Thursday, November 23, 2023

தண்டிக்கப்பட்ட நீதி.

 பொதுவில் நம் இந்திய புராணங்களில் வேண்டும் நீதி கண்டுகொள்ளலாம், இப்ப டித்தான் என்ற வரையறை காண இயலாது என்பார்கள். இன்னும் மனுநீதி, சானக்கிய நீதி என்றெல்லாம் உண்டு.

இதில் சாணக்கிய நீதி என்பது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டு வஞ்சகச் செயல்களையே பிரதானமாகப் பேசும் நூல்.
இங்கு மகாபாரதத்தில் ஏகலைவன் கதைப் படலம் உண்டு. இன்றுவரை எனக்கு இந்த கதையில் துரோணர் கண்ட நீதி மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.
பிரசங்கம் செய்வோர் எல்லாம் ஒரே கணக்கில் அர்ஜுனனுக்கு எதிராக வரக்கூடிய செயல்பாடுகளை தந்திரமாக முன்கூட்டியே தவிர்க்க வைக்கும் யுக்தியாகத் தான் பேசுவார்கள். கர்ணனை வஞ்சித்தால் அது அவர்கள் சார்புள் ளவன்.
ஏகலைவன் எதில் சேர்ந்தவன். சாதாரண வேடன். துரோணரின் தீரம் கண்டு அவரை மானசீக க் குருவாக உண்மையாக நல்லு ணர்வோடு ... அந்த வில் வித்தை கைவரப் பெறுகிறான்.
இந்த இடத்தில் அவனுக்கிருந்த உண்மையான குருபக்தி உன்னதம் மிகுந்தது. காரணம் சத் திரியார் குலம் தவிர மற்றவர் கற்க உரிமையில்லை.
சிறந்த குரு அதைத் தெளிய அறிந்து என்ன செய்திருக்கணும்.. பாராட்டியிருக்கணும், அல்லது தான் சொல்லும் வரை அந்த வித்தை காட்டக் கூடாது என்ற கட்டளை பிறப்பித் திருக்கலாம்.
மாறாக இவன் அதைக் கற்றுக்கொள் வதா என அகங்காரம் கொண்டு கட்டை விரல் தானம் வஞ்சகமாக கேட்டாரே...
துரோணர் என் பார்வையில் மிகவும் கீழே இறங்கி விட்டார்.
இது எதனால்? வர்ணாசரமா தர்மம் அந்த அளவில் கேடு நிறைந்த தாகத் தான் பார்க்க முடிகிறது.
இன்னொரு கேள்வியும் உண்டு? இந்தக் கதையே அவசியமற்றது.
துரோணர் வாழ்வில் நடந்த சம்பவமோ?
எப்படியாயினும் இங்கு தர்மம் தண்டிக்கப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...