மெல்லிசை மன்னர்: மெல்ல திறந்தது கதவு படத்திற்காக நானும் ராஜாவும் கம்போசிங் உட்காரும் போது சும்மா ஒரு ஐடியா கொடுத்தாரு. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுன்னு “வான் மீதிலே இன்ப தேன் மாறி பெய்யுதே” பாடலை சொல்லி, “இந்த டியூன் மாதிரி இருக்கனும் ஆனால் இந்த சாயல் தெரிய கூடாது, இப்படி ஒன்னு பண்ணுவோம் அண்ணே...” என்று சொல்ல, வான் மீதிலே வார்த்தையை “வா வெண்ணிலா தா நனானே தானனானே தானனேனே” என்று டியூன் அமைக்க உருவானது தான் “வா வெண்ணிலா உன்னை தானே” பாடல்... இந்த பாட்டை பொறுத்த வரை நான் அழகான பிள்ளையை பெற்று கொடுத்தேன். அதுக்கு நல்லா அலங்காரம் மூக்குத்தி பவுடர் அடிச்சி கொண்டை சட்டை எல்லாம் போட்டு கொடுத்தது ராஜா...”




No comments:
Post a Comment