Monday, November 27, 2023

இது தான் நீங்கள் வாழப் போகும் வாழ்க்கை:

 1. நம் கூட கடைசி வரை வாழ்பவர்கள் நமக்காக கடைசி வரை வாழ்வது இல்லை.

2. நம் விருப்பப்படி எந்தப் பாதைக்குப் போனாலும் கடைசியில் நமக்கென்று விதிக்கப்பட்ட பாதைக்குத் திரும்பத் தான் வேண்டும்.
3. பெற்ற பிள்ளைகளிடம் பாசம் வைக்கத் தான் முடியும். பாசத்தை எதிர் பார்க்க முடியாது...
4. பிள்ளைகள் பாசம் கிடைத்தால் சந்தோஷம்... கிடைக்காவிட்டால் வருத்தப்படாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
5. இனிமையான பக்கத்தை மட்டுமே காட்டிப் பழகுபவர்கள் நண்பர்கள்..
6. இனிமையாகவும் கொடுமையாகவும் பழகுபவர்கள் தான் உறவினர்கள்..
7. யாரையும் வருத்தப்பட வைக்காமல் வாழ்ந்து விட முடியாது.
8. நம் பெற்றோருக்கு நாம் செய்த நல்லது கெட்டது அனைத்தும் நம் பிள்ளைகள் நமக்கு செய்தே தீருவார்கள்.
9. நாம் விரும்பியவர்களிடம் இருந்து நாம் விரும்பாத நேரத்தில் அன்பு கிடைக்கும் .
10. லைஃப் பார்ட்னரோ அல்லது பிசினஸ் பார்ட்னரோ நேர்மையானவர்களுக்கு துணையால் ஏமாற்றம் தான் கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...