ஆட்சி மாற்றம் நடந்த நாளில் இருந்து திமுகவின் முக்கிய புள்ளிகள் நில மோசடி உள்ளிட்ட பல விதமான வழக்குகளில் கைதாகி வருகிறார்கள். இது ஒரு அரசியல் பழிவாங்குதல் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டவர் வடிவேலு. வடிவேலுவின் பேச்சைக் கேட்க அலையென தமிழகமெங்கும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்தனர். ஆனால் வடிவேலு எதிர்பார்த்தது தான் நடக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான போது, வடிவேலுவின் கதி என்னவாகும் என்றே பரவலாக பேசப்பட்டது. இதனால் பட வாய்ப்புகளும் அவருக்கு இல்லாமல் போனது.
இப்போது வடிவேலுவை நோக்கியும் ஒரு நில மோசடி வழக்கு பாய்ந்துள்ளது! வடிவேலுவிடம் விசாரணை நடத்த போலீசார் தேடுகிறார்கள். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிய வில்லை. மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. சிங்கமுத்துவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பழனியப்பன் ஏலத்தில் எடுத்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுபற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது என்று சொன்னார்.
நிலத்தை அபகரித்தது உண்மை என்று தெரிய வந்தால் வடிவேலுவும் அவரது மனைவியும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment