்சுவாலிட்டிக்கு உதாரணம் ஒண்ணு சொல்ல முடியுமாப்பா?
சிவாஜி லேட்டா வந்து யாரும் பார்த்ததில்லையப்பா !...
சிவாஜி போட்ட மேக்கப்புல சுவாரஸ்யமான சம்பவம் ஏதாச்சு ஒண்ணு சொல்லுப்பா ?
பெத்த தாய்க்கு முன்னால பரதேசி வேஷம் போட்டுக்கிட்டு அம்மா கிட்ட பிச்சையா வாங்கி சாப்பிட்டாருப்பா .பெத்ததாய் கூட அப்ப அது யாருன்னு தெரியாம இருந்தாங்கப்பா.இதுக்கு மேல வேற என்னப்பா !...
சிவாஜி புராணப் படங்கள்ல நடிச்சதால தமிழ்படங்களுக்கு என்ன சிறப்பப்பா ?
சாமியே கும்பிடாதவனும் சாமியா நடிச்ச சிவாஜியை ரசிச்சானே! இது போதாதாப்பா!...
நடிப்புக்கு வேற பேரு இருக்காப்பா ?
அது சிவாஜின்னு மாறிப்போச்சேப்பா !...
சிவாஜியோட பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம் சொல்ல முடியுமாப்பா ?
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் நடிப்பை உலகறிய செய்தவர். மற்ற நடிகராக இருந்தால் அந்த காட்சியை கட் பண்ண சொல்லி இருப்பாங்களே... இப்படி பல சம்பவங்கள்.
தமிழ் சினிமானாலே பாட்டு தானே. பாட்டு இல்லாத படத்துல சிவாஜி நடிச்சிருக்காராப்பா?
படத்துல பல பாட்டுக்கள் இருந்தும் சிவாஜிக்கு பாட்டே இல்லாம கூட நடிச்சிருக்காருப்பா.
சிவாஜியோட அர்ப்பணிப்புக்கு ஒரு உதாரணம் சொல்ல முடியுமாப்பா ?
ஒரு சமயம் ஷூட்டிங்க்கு வந்தாரு சிவாஜி. அங்க இருந்தவங்க கிட்ட எல்லாம் சிரிச்சுகிட்டே வணக்கம் சொல்லிவிட்டு போனாரு. ரொம்ப சாதாரணமா வந்தாரு ,சாதாரணமா போனாரு. மேக்கப் ரூமுக்குள்ள போயிட்டு வந்ததுமே யாருகிட்டயும் ஒண்ணும் சொல்லாம மிடுக்கா கம்பீரமா நடந்து போனாரு.இதப் பாத்த ஒருத்தரு ,என்ன இவர் இப்படி இருக்கிறாரு? போறப்போ ஒரு மாதிரி , இப்ப வந்தப்போ வேற மாதிரி ,அப்படின்னு கேட்டு இருக்காரு, பக்கத்துல இருந்தவர் கிட்ட. அப்ப அவர் சொன்னாரு. மேக்கப் ரூம்குள்ள போறப்ப அவரு சிவாஜி. வெளிய வந்தார் இல்லையா. அப்ப அவரு இந்த படத்துல நடிக்கிற ஜமீன்தாரு.அதனால தான் அப்படி இருக்காரு ,அப்படின்னு கேள்வி கேட்டவருக்கு பதில் சொன்னார். பதில் சொன்னவர் யார் தெரியுமாப்பா ! நம்பியார் சாமிப்பா...
இந்த காட்சியில எப்படி சிவாஜி நடிச்சாரு அப்படிங்கறதுக்கு உதாரணமா ஒரு சம்பவத்தை சொல்ல முடியுமாப்பா ?
அப்போ வசந்த மாளிகை சூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அவங்க அம்மா ராஜாமணி அம்மா தவறிட்டாங்க. 16 வது நாள் காரியம் கூட முடியல. வீட்டில இருந்தா அம்மாவோட ஞாபகம் வந்துகிட்டே இருக்கு அப்படின்னு வசந்த மாளிகை சூட்டிங்ல கலந்துகிட்டாரு. அப்ப அவர் நடிச்ச காட்சி என்ன தெரியுமா. அது ஒரு பாட்டு ..மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன.? அப்படிங்கற காதல் பாட்டு ..அதுவும் ஊட்டி லொகேஷன்ல. அந்தப் பாட்ட பாரப்பா , உனக்கே புரியுமப்பா.
சிவாஜி நடிப்பில் என்னப்பா அதிசயம் ?
சிவாஜி நடிப்ப ரசிச்சு பார்த்தவனோட கண்ணு வேற எந்த நடிப்பையும் ரசிக்காது .இதைவிட வேற என்னப்பா !
May be an image of 2 people and text that says 'PYRAMID PYRAMID'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...